Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:

• அர்னால்டு தனது ஆரோக்கிய உணவுத் தயாரிப்பு நிறுவனத்துக்கான ஆசிய கண்ட தூதுவராக நியமித்திருப்பது, பஞ்சாப் நடிகரும் பாடி பில்டருமான வரீந்தர் சிங்! 'தான் சுத்த சைவம்’ என்று சொல்லியதை நம்பாமல் மீண்டும் மீண்டும் அர்னால்டு ஆச்சர்யமாக விசாரித்ததைச் சொல்லிச் சொல்லி மாய்கிறார் வரீந்தர். 'நான்-வெஜ்’னு தமிழ்ல சொல்லியிருக்கலாம்ல!

இன்பாக்ஸ்

• ஆன்லைன் வாக்கெடுப்பு ஒன்றில்  காந்திக்குப் பிந்தைய மிகச் சிறந்த இந்தியர் பட்டியலில் எட்டாவது இடம் பிடித்திருக்கிறார் ரஜினிகாந்த். முதலிடம், டாக்டர் பீமாராவ் அம்பேத்கருக்கு. ஜெய் ஹோ!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

• ஒரு பெண் குழந்தைக்கு அப்பாவாக நடிக்கவிருக்கிறார் அமீர் கான். 'அபியும் நானும்’ இந்தி ரீ-மேக்கில் அமீர்தான் அப்பா. பிரகாஷ்ராஜ் தயாரிக்க, ராதா மோகன் இயக்கவிருக்கும் இந்தப் படத்தின் 'த்ரிஷா’ வேடத்தைப் பிடிக்க இப்போதே டீன்-ஏஜ் ஹீரோயின்களிடையே போட்டா போட்டி. அமீரும் நானும்!

இன்பாக்ஸ்

• ஹாலிவுட் ஆக்ஷன் நடிகர் ஸ்டீவன் சீகல் நிஜத்திலும் ஒரு ஆக்ஷன் அடித்திருக்கிறார். போதைப் பொருள் தடுப்புக்காகப் போராடிவரும் சீகல், மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுக்கு 'மரிஜுவானா’ என்ற போதை வஸ்து கடத்தும் கும்பலை போலீஸிடம் பிடித்துக் கொடுத்து ஒபாமாவிடம் பாராட்டு வாங்கியிருக்கிறார். ஹாலிவுட் 'கேப்டன்’!

இன்பாக்ஸ்

•  'DID’ - டான்ஸ் இந்தியா டான்ஸ்... ஜீ தொலைக்காட்சியின் டான்ஸ் ஷோ. இதன் டைட்டில் வின்னர் ஷக்தி மோகனுக்கு, தன் 'ரௌடி ரத்தோர்’ படத்தில் நடனம் ஆட வாய்ப்பு கொடுத்தார் அக்ஷய்குமார். அம்மணியின் ஆட்டம் ஹிட்டோ ஹிட். சரமாரி வாய்ப்புகள் குவிகின்றன ஷக்திக்கு. ஆனால், எதையும் கமிட் செய்யாமல் ஐ.ஏ.எஸ். தேர்வுக்குத் தயாராகிறார் ஷக்தி. படிப்போ, நடிப்போ... ரெண்டும் பப்ளிக்குக்கு நல்லது!  

இன்பாக்ஸ்

• 'ரப்பர் மேன்’ என்றழைக்கப்படும் விஜய் சர்மா யூ-டியூப் ஹிட் இந்தியன். ராஜஸ்தானைச் சேர்ந்த விஜய்க்கு மூட்டு எலும்புகளை இணைக்கும் ஜவ்வு, இயல்பான இறுக்கத்துடன் இல்லாமல் தளர்வாக இருக்கிறது. இதனாலேயே கற்ப னையே செய்ய முடியாத கோணங்களில் அவரால் உடம்பை வளைக்க முடிகிறது. ''நான் ஜாக்கிசான் ரசிகன். அவரது சண்டைகளைப் பார்த்துதான் இப்படி உடலை வளைக்க ஆரம்பித்தேன்!'' என்று சொல்லும் விஜய், தற்போது கின்னஸ் சாதனைக்காக வளைந்து நெளிகிறார். பின்னிருங்க பிரதர்!

இன்பாக்ஸ்

• சுடோமா யமாகுச்சி... கடந்த வாரம் இறந்துபோன ஜப்பானிய தாத்தா. ஹிரோஷிமாவில் முதல் அணு குண்டு வெடித்த அன்று அங்கிருந்து உயிர் தப்பியவர். பிறகு, தன் வீடு இருக்கும் நாகசாகிக்குத் திரும்பினார். மறுநாள் அங்கு இரண்டாவது அணு குண்டு வெடித்தது. அங்கும் உயிர் தப்பினார் சுடோமா. இரண்டு இடங்களிலும் அதிசயமாக உயிர் தப்பியது இவர் மட்டுமே என்பது ஜப்பான் அரசின் அதிகாரபூர்வத் தகவல். புற்றுநோயால் 93-வது வயதில் இறந்த அவரைச் சில மாதங்களுக்கு முன் ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் சந்தித்துப் பேசி இருக்கிறார். இவரின் கதை தான் ஜேம்ஸின் அடுத்த படம் என்று பரபரக்கிறது ஹாலிவுட். தாத்தாவின் ஆன்மா சாந்தியடைவதாக!

இன்பாக்ஸ்

• 'சீனாவிலா இப்படி?’ என்று ஆச்சர்யப்படுத்துகிறது இந்தச் செய்தி! போ ஸிலாய் என்ற அரசியல் தலைவருக்கும் சர்வதேச சீன நடிகையான ஷாங்க் ஷியியிக்கும் இடையே செக்ஸ் புகார் கிளம்பியது. இந்த விவகாரத்தைக் கிளப்பியது இன்னொரு சீன அழகுப் பதுமையான ஃபேன்பிங்பிங்காம். இப்போது பதிலடிக்குத் தருணம் பார்த்துக் காத்திருக்கிறார் ஷாங்க் ஷியி. சண்டைக்கார ஏஞ்சல்ஸ்!

• 'கோஸ்லா கா கோஸ்லா’, 'ஓயே லக்கி... லக்கி ஓயே!’, 'லவ் செக்ஸ் அவுர் தோகா’ என மூன்றே படங்களில் பாலிவுட்டின் 'இன்டெலிஜென்ட் இயக்குநர்’ முத்திரை பெற்ற திபாகர் பானர்ஜி, கிரேக்க நாவல் ஒன்றைத் தழுவி இயக்கிய 'ஷாங்காய்’ படம் கடந்த வாரம் வெளியானது. அரசியல் த்ரில்லரான படம் இந்திய அரசியல்வாதிகளின் இருட்டு முகத்தைத் துகிலுரிக்கிறது என்று பாராட்டுகள் குவிகின்றன. லால் பகதூர் சாஸ்திரி அகாடமி ஆஃப் அட்மினிஸ்ட்ரேஷனில் பயிற்சி ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு இந்தப் படத்தைப் பிரத்யேகமாகத் திரையிட்டனர். அதோடு, திபாகர் பானர்ஜியுடன் ஒரு விவாதத் துக்கும் ஏற்பாடு செய்தனர். இதற்கு முன் எந்த இந்திய இயக்குநருக்கும் கிடைக்காத அங்கீகாரம் இது. 'ஷாங்காய்’ ஸ்பெஷல்!

இன்பாக்ஸ்

• 'டோனி லியோங் சியு ஹங்’ - ஹாங்காங் ஸ்டன்ட்மேன் அசோசியேஷன் அமைப்பின் துணைத் தலைவரான இவர்தான் மிஷ்கினின் 'முகமூடி’ பட ஆக்ஷன் டைரக்டர். டூப் போட விருப்பம் இல்லாத புரூஸ் லீயே தயங்கிய சில காட்சிகளுக்கு டூப் போட்டவர் இவர். இப்போது ஜீவாவை குங்ஃபூ கற்றுக்கொள்ளவைத்து பெண்டு கழட்டுகிறார் டோனி. அபுஹாய்... அபுஹாய்!  

இன்பாக்ஸ்

• குரேஷிக்கு அடுத்ததாக நாட்டின் தலைமைத் தேர்தல் கமிஷனராகி இருக்கிறார் வீரவல்லி சுந்தரம் சம்பத். வேலூர்க்காரரான சம்பத், நிதி மற்றும் மின்சாரத் துறைச் செயலராகத் தனது அதிரடிகளால் ஆந்திரத்தையே அலறவைத்தவர். 2014 மக்களவைத் தேர்தல்தான் சார் சந்திக்கஇருக்கும் மிகப் பெரும் சவால்! எவ்வளவோ பண்ணிட்டீங்க... இதைப் பண்ண மாட்டீங்களா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism