Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:
##~##

• அணு சக்திப் பயன்பாட்டுக்கு முன்னுதாரணமாக ஜப்பான் சொல்லப்பட்டது ஒரு காலம். இப்போது ஜப்பான் அணு சக்தியே இல்லா தேசம்! டோமாரி அணு மின் நிலையத்தில் இயங்கிவந்த மூன்றாவது அணு உலையைக் கடந்த வாரம் மூடியதன் மூலம் தற்காலிகமாக அணு சக்தி இல்லா நாடாக மாறி இருக்கிறது ஜப்பான். ஃபுகுஷிமா அணு உலை விபத்துக்குப் பிறகு, அணு உலைகளில் சுனாமியை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்தும் நோக்கிலேயே ஜப்பான் அரசு அணு உலைகளை மூடிவருகிறது. ஆனால், மூடப்பட்டுள்ள அணு மின் நிலையங்களை மீண்டும் தொடங்க, ஜப்பானிய நடைமுறைப்படி, அந்தந்த உள்ளாட்சி நிர்வா கங்களின் அனுமதி அவசியம். மக்கள் அணு சக்தி இல்லாத ஜப்பானை  வரவேற்கும் வகையில் ஊருக்கு ஊர் பேரணிகளை நடத்திவரும் சூழலில், நிரந்தரமாகவே ஜப்பான் அணு சக்திக்கு விடை கொடுத்துவிட்டதாக எடுத்துக்கொள்ளலாம் என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். ஃபேர்வெல் கொண்டாடுங்க!

• ஐரோப்பிய சீஸனில் ஹாட்ரிக் கோல் உட்பட 68 கோல்களை அடித்து முத்திரை பதித்திருக்கிறார் பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி. 9 ஹாட்ரிக் சாதனைகள். இதற்கு முன் ஜெர்டு முல்லர் 67 கோல்கள் அடித்ததே சாதனை. முல்லரின் 39 வருடச் சாதனையை முறியடித்திருக்கும் மெஸ்ஸிக்கு, அடுத்த இடத்தை ரியல் மாட்ரிட் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 57 கோல்களுடன் பிடித்திருக்கிறார். இது ரியல் கோலாட்டம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இன்பாக்ஸ்

• அஜீத்-விஷ்ணுவர்தன் கூட்டணி மீண்டும் இணைகிறது. ஒரு கோடி சம்பளத் தில் ஹீரோயினாக நயன்தாரா. ஆர்யாவும் படத்தில் உண்டாம். அஜீத் நடிக்கும் படத் தில் அவருக்கு என்ன வேலை? அவர் தான் வில்லனாம். வில்லன் கடத்தினாலும் நயன்தாராவுக்குக் கொண்டாட்டம்தான்!  

இன்பாக்ஸ்

• டல் சீஸனுக்கு மத்தியில் கேரளத்தில் 'ஆர்டினரி’ படம் மெகா ஹிட் அடித்திருக்கிறது. ஒரு பஸ்... ஒரு கண்டக்டர்... ஒரு டிரைவர்... சில பயணிகள். இவ்வளவுதான் படம். கலகல காமெடி... பரபர ட்விஸ்ட் கலந்து கவனம் ஈர்த்திருக்கிறார் அறிமுக இயக்குநர் சுகீத். பட்ஜெட்

இன்பாக்ஸ்

2 கோடி... கலெக்ஷனோ

இன்பாக்ஸ்

20 கோடியாம். தமிழுக்கு ஒரு 'சாதா’ பார்சல்!

இன்பாக்ஸ்

• உத்தரப்பிரதேச மாநில ஃபதேபூரைச் சேர்ந்த போலீஸ் கான்ஸ்டபிள் ஹரிச்சந்திராவின் கோரிக்கை மனு, ஜனாதிபதி அலுவலகத்தையே அதிரவைத்தது. 'நான் தற்கொலை செய்துகொள்ள இந்திய அரசு சட்டப்பூர்வமாக அனுமதிக்க வேண்டும்’ என்பதே அந்தக் கோரிக்கை. ''சீனியர் அதிகாரிகளின் அதீத டார்ச்சர் காரணமாக 35 வயதிலேயே முடி கொட்டி, பார்வை மங்கி பலவீனமாகிவிட்டேன். எனக்கு வாழவே பிடிக்கவில்லை. அதனால்தான் இந்த முடிவு'' என்கிறார் ஹரிச்சந்திரா. அதற்கு ஃபதேபூர் மாவட்ட எஸ்.பி-யான சதுர்வேதி, ''ஒருவர் தன் வாழ்க்கையை முடித்துக்கொள்ள அனுமதிப்பதற்கு எல்லாம் சட்டத்தில் இடம் இல்லை. தாமாகவே ரயில் தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்துக்கொண்டு சாகலாம். அதற்குக் கட்டணம் எதுவும் கிடையாது'' என்று 'ஐடியா’ சொல்லி, கண்டனங்களைச் சம்பாதித்துக்கொண்டு இருக்கிறார். கடைக்கோடி காவலர்கள் எல்லாரும் விளிம்பு நிலை மனிதர்கள்தான்!  

• தெலுங்கில் ஜூனியர் என்.டிஆர். நடித்து சூப்பர் ஹிட்டான 'பிருந்தாவனம்’ பட தமிழ் ரீ-மேக்குக்கு எக்கச்சக்க போட்டி. ஆனால், தனது மகன் சண்முகப்பாண்டியனுக்காக அதைக் கப்பென்று லபக்கிவிட்டார் விஜயகாந்த். விஜய காந்தின் கேப்டன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனமே படத் தைத் தயாரிக்கிறது. தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடித்தது காஜல் மற்றும் சமந்தா. ஜூனியர் கேப்டன்கூட நடிக்க அவங்க ஓ.கே. சொல்லிட்டாங்களா?

இன்பாக்ஸ்

• ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை முன் வழுக்கை யுடன் காணப்பட்ட நரேந்திர மோடிக்கு, இப்போது போனி டெய்ல் போடும் அளவுக்கு முடி வளர்ந்திருக்கிறது. காரணம், ஹேர் இம்ப்ளான்டேஷன் சிகிச்சை. பங்கேற்கும் விழாக்களில் கூச்சப்படாமல் அடிக்கடி சீப்பால் தனது கேசத்தை சீவிக்கொள்கிறார் மோடி. இவர் பண்ற எல்லாமே மோடி வித்தைதானோ?!  

• பிரணாப் முகர்ஜியைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் சீனியர்கள் பலரும் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி என பவர் பாலிடிக்ஸ் லாபியில் ராகுலை நெருக்குகிறார்களாம். இதனால், ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக கவர்னர் பதவி களை மாற்றியமைக்கத் திட்டமிடுகிறது 10, ஜன்பத் சாலை. இப்பவே பஞ்சாயத்து பாலிடிக்ஸ்ல சிக்கிட்டார் ராகுல்!

• மார்பகப் புற்றுநோயைக் கண்டறிய இனி, எளிய ரத்தப் பரிசோதனை போதும் என்கிறார் லண்டனைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஜேம்ஸ் பிளானகன். ஒரு பெண்ணின் ரத்தத்தில் இருக்கும் வெள்ளை அணுக்களில் 'மிதைலேடன்’ அதிகமாகக் காணப்பட்டால், அந்தப் பெண்ணுக்கு மார்பகப் புற்றுநோய் உருவாவதற்கான சாத்தியம் இரண்டு மடங்கு அதிகம் என்பது இவருடைய ஆய்வின் முடிவு. புற்றுக்கு வைப்போம் ஒரு முற்று!

இன்பாக்ஸ்

• அமெரிக்க முன்னாள் அதிபர் கிளின்டன் பாணி கசமுசா சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் அதிபர் ஒபாமா. ஆஸ்திரேலிய தூதரின் மகள் ஜெனிவி குக், ஒபாமாவின் சுயசரிதையை எழுதிவருகிறார். அதில், '1980-ல் நியூயார்க் கில் இருந்தபோது மூன்று ஆண்டுகள் மூத்தவளான என்னை ஒபாமா காதலித்தார். எங்களுக்குள் எல்லாம் நடந்திருக்கிறது’ என்று வாலன்ட்டியராகத் தகவல் மழை பொழிந்திருக்கிறாராம். 'மாற்றம் வேண்டும்’னு சொன்னீங் களே எஜமான்!

இன்பாக்ஸ்

• தென்னிந்திய நடிகைகளில் இலியானாவுக்குத்தான் ட்விட்டரில் டாப் மவுசு. ஒண்ணேகால் லட்சத்தைத் தாண்டித் துடிக்கிறது ஃபாலோயர்ஸ் பட்டியல். இரண்டாமிடம்... அனுஷ்கா... த்ரிஷா... தமன்னா?! நம்புங்கள் மக்களே... ஒரு லட்சம் ஃபாலோயர்ஸைத் தாண்டி ஹிட் அடிப்பது டாப்ஸி. ஒல்லி பெல்லிக்கும் வெள்ளாவிக்கும் ரேஸ்!

• இலங்கையின் கல்வித் திட்டத்திலும் தலை நுழைத்துவிட்டது சீன டிராகன். இனி, இலங்கை பள்ளிகளில் சீன மொழியும் கற்றுத்தரப்படும். 'இலங்கை - சீன நட்புறவை மேலும் வலுப்படுத்திக்கொள்ளவே இந்த நடவடிக்கை. சீன மொழி கற்பிக்கத் தேவையான மனிதவளம் மற்றும் அதற்கான செலவுகளை சீனாவே வழங்க முன்வந்து உள்ளது’ - இது இலங்கை கல்வித் துறை அமைச்சர் பந்துல குணவர்த்தனவின் பெருமித அறிவிப்பு. ஆப்பைத் தேடிப் போய் உக்கார்றாங்களே!

இன்பாக்ஸ்

• எழுபதுகளில் அமிதாப்புடன் அதிகம் கிசுகிசுக்கப்பட்ட நடிகை ரேகா! பாலிவுட்டின் சென்ற தலைமுறை கனவுக் கன்னியான ரேகா, தற்போது மாநிலங்கள் அவைக்குத் தேர்வாகி இருக்கிறார். நாடாளுமன்றத்தில் ரேகாவின் இருக்கைக்கு அருகில் அமைந்திருக்கும் இருக்கை அமிதாப்பின் மனைவி ஜெயா பச்சன். தகவல் தெரிந்ததும் பதறிப்போன ஜெயா, பகிரங்க கோரிக்கை வைத்து வேறு இருக்கை தாவி இருக்கிறார். இது அரசியல் கிசுகிசுவா... சினிமா கிசுகிசுவா?    

• ஒலிம்பிக் வரலாற்றில் முதல்முறையாக பேட்மின்டன் இரட்டையர் பிரிவில் விளையாடத் தகுதிபெற்று இருக்கிறது இந்தியா. ஜுவாலா கட்டா, அஷ்வினி பொன்னாப்பா இணையே அந்தச் சாதனை ஜோடி. 2010 டெல்லி காமென்வெல்த் போட்டியிலும் இதே ஜோடிதான் தங்கம் தட்டியது. டெல்லி சாதனையை ரீ-மேக் பண்ணுங்க!

• கடந்த வாரம் டெல்லி வந்த ஐ.நா. சபைப் பொதுச் செயலர் பான் கீ மூன், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார். ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு விவகாரங்கள், சிரியாவின் உள்நாட்டுப் போர் என உலக விவகாரங்கள் அனைத்தைப் பற்றியும் மனம் திறந்து விவாதித்த இருவரும் இறுதி வரை இலங்கை நிலவரம்பற்றி ஒரு வார்த்தைகூடப் பேசவில்லையாம். இதுக்குப் பேரும் அரச தீவிரவாதம்தான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism