Published:Updated:

மிஸ் யூ தலைவா!

சார்லஸ்படங்கள் : என்.விவேக்

மிஸ் யூ தலைவா!

சார்லஸ்படங்கள் : என்.விவேக்

Published:Updated:
##~##

த்திரி வெயிலைவிட அதிகம் அனல் கிளப்பியது இந்த வருடம் ஐ.பி.எல். லீக் போட்டிகளில் தொடர்ந்து மண்ணைக் கவ்வி, மற்ற அணிகளின் தோல்விகளால் அடுத்த சுற்றுக்குள் நுழைந்து, பிறகு மும்பை, டெல்லி அணிகளைப் புரட்டி எடுத்து, இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது சென்னை சூப்பர் கிங்ஸ். முதல் நான்கு ஐ.பி.எல். சீஸனிலும் கைப்புள்ள கணக்காகக் கதறித் திரிந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ், இந்த முறை அதிரடி ஆட்டம் ஆடி ஐ.பி.எல். கோப்பையை வென்றது.

• டெல்லி அணியில் இருந்து கழற்றிவிடப்பட்டதால், சென்ற ஆண்டு கொல்கத்தா அணிக்கு மாறிவந்தவர் கௌதம் காம்பீர். கங்குலி, ரிக்கி பாண்டிங், மெக்கல்லம் என கொல்கத்தா அணியின் கேப்டன் குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது காம்பீரின் வருகை. அவரின் தெளிவான அணுகுமுறையே கொல்கத்தா அணியின் வெற்றிக்கு முதல் காரணம். ''எந்தத் தனிப்பட்ட வீரரும் முக்கியம் இல்லை. அணியின் வெற்றிக்காக விளையாடியவர்களைத் தனியாகப் புகழ்ந்து அவர்களைக் கூடுதல் பிரஷரில் தள்ள நான் விரும்பவில்லை'' எனத் தொடர் முடியும் வரை அமைதி காத்து, கோப்பையையும் கைப்பற்றிவிட்டார் கௌதம் காம்பீர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மிஸ் யூ தலைவா!

• 16 லீக் போட்டிகளில் 10 போட்டிகளில் வெற்றி பெற்ற அணி கொல்கத்தா. இந்த அணி தொடர்ந்து வெற்றிகளைப் பெற முக்கியமானவர் சுனில் நரீன். மேற்கு இந்தியத் தீவுகளைச் சேர்ந்த சுனில் நரீனின் தந்தை, சுனில் கவாஸ்கரின் தீவிர ரசிகர். அதனால்தான் நரீனுடன் சுனில் என்கிற பெயர் சேர்ந்ததாம். மொத்தம் 15 போட்டிகளில் விளையாடி 24 விக்கெட்டுகளைச் சாய்த்திருக்கிறார் சுனில் நரீன். கூக்ளி, கேரம் பால்களுக்கு இடையில் சுனில் நரீனின் 'நக்கில் பந்து’தான் இந்த ஐ.பி.எல்-லின் ஹைலைட். 'நக்கில் பந்துகள்’ பொதுவாக பேஸ்பால் விளையாட்டில் வீசப்படுபவை. காற்றிலேயே ஸ்பின்னாகும் இந்தப் பந்து, எங்கே பிட்ச் ஆகும் என்பதைக் கணிப்பது சிரமம். இந்த வகைப் பந்துகளை வீசித்தான் டெண்டுல்கர், டோனி, ரெய்னா எனப் பல படா விக்கெட்டுகளை வீழ்த்தினார் சுனில் நரீன்.

மிஸ் யூ தலைவா!

• கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றிக்கு இன்னொரு முக்கியக் காரணம், கௌதம் காம்பீரின் பேட்டிங். 17 போட்டிகளில் 6 அரை சதம் உட்பட மொத்தம் 590 ரன்களை விளாசினார் காம்பீர். 20/20 போட்டிகளுக்கே உரிய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் நின்று நிதானமாக ஆடியதுதான் காம்பீரின் ரன் ஸ்கோர் மளமளவென உயரக் காரணம்.

மிஸ் யூ தலைவா!

• இறுதிப் போட்டியில் சென்னை பௌலர்களின் பந்துகளைச் சிதறவிட்ட மன்விந்தர் பிஸ்லா, கடந்த ஆண்டு ரஞ்சிக் கோப்பையில்கூட விளையாட வாய்ப்பு கிடைக்காமல் வங்கதேச லீக் போட்டிகளில் விளையாடியவர். டோனியும் பிஸ்லாவும் ஒன்றாக ஏர் இந்தியா அணிக்காக விளையாடியவர்கள். இருவருமே விக்கெட் கீப்பர்கள்!

• ஐ.பி.எல். போட்டிகளுக்கே உரிய வகையில் இந்த முறையும் மைதானத்தில் நடந்ததைவிட வெளியே நடந்தவைதான் அதிகம். ஸ்டேடியத்தில் தடையை மீறி தம் அடித்தது, பாதுகாவலரிடமும் மும்பை கிரிக்கெட் சங்க நிர்வாகிகளிடமும் தகராறு செய்தது என ஷாரூக் கான் ஒரு பக்கம் சர்ச்சைகளில் சிக்க, பெங்களூரு வீரர் லூக் போமர்ஸ்பக் பாலியல் புகாரில் சிக்கியது, மேட்ச் ஃபிக்ஸிங் புகாரில் ஐந்து வீரர்கள் சஸ்பெண்ட் செய்யப் பட்டது என அடுத்தடுத்து எழுந்த சர்ச்சைகளால் பரபரப்பானது ஐ.பி.எல். மேட்ச் ஃபிக்ஸிங், செக்ஸ் குற்றச்சாட்டுகளை அமுக்கவே ஷாரூக் கான் விவகாரம் எழுந்ததாகவும் சொல்லப்படுகிறது.

மிஸ் யூ தலைவா!

• பெங்களூரில் மும்பை அணியை வீழ்த்திவிட்டு, சென்னை வீரர்கள் விமானம் மூலம் சென்னை வந்தனர். விமானப் பயணிகளின் லிஸ்ட்டில் சென்னை வீரர் ஒருவரின் பெயர் மட்டும் மிஸ்ஸிங். 300

மிஸ் யூ தலைவா!

கி.மீ. பைக்கிலேயே பறந்து சென்னை வந்து சேர்ந்த அந்த வீரர்... கேப்டன் டோனி.

• வெற்றி பெற்றதும் கங்குலிபோல டி- ஷர்ட்டைக் கழற்றினார் கௌதம் காம்பீர். ஆனால், அவர் கழற்றியது 'சாம்பியன்ஸ் 2012’ என்று எழுதப்பட்டு சுடச்சுடத் தயாராகி வந்த புத்தம் புது டி-ஷர்ட்டை அணிவதற்கு!

• ஆட்டம் முடிந்ததும் டோனி மைதா னத்தை அ

மிஸ் யூ தலைவா!

ணி வீரர்களுடன் வலம் வந்து எல்லோருக்கும் நன்றி சொன்னார். 'மிஸ் யூ தலைவா, சாம்பியன்ஸ் லீக்கில் பார்த்துக்கலாம்’ என டோனியை உற்சாகப்படுத்தினார்கள் சென்னை ரசிகர்கள்.

• சியர் லீடர்ஸ்களையும் தாண்டி சென்னை ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் டோனியின் மனைவி சாக்ஷி. ஒவ்வொரு போட்டிக்கும் ஒவ்வொரு டிரெஸ்கோடில் வந்து அசத்தினார் சாக்ஷி. பார்பி கேர்ள், ஏஞ்சல் டிரெஸ் என விதவிதமான தீம்களில் உடை அணிந்துவந்து கலக்கினார். டோனிக்காக சென்னையை சப்போர்ட் செய்த சாக்ஷி, படித்தது, வளர்ந்தது எல்லாம் கொல்கத்தா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism