Published:Updated:

ஒலிம்பிக் தமிழன்!

சார்லஸ்

ஒலிம்பிக் தமிழன்!

சார்லஸ்

Published:Updated:
##~##

ஞ்சித் மஹேஸ்வரி... லண்டன் ஒலிம்பிக்கில் தமிழகத்தின் ஒலிம்பிக் கனவை நிறைவேற்றும் சாத்தியம் உள்ள ஒரே தமிழக வீரர். லண்டன் ஒலிம்பிக்கில் பங்கெடுக்கும் 75 இந்தியர்களில் ட்ரிபிள் ஜம்ப் வீரரான ரஞ்சித் மஹேஸ்வரி மட்டுமே தமிழகத்தின் சார்பில் கலந்துகொள்கிறார்.

 தன் அம்மா பெயரைத் தனது பெயரோடு இணைத்துக்கொண்ட ரஞ்சித், பிறந்தது கேரளத்தில். படித்தது, வளர்ந்தது எல்லாம் தமிழ்நாடு. 2010 டெல்லி காமென்வெல்த் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற இவர்தான், கடந்த ஐந்து வருடங்களாக ட்ரிபிள் ஜம்ப்பில் தேசிய சாம்பியன். ஒவ்வோர் ஆண்டும் இவரது சாதனைகளை இவரே முறியடிக்கிறார். இவரது மனைவி சுரேகாவும் போல்வால்ட் பந்தயத்தில் இந்தியாவின் நம்பர் ஒன் வீராங்கனை. லண்டன் ஒலிம்பிக்குக்குத் தயாராகிவரும் ரஞ்சித்திடம் பேசினேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கிலும் தமிழகத்தின் சார்பில் கலந்துகொண்ட ஒரே வீரர் நீங்கள்தான். இப்போது லண்டன்... பயிற்சியில் என்ன வித்தியாசத்தைக் கொண்டுவந்திருக்கிறீர்கள்?''

''தொடர்ந்து இரண்டு முறை நான் ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளத் தகுதி பெற்றதற்குக் காரணம், என் பயிற்சியாளர் ஷிவ்லிதான். இத்தாலியரான ஷிவ்லி என் ஏழ்மை நிலையைப் புரிந்துகொண்டு கடந்த 10 வருடங்களாக எனக்குப் பயிற்சி அளித்துவருகிறார். 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் துவங்க சில மாதங்களே இருந்த நிலையில், அவருக்குப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக அவர் இத்தாலி திரும்ப வேண்டிய நிலை. ஒலிம்பிக் போட்டிக்கு ஒரு மாதத்துக்கு முன்பு எனக்குக் காலில் காயம். மனம் உடைந்துவிட்டேன். ஆனாலும் விடா முயற்சியோடு பெய்ஜிங் ஒலிம்பிக்கில் கலந்துகொண்டேன். அந்தப் பங்கேற்பு எனக்கு நல்ல அனுபவமாக இருந்தது. ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் வீரர்களின் தகுதி என்ன, அவர்கள் எப்படித் தங்களைத் தயார்படுத்திக்கொள்கிறார்கள் என்பதை அருகில் இருந்து அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன். இந்த முறை மனதளவிலும் உடலளவிலும் 100 சதவிகிதம் உற்சாகமாக இருக்கிறேன். நிச்சயம் பதக்கம் வெல்வேன்!''

ஒலிம்பிக் தமிழன்!

''ட்ரிபிள் ஜம்ப்பில் கியூபா நாட்டு வீரர்கள்தான் டாப். அவர்களைப் பின்னுக்குத் தள்ளுவது மிகவும் கடினமாயிற்றே?''

''ஆமாம்! ஒலிம்பிக்கில் பொதுவாக முதல் இரண்டு இடங்களுக்குத்தான் போட்டி அதிகம். கியூபா வீரர்கள் அதிகபட்சமாக 17.90 மீட்டர் நீளம் தாண்டுவார்கள். அவர்களுக்கு அடுத்தபடியாக 17.40 மீட்டர் நீளம் தாண்டினாலே ஒலிம்பிக்கில் பதக்கம் நிச்சயம். கடந்த ஆண்டு நான் தாண்டிய 17.09 மீட்டர் நீளம்தான் இந்தியா வின் தேசிய சாதனை. இப்போது பயிற்சி முறைகளைக் கடுமையாக்கி இருப்பதால், ஒலிம்பிக்கில் நிச்சயம் 17.40 மீட்டர் நீளத்தைத் தாண்டுவேன்!’

''கியூபா வீரர்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்?''

''சொல்லப்போனால், உடல் வலிமையிலும் மன வலிமையிலும் நாம் அவர்களைவிட ஸ்டிராங். ஆனால், அவர்களின் பயிற்சி முறைகள் நம்மைவிடப் பல மடங்கு முன்னேறியிருப்பதுதான் வித்தியாசம். இங்கே ஒரு விளையாட்டு வீரர் என்பவர் தனி ஆள். ஒரே ஒரு பயிற்சியாளரை வைத்துக்கொண்டு அவரே முனைந்து முன்னேறினால்தான் சர்வதேசப் போட்டிகளில் கலந்துகொள்ள முடியும். இங்கு

ஒலிம்பிக் தமிழன்!

ஜொலிக்க ஸ்பான்சர்கள் உதவி தேவை. ஆனால், அங்கே நிலைமையே வேறு. விளையாட்டு வீரரோடு பயிற்சியாளர், பிசியோதெரபிஸ்ட், மசாஜர், நியூட்ரீஷியன் கவுன்சிலர், மேனேஜர் என ஒரு அணியாக இருப்பார்கள். இப்போது அந்த டிரெண்ட் கொஞ்சம் கொஞ்சமாக நம் ஊரிலும் ஆரம்பித்திருக்கிறது. விரைவில் கியூபா வீரர்களை முந்துவோம்!''

''வெளிநாட்டுப் பயிற்சியாளர், இத்தாலியில் பயிற்சி எனச் செலவு அதிகம் பிடிக்குமே?''

''ஸ்பான்சர்கள்னு இதுவரை யாரும் கிடையாது. நானும் என் மனைவியும் ரயில்வே ஊழியர்கள். ரெண்டு பேர் சம்பளத்தையும் வெச்சு என் மனைவியின் தம்பியைப் படிக்கவைக்கிறோம். எங்களுக்கு ஒண்ணரை வயசுல ஒரு பொண்ணு இருக்கா. வீட்டுச் செலவுகளை மிச்சம் பிடிச்சுதான் பயிற்சிக்குச் செலவு பண்றோம். எந்த எதிர்பார்ப்பும் இல்லாம விளையாடுறதுதான் ஸ்போர்ட்ஸ் ஸ்பிரிட். நம் மனத் திருப்திக்கு விளையாடுறோம். ஸ்பான்சர்ஷிப் கிடைச்சா, இன்னும் நல்லாப் பண்ணுவோம். அவ்வளவுதான்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism