Published:Updated:

இன்று... ஒன்று... நன்று...!

இன்று... ஒன்று... நன்று...!

இன்று... ஒன்று... நன்று...!

இன்று... ஒன்று... நன்று...!

Published:Updated:

வணக்கம் நான் ஜி.வி.பிரகாஷ் பேசுறேன்...

 சிலருக்குப் பரிமாறப் பிடிக்கும். பலருக்குப் பசியாறப் பிடிக்கும். இசைபற்றிய விஷயங்களும் அதில் அடக்கம். மனசை லேசாக்குகிற இசைபற்றிப் பேசுவோமா?

இன்று... ஒன்று... நன்று...!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நமக்கு எல்லாம் பிடிச்சது மெலடி. எனக்கு ரொம்பவும் பிடிச்ச மெலடி மன்னன் ஒருத்தரைப் பத்திப் பேசப்போறேன். உங்க நினைவைப் புரட்டினால் 'அடடா, அவரா?’னுயோசிக்க வைக்கும். இன்னும் சில பாடல் வரிகள்கூட மனதில்கூடு கட்டும். அதை உங்களுக்குச் சொல்றேன்.

இங்கே இசையில் வெரைட்டின்னா ராஜா சார், ரஹ்மான் சார்னு சட்சட்டுனு மனசில் பிடிபடும். இந்தியிலும் அப்படி ஒருத்தர் இருக்கார். அவர் சின்ன வயசில் இருந்தே ஜீனியஸ். ஒன்பது வயசில் அவர் போட்ட டியூன் பாட்டா உருமாறியிருக்கு. அவர் போட்ட பெரும்பாலான டியூன்கள் வேற வேற திசையில் பயணம் செஞ்சிருக்கு. ஒண்ணுக்கொண்ணு சம்பந்தம் இல்லாத இசைக் கோவையில் நம்மளைத் திகைக்கவெச்சிருக்கார். அந்த ஜீனியஸ் யாருன்னு உங்களுக்கு இசைபடச் சொல்றேன்.

எல்லோருக்கும் ஜி.வி.பிரகாஷ் யாருன்னு ஓரளவுக்காவது தெரியும். நான் சினிமாவுக்கு, அதுவும் இசையமைப்பாளரா வந்த கதை தெரியுமா? ஒவ்வொருத்தருக்கும் அவங்க அவங்க இடம் உறுதியாவது எப்படி? ஷங்கர் சார் எனக்கு முதல் செக் கொடுக்கும்போது என்ன சொன்னார்? தொடர்ந்து இடத்தைத் தக்கவெச்சுக்கிறது எப்படி? நான் பாடம் படிச்சதை உங்களுக்கும் சொல்றேன். என்னோட ரசிகர் களைப் பத்தியும் நான் பேசுறேன்.

என்னுடைய இன்ஸ்பிரேஷன் பல நல்ல டைரக்டர்களின் நட்பு. அவங்க கதையில மனசு லயிக்கப் போட்டதுதான் நீங்க பாராட்டுகிற டியூன் எல்லாம். நான் சில காலமாக சில நல்ல டைரக்டர்களின் அன்புப் பிடியில் இருக்கேன். அவங்ககிட்ட பணிபுரிகிறது எப்படி இருக்கும்? ஒரு டியூன் பாடலாக உருவாகிற விதத்தைக்கூட சொல்றேன். உங்களின் விருப்பத்துக்காக பாடியும் காட்டுறேன்.

ரீ-ரிக்கார்டிங், ரீ-ரிக்கார்டிங்னு ஒரு சங்கதி சினிமாவில் இருக்கு. படத்துக்கு ஜீவன் அதில் இருந்துதான் வரும். ரீ-ரிக்கார்டிங்னா எனக்கு மனசில் வர்றவர் பற்றி உங்களுக்குச் சொல்லப்போறேன்.

எல்லாம் சரி, மியூஸிக் ஏன் கேட்கணும். இசை நம்மில் என்னென்ன மாற்றங்களைக் கொண்டுவரும்? எல்லாத்தையும் உங்களுக்குச் சொல்றேன்.

31.5.12-ம் தேதியில் இருந்து 6.6.12 தேதி வரைக்கும் 044-66808034 என்ற நம்பர்ல கூப்பிடுங்களேன். இசை பேசலாம்!

இன்று... ஒன்று... நன்று...!

அன்புடன்
ஜி.வி.பிரகாஷ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism