Published:Updated:

ஆண்கள், பெண்களுக்கான உரிமை எங்களுக்கும்!

ரீ.சிவக்குமார், படம் : இரா.வினோத்

ஆண்கள், பெண்களுக்கான உரிமை எங்களுக்கும்!

ரீ.சிவக்குமார், படம் : இரா.வினோத்

Published:Updated:
##~##

'வெள்ளை மொழி’ - ரேவதி எழுதிய இந்தப் புத்தகம்... திருநங்கைகளின் வாழ்க்கை குறித்த ஒரு 'வெள்ளை அறிக்கை’.

 நாமக்கல்லில் பிறந்த துரைசாமி, பின்னர் ரேவதியாக மாறினார். பெங்களூரு, மும்பை, ஹைதராபாத், நாமக்கல் என வெவ்வேறு நிலப்பரப்புகளில் வாழ நேர்ந்தபோது, அங்கு உள்ள திருநங்கைகளின் வாழ்க்கையையும் கலாசாரத்தையும் பதிவுசெய்திருக்கிறார். 'தி ட்ரூத் அபவுட் மீ’ என்ற பெயரில் முதலில் ஆங்கிலத்தில் வெளியான புத்தகம் இது. பெங்களூரில் 'சங்கமா’ தொண்டு நிறுவனத்தின் மூலம் களப் பணி ஆற்றும் ரேவதியிடம் உரையாடியபோது...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''பொதுவாக, திருநங்கைகள் சமூகத்தில் தாங்கள் சந்திக்கும் பிரச்னைகளையே பதிவுசெய்வார்கள். ஆனால், நீங்கள் திருநங்கைகளுக்குள் நிலவும் அமைப்புமுறை, குரு-சிஷ்யை உறவு, பாலியல் தொழில் இவற்றில் உள்ள ஏற்றத்தாழ்வுகளையும் சுரண்டல்களையும் பகிரங்கமாக எழுதியிருக்கிறீர்களே?''

ஆண்கள், பெண்களுக்கான உரிமை எங்களுக்கும்!

''பொதுவாக, சேலாக்கள் எனப்படும் சிஷ்யை அரவாணிகள் தத்தமது குருக்களின் கால்களில் விழுந்து வணங்கும் வழக்கம் 'பாவ்படுத்தி’ என்று அழைக்கப்படுகிறது. ஆனால், நான் இதை விரும்பவில்லை. என் சேலாக்களிடம் நான் பாவ்படுத்தியை எதிர்பார்ப்பது இல்லை. எல்லோருக்கும் சம உரிமைகள் வேண்டும். இப்போது நான் பெங்களூரில், அரவாணிகளுக்கு மட்டும் அல்லாது பல்வேறு ஒடுக்கப்பட்டோரின் உரிமைகளுக்காகச் செயல்படும் ஆக்டிவிஸ்ட். எனவே, யாரும் 'ரேவதி, இப்படி ஏன் புத்தகத்தில் எழுதினாய்?’ என்று என்னிடம் துணிச்சலாகக் கேட்பது இல்லை. நான் இப்போது பிச்சை எடுக்கவோ, பாலியல் தொழிலுக்கோ போவது இல்லை. புத்தகத்துக்குக் கிடைக்கும் ராயல்டி, பல்கலைக்கழகங்களில் பேச அழைப்பதற்குக் கிடைக்கும் பணம் இவற்றை வைத்துத்தான் நாட்களை நகர்த்துகிறேன். அரவாணிகளின் வாழ்க்கை குறித்தும் கலாசாரம் குறித்தும் மற்றவர்களும் அறிந்துகொள்ள விரும்புகின்றனர். எனவே, எல்லாவற்றையும் சொல்லத்தான் வேண்டும்.''

''மிக மெலிதானது என்றாலும் திருநங்கைகளுக்கு இப்போது ஓர் அங்கீகாரம் உருவாகியிருக்கிறது. ஆனால், இன்னும் நிறைவேறாத அடிப்படைத் தேவைகள் என்னென்ன?''

''அரவாணிகளை அங்கீகரித்தது, அவர்களுக்காக ஒரு நாளையே ஒதுக்கி அறிவித்தது, திருநங்கைகள் நல வாரியம் உருவாக்கியது எனக் கடந்த காலத் தமிழக அரசின் செயல்பாடுகளாக இருக்கட்டும், வெகுஜனப் பத்திரிகைகளில் அரவாணிகள் குறித்து வெளிவரும் செய்திகளாக இருக்கட்டும் இந்த விஷயத்தில் தமிழ்நாட்டைத்தான் முன்னுதாரணமாகச் சொல்ல வேண்டும்... தமிழகத்தைப் போலவே கர்நாடகத்திலும் திருநங்கைகள் நல வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று போராடி வருகிறோம். நாங்கள் ஏன் ரேஷன் அரிசி மட்டுமே சாப்பிட வேண்டும், நாங்கள் ஏன் அரசாங்கம் அளிக்கும் சின்னச் சலுகைகளை மட்டுமே எதிர்பார்த்து வாழ வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. நாங்களும் வழக்கறிஞர்களாக, மருத்துவர்களாக, தொழிலதிபர்களாக உருவாக வேண்டும். பெண்ணுரிமை பேசிய பெரியாரிடம் ஒரு முறை கேட்டார்களாம், 'பெண்களுக்கு உரிமை வேண்டும் என்கிறீர்களே, என்ன மாதிரியான உரிமை வேண்டும்?’ பெரியார் சொன்னாராம், 'ஆண்களுக்கு என்ன உரிமைகள் இருக்கின்றனவோ, அத்தனையும் பெண்களுக்கு வேண்டும்’ என்று! அதேபோலத்தான், ஆண் களுக்கும் பெண்களுக்கும் என்னென்ன உரிமைகள் இருக் கின்றனவோ, அத்தனை உரிமைகளும்

ஆண்கள், பெண்களுக்கான உரிமை எங்களுக்கும்!

அரவாணிகளுக்கும் வேண்டும். ஒரே வரியில் சொல்வதானால், சமூக மதிப்பீடுகள் மாற வேண்டும்!''

''பெண்ணாக இருந்து ஆணாக மாறியவர்களின் நிலை எப்படி இருக்கிறது?''

''தென்னிந்தியாவில் அப்படி 25 பேரைக் கண்டுபிடித்தேன். ஆனால், அதில் 11 பேர்தான் பேசத் தயாராக இருக்கிறார்கள். வீட்டை விட்டு வெளியேறிவிட்டால் என்ன செய்வது என்ற பிரச்னை பலருக்கு. சிலர் தங்கள் கர்ப்பப் பையை எடுத்துக்கொள்கிறார்கள். மார்புகளை அகற்றிக்கொள்கிறார்கள். ஆனால், மேலைநாடுகளில் அரவாணிகளாக மாறுவதற்கும் இந்தியாவில் மாறுவதற்கும் இடையில் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. அங்கு இரண்டு ஆண்டுகள் மன நல மருத்து வரிடம் கவுன்சிலிங் எடுத்துக்கொள்ள வேண்டும், ஹார்மோன் தெரபி நடைபெறும். அதன் பிறகும் ஒருவர் பால் மாற விரும்பினால்தான் அறுவை சிகிச்சை நடைபெறும். இந்தியா விலும் அரவாணிகளை, வித்தியாசப்படுத்திப் பார்க்காத, தன்னைப்போல ஒரு சக மனுஷனாக, மனுஷியாக மதிக்கும் சூழல் அமையும் என்று நம்புகிறேன்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism