Published:Updated:

இன்று... ஒன்று... நன்று...!

இன்று... ஒன்று... நன்று...!

பிரீமியம் ஸ்டோரி

வணக்கம் நான் பாரதி கிருஷ்ணகுமார்,

 உலகம் முழுக்க 22 கோடி குழந்தை உழைப்பாளிகள் இருக்கிறார்கள் என்ற செய்தி திடுக்கிடவைக்கிறது. நம் தேசத்தில் 1.5 கோடி குழந்தைகள் அவ்விதம் இருக்கிறார்கள். குழந்தைகள் விரும்பி விளையாடும் ஓர் உலகத்தைக் கொண்டுவருவது எப்படி?

2004 டிசம்பர் 26-ம் தேதி காலை 8 மணி ஆரவாரத்துடன் வங்கக் கடல் கரையேறி வந்தது. சுனாமி என அதன் பெயர் பிறகுதான் தெரிந்தது. கட்டிப்போடப்பட்டு இருந்த விலங்குகள் தவிர, பறவைகளும் விலங்குகளும் இருப்பிடத்தைக் காலி செய்து வேறு இடம் தப்பிப் போயிருந்தன எனப் பிறகு வந்த ஆய்வு சொல்லியது. ஆறறிவு இருப்பதாகப் பெருமைப் பட்டுக்கொள்ளும் நாம் அகப்பட்டுக்கொண்டோம். இயற்கையோடு இணைந்து வாழாத வாழ்க்கை எப்படி இருக்கும்? அதையும் சொல்கிறேன்.

இன்று... ஒன்று... நன்று...!

நதி தானே தண்ணீர் அருந்துவது இல்லை. சூரியன் தனக்கென ஒளிர்வது இல்லை. பிறர்க்கென வாழ்வதுதான் இயற்கையின் சிறப்பு அம்சம். ஞான மரபில் பூமியைத் தாய் எனவே குறிப்பிடுவோம். அத்தகைய பூமியை, இயற்கையைக் காப்பது எப்படி? அதன் மூலம் நம்மைக் காப்பாற்றிக்கொள்வது எப்படி?

ஒரு சமூகத்தின் மேன்மைக்கு நமது சமூகத்தின் ஒற்றுமை எப்படி முக்கியமானது? ஒரு பஞ்சாலைக்குப் போயிருந்தபோது பார்த்த ஆச்சர்யம் மனதில் நிற்கிறது. 180 பருத்தி இழைகள் தனித்தனியாகப் புறப்பட்டு ஒன்று சேர்ந்து ஆடையாக உருவெடுக்கிறது. ஓடுகிற ஓர் இழை இல்லாமல்போனாலும், எங்கே பிரச்னை எனச் சொல்லிக் காட்டி இயந்திரம் நின்றுபோகிறது. நாமே உருவாக்கிய இயந்திரத்தின் பாடம்கூட நமக்குத் தெரியாமல்போனது எவ்விதம்?

17.05.12 முதல் 23.05.12 வரை 044-66808034 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுங்கள். நான் சொல்லவும் நீங்கள் கேட்கவும் நிறையவே உண்டு!

அன்புடன்,
பாரதி கிருஷ்ணகுமார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு