Published:Updated:

கடவுளின் தேசம் சாத்தானின் கையில்!

எஸ்.ஷக்தி

கடவுளின் தேசம் சாத்தானின் கையில்!

எஸ்.ஷக்தி

Published:Updated:
##~##

'கிரிமினல்களின் தேசமாகிறதோ கடவுளின் தேசம்!’ - கேரளம்பற்றி சமீபத்தில் வந்த ட்வீட் இது.

 கேரள ஆல்பத்தைச் சற்றே பின்னோக்கிப் புரட்டிப் பார்த்தால், கடந்த சில வருடங்களில் மட்டும் அதிரடிக் கொலைகள், அதிர்ச்சி விவகாரங்கள் புகைப்படங்க ளாக வந்துவிழுகின்றன. 'கொலை செய்யத் தூண்டுபவர்களும் கொலை செய்பவர்களும் அதிகரித்துவரும் கேரளத்தில் வசிப்பதற்கே எனக்குத் தயக்கமாகவும் அச்சமாகவும் இருக்கிறது’ என்று தனது 'தி கம்ப்ளீட் ஆக்டர்’ என்று வலைதளத்தில் நடிகர் மோகன்லால் எழுத, கேரளம் எங்கும் பரபரப்பு. அவரை இப்படி எழுதத் தூண்டி யது சமீபத்தில் கோழிக்கோடு அருகே நடந்த ஒரு குரூரக் கொலை. ஒஞ்சியம் பகுதியைச் சேர்ந்த டி.பி.சந்திரசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் ஆக்டிவ் உறுப்பினராக இருந்தவர். உட்கட்சிப் பிரச்னையால் அதில் இருந்து விலகி, புரட்சிகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் என்கிற அமைப்பில் செயல்பட ஆரம்பித்தார். சமீபத்திய பகல்பொழுது ஒன்றில் அவரை ஒரு கும்பல் நடுரோட்டில் மகா கோரமாக வெட்டிக் கொன்றது. முகத்தில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட வெட்டுகள். இந்தப் பகீர் கொலையால் ஆடிப்போனது கேரளம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கடவுளின் தேசம் சாத்தானின் கையில்!

கட்டஞ்சாயாவில் ஆரம்பித்து கட்சிப் பதவி வரை எந்த ஒரு சிறு உரசலுக்கும் கத்தியைக் கையில் எடுக்கும் அளவுக்கு கேரளத்தில் மனநிலை மாறியிருப்பதை அங்குள்ள பத்திரிகை நண்பர்களே ஒப்புக்கொள்கிறார்கள். ''காசர்கோடு பக்கம் கொஞ்ச நாளைக்கு முன்னாடி டீக்கடையில் சில பசங்க பழ பஜ்ஜி கேட்டிருக்காங்க. ரெண்டு பஜ்ஜியில் பாதிப் பாதி பழம்தான் இருந்திருக்கு. வாக்குவாதம் ஆகி ஒருத்தன் பட்டன் கத்தியை எடுத்து அந்தப் பெண் நெஞ்சுல கிழிச்சு, அப்படியும் வெறி அடங்காம, பாய்லர்ல இருந்த சுடு தண்ணீரை அவங்க மூஞ்சியில ஊத்திட்டானுங்க. படிச்சவங்க நிறைஞ்சு இருக்கிற மாநிலம் கேரளம்னு பெருமைப்பட்ட காலம் மறைஞ்சேபோச்சு.

கேரளத்துல கொலைக் குற்றங்களுக்கு அடிப்படை... பெண்கள், அரசியல், தொழில் போட்டிகளாத்தான் இருக்கும். எந்த ஒரு கொலையை எடுத்துக்கிட்டாலும், இதுல ஏதோ ஒன்றின் லிங்க் தெரியவரும். 'முத்தூட் ஃபைனான்ஸ்’ அதிபர் பால் எம்.ஜார்ஜ் கொலை வழக்கு இதுக்கு ஒரு உதாரணம். ஜார்ஜை ஒரு கும்பல் கார்ல துரத்திப் பிடிச்சு குத்திக் கொன்னாங்க. 2009-ல் நடந்த இந்தக் கொலைக்கான காரணம் இதுவரைக்கும் தெரியலை. இந்தக் கொலை மூலமாத்தான் கூலிப் படைகளோட ராஜ்யம் கேரளத்தில் வலுவா இருக்கிறது தெரியவந்தது. ஓம்பிரகாஷ், புத்தன்பலம் ராஜேஷ், ஜெயசந்திரன், கரி சதீஷன் அப்படினு ஆரம்பிச்சு, ஒரு ரௌடிங்க லிஸ்ட்டை ரெடி பண்ணுச்சு போலீஸ். இதுல ஓம்பிரகாஷ§க்கு கேரளத்தின் முக்கிய அரசியல்வாதிகளிடம் செல்வாக்கு இருப்பது தெரியவந்தப்போ, மக்கள் வெறுத்துட்டாங்க.

மற்ற மாநிலங்களின் கூலிப் படையினர் மாதிரி கேரளத்தில் பணத்துக்காக மட்டும் கொலை அஸைன்மென்ட்டை ஏத்துக்கிறது இல்லை. நாலஞ்சு கொலைகளில் தன் பேர் அடிபட்டு, அரசியல் வட்டாரத்தில் தனக்குன்னு ஒரு மரியாதை உருவாகணும்கிறதுதான் பல கூலிப் படைத் தலைவன்களோட கனவு. உச்சத்தில் இருக்கிற நடிகை யோடு டேட்டிங்ல ஆரம்பிச்சு, அமெரிக்கா வுக்கு டூர் போற வரைக்கும் விதவிதமா ஃபீஸ் வாங்குறாங்க'' என்று கேரள அதிர்ச்சிகள்பற்றிய நீளமான ஸ்கேனிங் ரிப்போர்ட்டைக் கொடுத்தார் மூத்த பத்திரிகையாளரான விஜயன்.

மோகன்லால் எழுதி நான்கு நாட்கள்கூட நகர்ந்திருக்காது. மார்க்சிஸ்ட் கட்சியின் இடுக்கி மாவட்டச் செயலாளர் எம்.எம்.மணி ஒரு பொதுக் கூட்ட மேடையில், ''இதுவரை எங்களை எதிர்த்த 13 காங்கிரஸ்காரர்கள் உயிரோடு இல்லை. இன்னும் ஏழு பேரைக் குறிவைத்திருக்கிறோம். ஒருவரை வெட்டிக் கொல்வோம். ஒருவரைக் குத்திக் கொல்வோம்'' என்று கொலை லிஸ்ட் வாசித்தது மீடியாக்களில் அப்படியே வெளிவர, கேரளமே கிடுகிடுக்கிறது. இதைஅடுத்து 13 பேரின் மரணங்களை மீண்டும் விசாரிக்க, காவல் துறைக்கு உத்தரவிட்டு இருக்கிறார் முதல்வர் உம்மன்சாண்டி.

கடவுளின் தேசம் சாத்தானின் கையில்!

கேரளத்தின் ரணகள நிலைபற்றி மோகன்லாலிடம் பேசினேன். ''நான் இந்த விஷயத்துல அரசியல் எதுவும் பேசலை. அது எனக்குப் பழக்கம் இல்லாத, தெரியாத விஷயம். சந்திரசேகரனுடைய அகால மரணம் சக மனுஷனா என்னை ரொம்பப் பாதிச்சது. மனுஷங்கன்னே சொல்ல முடியாத ஜென்மங்கள் நடத்தின அந்தக் கோர ஆட்டத்தைக் கொஞ்சமும் சகிச்சுக்க முடியலை. மே 21-ம் தேதி எனக்குப் பிறந்த நாள் முடிஞ்சது. ஐம்பத்திரண்டு வயசைக் கடந்துட்டேன். ஆனா, இவ்வளவு வயசா னாலும் என் அம்மாவுக்கு நான் மகன் தானே? என் முகத்துல ஒரு சின்ன வருத் தம் இருந்தாலும் எங்க அம்மாவால் அதைத் தாங்கிக்க முடியாது. சந்திரசேகர னுக்கும் கிட்டத்தட்ட என்னோட வயசு தான் இருக்கும். கொலையின்போதுஅவர் முகத்துல ஐம்பது வெட்டுக்காயங்கள் விழுந்ததா சொல்றாங்க. அவரோட அம்மா வுக்கு இது எவ்வளவு பெரிய வேதனையைத் தந்திருக்கும்? கொலைகாரர்களும் அதைச் செய்ய உத்தரவிடுகிறவர்களும் வாழ்ற இந்த நிலத்துல வாழ எனக்குப் பயமா இருக்குது. இதைத்தாண்டி வேறெதுவும் சொல்லத் தோணலை'' என்கிறார் வேதனை யான குரலில்.

கடவுளின் தேசத்தை இப்போது சட்டம் தான் காப்பாற்ற வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism