Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:
இன்பாக்ஸ்

• 80-களில் இந்திய சினிமாவில் சிகரெட் ஸ்டைல் கலாசாரத்தைத் தொடக்கிவைத்தது சத்ருஹன் சின்ஹா, அம்பரீஷ், ரஜினிகாந்த் ஆகிய மும்மூர்த்தி கள்தான். வயது, உடல்நிலை காரணங்களால் சத்ருஹன் சின்ஹாவும் ரஜினியும் புகைக்கு முழுக்குப் போட, அம்பரீஷ் மட்டும் விடாமல் அடம் 'பிடித்து’வந்தார். சமீபத்தில் பெங்களூரு விழா ஒன்றில் அம்பரீஷையும் சிகரெட் பழக்கத்தைவிடச் சொல்லிக் கேட்டனர் சின்ஹாவும் ரஜினியும். அதே விழாவில், '' 'நகரஹவா’னு ஒரு கன்னடப் படத்தில் அம்பரீஷ் சிகரெட்டைத் தூக்கிப் போட்டு வாயில் ஸ்டைலாப் பிடிப்பார். அதை காப்பி அடிச்சுத்தான் நான் படங்களில் சிகரெட் பிடிக்க ஆரம்பிச்சேன்'' என்று ரகசியம் உடைத்தார் ரஜினி. 'நோ ஸ்மோக்கிங்’ விளம்பரத்துல நடிச்சு நல்லது சொல்லலாமே!  

இன்பாக்ஸ்

• அடுத்த வாரிசும் களத்தில் இறங்கியாச்சு! தர்மேந்திராவின் மகன் சன்னி தியோலின் மகன் ராக்கி தியோலுக்கு, தன் அப்பாவைப் போல ஆக்ஷன் ஹீரோவாக ஆசை இல்லை. தாத்தா தர்மேந்திரா போலவே எவர்க்ரீன் காதல் மன்னனாக ஜொலிக்கவே விருப்பமாம். எவளும் ராக்கி கட்ட முடியாதுல்ல!

• ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. இடையே மீண்டும் பனிப் போர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் 'பஞ்சஜன்யா’ இதழில் மோடியின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்து ஒரு கட்டுரை. 'மோடியிடம் இன்னும் அரசியல் முதிர்ச்சி தேவை. பிரதமராகும் அளவுக்கு அவர் இன்னும் பக்குவப்படவில்லை’ என்ற அளவுக்கு நீள்கிறது அலசல். ஆர்.எஸ்.எஸ். தலைவர் சஞ்சய் ஜோஷிக்கும் மோடிக்கும் இடையே யான விரிசலைச் சரிப்படுத்தும் முயற்சிகளுக்கு இடையில் அணுகுண்டை வீசிவிட்டது இந்தக் கட்டுரை என்கிறார்கள் காவிகள். கேங் வார்!

இன்பாக்ஸ்

• ஜெப் கார்லிஸ். அமெரிக்கர் களின் ஃபேவரைட் ஸ்கை டைவர். பாரிஸ் நகரின் ஈஃபில் டவர், கோலா லம்பூர் நகரின் பெட்ரொனாஸ் டவர் என உலகின் உயரமான கட்ட டங்களில் இருந்து அநாயாசமாகக் குதிப்பவர். தரை தொடும் சில நிமிடங்களுக்கு முன் குட்டி பாராசூட்டை விரித்து, நிலத்தில் பாதம் பதிப்பது இவர் ஸ்டைல். தென் ஆப்பிரிக்காவின் டேபிள் மலையின் உச்சியில் இருந்து குதித்தபோது பாராசூட் வேலை செய்யாமல் போக... கால் எலும்புகள் உடைந்து படுத்த படுக்கையானார். நல்ல வேளையாக உயிர் பிழைத்தவர், அமெரிக்க சேனல் ஒன்றுக்குப் பேட்டி அளித்து இருக்கிறார். அதில் நன்கு நடந்து காட்டிய ஜெப் அடுத்த மாதம் மீண்டும் சாகசம் தொடங்கப்போவதாக அறிவித்திருக்கிறார். வீரன்டா!

•  ஒரு லட்சம் கோடி பட்ஜெட்... ஒரு கிலோ மீட்டருக்கு

இன்பாக்ஸ்

200 கோடி செலவு என எகிறவைக்கும் பட்ஜெட்டில், ஜப்பானின் உதவியோடு பிரமாண்டமாக உருவாக இருக்கிறது இந்தியாவின் கனவுத் திட்டமான பெங்களூரு - சென்னை புல்லட் ரயில். ரயிலின் வேகம் 320 கிலோ மீட்டர் என்பதால், பெங்களூரு - சென்னை மொத்தமும் 2 மணி நேரப் பயணம்தானாம். சும்மா சில்லுனு இருக்கும்ல எம்.ஜி. ரோடு!

இன்பாக்ஸ்

•  ட்ரென்ட் ஆர்ஸனால்ட் என்ற அமெரிக்கரைத் தெரியுமா? இல்லை என்றால் தெரிந்துகொள்ளுங்கள். இவர் 14 குழந்தைகளுக்குத் தந்தை. ஆனால், 'நான் இன்னும் கன்னி கழியாதவன்! (Till i’m a virgin) என்கிறார். எப்படிச் சாத்தியம் என்கிறீர்களா? இதுவரை விந்தணு தானம் செய்து 14 தம்பதிகளுக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கச் செய்திருக்கிறார். ''விந்தணு தானம் செய்வது என்றால் சாதாரண விஷயம் கிடையாது மக்களே! நான் இதுநாள் வரை உணவுக் கட்டுப்பாடு மற்றும் சுய ஒழுக்கத்தோடு வாழ்ந்துவருகிறேன். இதை நாட்டுக்குச் செய்யும் சேவையாக நினைக்கிறேன்'' என்கிறார். ஃபிட்டா இருங்க!

•  உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் இப்போது மீண்டும் தேர்தல் களத்தில். கன்னோச் தொகுதி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் சமாஜ்வாடி வேட்பாளராக இறங்குகிறார் டிம்பிள். நீங்க துணை முதல்வராவீங்கனு இல்ல நெனைச்சோம்!

இன்பாக்ஸ்

• அமெரிக்காவின் ஸ்பெல்லிங் பீ சாம்பியன்ஷிப் கோப்பை எப்போதும் இந்திய மூளைகளுக்கே. தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக இந்திய வம்சாவளியினரே இந்தப் பட்டத்தைத் தட்டிச் செல்கிறார்கள். இந்த வருடப் போட்டியில் முதல் மூன்று இடங்களையும் இந்திய வம்சாவளியினரே தட்டி இருக்கிறார்கள். அமெரிக்கா உள்பட 278 நாடுகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்ட போட்டியில் 'ரீuமீtணீஜீமீஸீs’ என்ற பிரெஞ்சு வார்த்தையை மிகச் சரியாக உச்சரித்து முதல் இடம்பிடித்தாள் ஸ்நிக்தா. வெரிகுட்னு சொல்லிட்டானா வெள்ளைக்காரன்!

இன்பாக்ஸ்

•  மலையாள சினிமாக்களில் ஹீரோயின் ஒரு பாட்டுக்கு மட்டும் அயிட்டம் டான்ஸ் போடுவது எல்லாம் நடக்கவே நடக்காத அதிசயம். அந்த அதிசயத்தை அரங்கேற்றியிருக்கிறார் பத்மப்ரியா. 'பேச்சுலர் பார்ட்டி’ படத்தில் ஒரு பாட்டுக்குக் கும்மாங்குத்து போட்டிருக்கிறார் பத்மப்ரியா. கேரளாவில் பார்ட்டிபோல!    

இன்பாக்ஸ்

•  2008-ல் 'சிங் இஸ் கிங்’ ஹிட். அதன் பிறகு கடந்த நான்கு வருடங்களாக ஃப்ளாப்களை மட்டுமே பார்த்த அக்ஷயின் மார்க்கெட்டை ராக்கெட் உச்சத்துக்குத் தூக்கிச் சென்றிருக்கிறது 'ரௌடி ரத்தோர்’. 'சிறுத்தை’யின் இந்தி ரீ-மேக் இது. முதல் வாரத்திலேயே கிட்டத்தட்ட

இன்பாக்ஸ்

50 கோடி வசூலை வாரிக்குவித்து இருக்கிறது. படத்தின் பட்ஜெட்...

இன்பாக்ஸ்

45 கோடி! சல்மானின் 'தபாங்’, அமீரின் 'கஜினி’ வசூல் சாதனைகளை இரண்டு மடங்கு வேகத்தில் முந்தி இருப்பதாகப் படபடக்கிறார்கள் பாலிவுட் பட்சிகள். 'இப்படியரு வெற்றியை என் வாழ்க்கையில் ருசித்ததில்லை. இந்த ரௌடியை ரசித்த ரசிகர்களுக்கு வாழ்நாள் முழுக்க நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்’ என நெகிழ்ந்து மகிழ்கிறார் அக்ஷய். வசூல் ரௌடி!