Published:Updated:

சமச்சீர் முதல்வன்!

க.ராஜீவ்காந்தி படம் : கே.குணசீலன்

சமச்சீர் முதல்வன்!

க.ராஜீவ்காந்தி படம் : கே.குணசீலன்

Published:Updated:
##~##

மச்சீர்க் கல்வி அமல்படுத்தப்பட்ட முதல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வின் மாநில முதல் மதிப்பெண் 500-க்கு 497. மொத்த மதிப்பெண் களில் ஜஸ்ட் மூன்றே மூன்று மதிப்பெண்கள்தான் குறைவு.

நீதிமன்ற தாவா, அரசியல் விரோதங்களுக்கு இடையில் பள்ளி துவங்கி மூன்று மாதங்கள் வரை படிக்க பாடப் புத்தகங்கள் இல்லாமல் 'சும்மா’வே இருந்து, பிறகு படித்து இவ்வளவு மதிப்பெண்களைக் கொய்திருக்கிறார் ஸ்ரீநாத். தஞ்சா வூர் பொன்னையா ராமஜெயம் பப்ளிக் பள்ளி மாணவன். ''எந்த வாய்ப்பும் வெளிப்படையாக வராது. அது சவாலாகத்தான் வரும்னு படிச்சிருக்கேன். அது இப்போ நெஜம் ஆயிருச்சு'' - கண்ணாடியைச் சரி செய்துகொண்டே தெளிவாகப் பேசுகிறார் ஸ்ரீ.

சமச்சீர் முதல்வன்!

''ஒன்பதாவதுல நான் ஸ்கூல் ஃபர்ஸ்ட். அப்பவே பத்தாவது பரீட்சைக்கு நிறைய பிளான் வெச்சிருந்தேன். என் திட்டப்படி அக்டோபர் மாசத்துக்குள்ள நான் மொத்த போர்ஷனையும் முடிச்சு, ரிவிஷனுக்குப் போயிருக்கணும். ஆனா, ஸ்கூல் ஆரம்பிச்சு முதல் மூணு மாசம் புக்கே கைக்கு வரலை. சும்மாவே உக்காந்துட்டு இருந்தோம். ஒருவழியா சமச்சீர்க் கல்விப் புத்தகங்கள் வந்த பிறகு, பயத்தோட புரட்டிப் பார்த்தா... ஆச்சர்யம்! எல்லாமே சுலபமா இருந்துச்சு. படிக்கப் படிக்க ஆர்வம்தான் வந்துச்சே தவிர, அலுப்பே வரலை. ஏன்னா, சமச்சீர்க் கல்விப் பாடத்திட்டத்துல மனப்பாடத்துக்கு வேலையே இல்லை. ஒரு தடவை புரிஞ்சுக்கிட்டோம்னா போதும். வருஷத்துல எப்போ பரீட்சை வெச்சாலும் கடகடன்னு எழுதிடலாம். எப்பவும் தமிழ், இங்கிலீஷ்ல முழு மதிப்பெண் தர மாட்டாங்க. ஆனா, நான் அதுலயும்கூட எதிர்பார்த்தேன். பரீட்சைலாம் எழுதி முடிச்சதும் ஸ்டேட் செகண்ட் எதிர்பார்த்தேன். ஆனா, இது ஷாக் சர்ப்ரைஸ்!'' என்று சிரிக்கிறார் ஸ்ரீ.

சமச்சீர்க் கல்விக்கு எதிராக நீதிமன்றம் வரை போய் போராடிய மெட்ரிக் பள்ளி நிர்வாகிகளுக்கு ஒரு செய்தி... ஸ்ரீநாத் படித்தது ஒரு மெட்ரிக் பள்ளியில் தான்!