Published:Updated:

யூரோ கப் யாருக்கு?

சார்லஸ்

யூரோ கப் யாருக்கு?

சார்லஸ்

Published:Updated:
##~##

கால்பந்து ரசிகர்களுக்கு இது யூரோ ஃபீவர் சீஸன். உலகக் கோப்பைக்கு அடுத்து, உலகின் மிகப் பெரிய கால்பந்துப் போட்டியான யூரோ கோப்பைப் போட்டிகளால் அதகளத்தில் இருக்கின்றன போட்டிகளை நடத்தும் உக்ரேனும் போலந்தும். ஐரோப்பாவின் 16 முன்னணி அணிகள் களத்தில் மல்லுக்கு நிற்கின்றன. கோப்பையை வெல்லும் வாய்ப்பு யாருக்கு அதிகம்?

 ஸ்பெயின்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உலக சாம்பியனும் நடப்பு யூரோ கோப்பை சாம்பியனும் ஆன ஸ்பெயினுக்கே இந்த முறையும் கோப்பையை வெல்லும் வாய்ப்புகள் அதிகம். தகுதிச் சுற்றில் தான் ஆடிய எட்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற அணி. ஆனால், அணியின் முன்னணி வீரர்களான டேவிட் வில்லா மற்றும் கார்லஸ் புயோல் காயம் காரணமாக யூரோ கோப்பையில் பங்கேற்காதது ஸ்பெயின் அணிக்குப் பெரிய பின்னடைவு. கேப்டனும் கோல் கீப்பருமான இகேர் கேசில்லாஸ், ஸாவி ஹெர்னாண்டஸ், ஆண்ட்ரஸ் இனியஸ்டா ஆகிய மூவரையும்தான் பெரிதாக நம்பி இருக்கிறது அணி. முதல் ஆட்டத்தில் வெற்றிபெற்று இருக்க வேண்டிய ஆட்டத்தில், இத்தாலியை டிரா செய்திருப்பது ஸ்பெயின் ரசிகர்களுக்குக் கொஞ்சம் ஷாக்கிங் நியூஸ்தான்!

ஜெர்மனி!

யூரோ கப் யாருக்கு?

முன்னாள் சாம்பியன் ஜெர்மனி இந்த முறை வெற்றி பெற்றாக வேண்டும் என்கிற வெறியுடன் களம் இறங்கியிருக்கிறது. 2010 உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டியில் ஸ்பெயினிடம் அடைந்த தோல்விக்கு பழிக்குப் பழியாக யூரோ கோப்பையைக் கைப்பற்றத் துடிக்கிறது ஜெர்மனி. கேப்டன் ஃபிலிப்லாம், மெஸ¨ட் ஓஸில், மிரோஸ்லாவ் குளோஸ், லுகாஸ் போடோல்ஸ்கி, தாமஸ் முல்லர் ஆகியோர் ஜெர்மனியின் நம்பிக்கை நட்சத்திரங்கள். தகுதிச் சுற்றுப் போட்டிகளில் ஒரு தோல்வியையும் சந்திக்காமல் களம் இறங்கி இருக்கும் ஜெர்மனி, தன்னுடைய முதல் ஆட்டத்தில் போர்ச்சுகலைத் தோற்கடித்து வெற்றிக் கணக்கைத் தொடங்கி இருக்கிறது.

நெதர்லாந்து!

எப்போதுமே கால்பந்து வரலாற்றில் ஷாக்கிங் டீம் நெதர்லாந்துதான். எப்போது, யாரைச் சாய்க்கும் என்று தெரியாமல், பலம் வாய்ந்த அணிகளை மண்ணைக் கவ்வவைப்பதில் கில்லி. ஆனால், இந்த முறை நெதர்லாந்துக்கே ஷாக் கொடுத்தது டென்மார்க். முதல் ஆட்டத்தில் 45 ஆண்டுகள் கழித்து நெதர்லாந்துக்கு எதிராக முதல் வெற்றியைப் பெற்றிருக்கிறது டென்மார்க். ஆனால், 2010 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி வரை முன்னேறிய நெதர்லாந்து, யூரோ கோப்பையிலும் ஜாம்பவான்களை அசைத்துப்பார்க்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ராபின் வான் பெர்சி, வெஸ்லே ஸ்னீடர் இருவரும் ஃபுல் ஃபார்மில் களம் இறங்கினால் வெற்றி உறுதி என்கிறது நெதர்லாந்து அணி!

பிரான்ஸ்!

பெரிய அளவில் எதிர்பார்ப்பு இல்லாததே தங்களுக்குச் சாதகமானது என்கிறது பிரான்ஸ். உலகக் கோப்பை மற்றும் யூரோ கோப்பையை வென்ற பிரான்ஸ் அணியில் இடம்பெற்று இருந்த லாரென்ட் பிளான்க்தான் இப்போது பிரான்ஸ் அணியின் பயிற்சியாளர் என்பது பிரான்ஸுக்குக் கூடுதல் பலம். ஆனால், இன்னொரு பலம் வாய்ந்த அணியான இங்கிலாந்து மற்றும் போட்டிகளை நடத்தும் உக்ரேன் அணிகள் பிரான்ஸ் இடம்பிடித்து இருக்கும் 'டி’ பிரிவில் இடம்பிடித்து இருப்பது பிரான்ஸுக்கு அச்சுறுத்தலே!

போர்ச்சுக்கல்!

'குரூப் ஆஃப் டெத்’ என்று அழைக்கப்படும் ஜெர்மனி, நெதர்லாந்து, டென்மார்க் அணி கள் இடம்பிடித்து இருக்கும் 'பி’ பிரிவில் இருக்கிறது போர்ச்சுக்கல். கிறிஸ்டியானோ ரொனால்டோவை மட்டுமே அதிகம் நம்பி இருக்கிறது போர்ச்சுக்கல். ஆனால், முதல் ஆட்டத்திலேயே ஜெர்மனியிடம் தோல்வி அடைந்திருக்கிறது போர்ச்சுக்கல். நெதர்லாந்து, டென்மார்க் அணிகளைத் தோற்கடித்து, கால் இறுதிப் போட்டியை எட்ட வேண்டும் என்றால், கிறிஸ்டியானோ ரொனால்டோ ஏதாவது அதிசயங்களைச் செய்தால் மட்டுமே சாத்தியம்!

இங்கிலாந்து!

வேன் ரூனே, ஸ்டீஃபன் ஜெரார்டு இருவரையும் மலைபோல் நம்பியிருக்கிறது இங்கிலாந்து. ஆனால், இங்கிலாந்து அணியின் மேனேஜர் ரே ஹாட்ஜ்சன், கேப்டன் ஸ்டீவ் ஜெரார்டு இருவருக்கும் இடையே வெடித்துள்ள வார்த்தைப் போரால் கொஞ்சம் உடைந்துபோயிருக்கிறது இங்கிலாந்து அணி. மேலும், முதல் இரண்டு லீக் போட்டிகளில் ஆட வேன் ரூனேவுக்கு ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டு இருப்பதும் இங்கிலாந்து அணிக்கு மிகப் பெரிய பலவீனம்.

கோல் போடு... கோடிகளை அள்ளு!

யூரோ கோப்பை கால்பந்துப் போட்டிக்கான மொத்தப் பரிசுத் தொகை

யூரோ கப் யாருக்கு?

1,355 கோடி. சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு

யூரோ கப் யாருக்கு?

52 கோடி பரிசாக வழங்கப்படும். ஆனால், போட்டியில் பங்கேற்கும் ஒவ்வோர் அணிக்கும் ஆரம்பத்தில் வழங்கப்படும்

யூரோ கப் யாருக்கு?

55 கோடி, லீக் சுற்றில் வெற்றிபெற்றால்

யூரோ கப் யாருக்கு?

7 கோடி, கால் இறுதிப் போட்டிகளை எட்டிப் பிடித்தால்

யூரோ கப் யாருக்கு?

14 கோடி, அரை இறுதிப் போட்டியில் விளையாடினால்

யூரோ கப் யாருக்கு?

20 கோடி என எல்லாவாற்றையும் சேர்த்தால் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு கிட்டத்தட்ட

யூரோ கப் யாருக்கு?

  160 கோடி பரிசுப் பணமாகக் கிடைக்கும்.

ஜூலை 1-ம் தேதி அந்த

யூரோ கப் யாருக்கு?

  160 கோடி  கோப்பையும் யாருக்கு என்பதை உலகுக்கு அறிவிக்கும் உக்ரேனின் கீவ் நகரம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism