Published:Updated:

இன்று... ஒன்று... நன்று...!

இன்று... ஒன்று... நன்று...!

இன்று... ஒன்று... நன்று...!

இன்று... ஒன்று... நன்று...!

Published:Updated:

அன்புள்ள வாசகர்களுக்கு... வெற்றிமாறன் பேசுறேன்...

இன்று... ஒன்று... நன்று...!

ரு மனுஷனுக்குக் கிடைக்கிற பெரும்பாக்கியமா நான் நெனைக்கிறது அவனுக்குக் கிடைக்கிற ஆசிரியர்கள், நண்பர்களைத்தான். அதற்கும் மேல நான் உயர்வா பார்க்குறது புத்தகங்களை. புத்தகங்கள் மாதிரி உபயோக மான விஷயம் வேறு எதுவும் கிடையாது. என்னுடைய சம்பாத்தியத்தில் பெரும் பகுதியைப் புத்தகங்களுக்காகச் செலவிடுறதில் நான் சந்தோஷப்படுறேன். மூணு புத்தகங்கள் என்னோட வாழ்க்கைப் பயணத்தில் பெரும் மாற்றங்களை உருவாக்கியது. அதை உங்களுக்குச் சொல்றேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிகரெட் பிடிக்கிறதை நான் ஒரு கொண்டாட்டமாகவே நடத்திட்டு இருந்தேன். 'உலகத்திலேயே சிகரெட் பிடிக்கிறதை நிறுத்துறதுதான் ஈஸி. நான் நூறு தடவைக்கு மேல் நிறுத்தியிருக்கேன்’னு வால்ட் விட்மன் நகைச்சுவையாகச் சொல்வார். ஒரு நாளைக்கு 150 சிகரெட்டுக்கு மேல் நான் பிடிச்ச காலம் ஒண்ணு இருந்தது. ஒரு அளவுக்கு மேல் உடம்பு அதை அனுமதிக்காத காலமும் வந்தது. அந்தப் பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளைச் சொல்றேன். நீங்களும் நலம் பெற வழி உண்டு.

எல்லோருக்கும் தேவை ஒரு நல்ல குரு. அதுவும் நீண்ட நேரம் அந்த குருவுடனேயே இருக்க நேர்ந்தால், அதைவிட நல்ல விஷயம் கிடையாது. என் குரு பாலுமகேந்திரா என்னைச் செப்பனிட்ட விதத்தைச் சொல்கிறேன். எனக்கு ஏதாவது நல்ல பெயர் இருந்தால், அதற்கு அவர் உதவிய விதத்தைப் பகிர்ந்துகொள்கிறேன். குரு என்னை ஆட்கொண்டு, என்னைப் பக்குவப்படுத்தினதையும் சொல்கிறேன்.

பெண்கள் நம் வாழ்வில் பங்கேற்கிற, எடுத்துக் கொள்ற இடம் அதிகம். என் வாழ்க்கையில் அம்மா, சகோதரி, மனைவி, மகள்னு என்னை ஒருமைப்படுத்தியவர்களைப் பத்திச் சொல்கி றேன். நமக்குப் பொறுமையையும் அன்பை யும் அவர்கள் கத்துத்தர்றாங்க. எல்லாப் பொறுப்புகளையும் தன் தோள் மேலே சுமத்திக் கிட்டு என்னைச் சுதந்திரமா செயல்படவைக் கிறாங்க. அவர்களோட பெருந்தன்மையின் சில பகுதிகளைச் சொல்றேன்.

14.6.12-ம் தேதியில் இருந்து 20.6.12 தேதி வரைக்கும் 044-66808034  என்ற நம்பர்ல கூப்பிடுங்களேன். இன்னும் அழகாப் பேசிரலாம்!

இன்று... ஒன்று... நன்று...!

அன்புடன்
வெற்றிமாறன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism