Published:Updated:

குட்பை லெனின்!

ந.வினோத்குமார்

குட்பை லெனின்!

ந.வினோத்குமார்

Published:Updated:
##~##

ம்யூனிசத்தைக் குழி தோண்டிப் புதைத்த புதின் அரசாங்கம் இப்போது லெனினையும் புதைக்க முடிவு எடுத்திருக்கிறது. அருங்காட்சியகத்தில் பதப்படுத்தப்பட்ட நிலையில் இருந்த லெனினின் சடலத்தை அடக்கம் செய்ய முடிவெடுத்து இருக்கிறது புதின் நிர்வாகம்.

 1924-ல் தனது 53-வது வயதில் இறந்தார் லெனின். அன்றைய அதிபர் ஸ்டாலினின் உத்தரவுப்படி, கடந்த 88 ஆண்டுகளாக லெனினின் உடல் அடக்கம் செய்யப்படாமல் பாதுகாக்கப்பட்டுவந்தது. ''ஒரு சாதாரண மனிதனைப் போலத் தன்னுடைய உடலையும் புதைக்க வேண்டும் என்பதே லெனினின் கடைசி ஆசையாக இருந்தது. ஆனால், அதுகூட இத்தனை ஆண்டுகளாக நிறைவேற்றப்படவில்லை'' என்று சொல்லி இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார் ரஷ்ய கலாசார அமைச்சர் விளாடிமிர் மெடின்ஸ்கி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குட்பை லெனின்!

இதன் பின்னணியில் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், மெரிலாந்து பல்கலைக்கழகத்தில் சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற ஒரு கருத்தரங்கம் சுட்டிக்காட்டப்படுகிறது. லெனினின் மரணம் தொடர்பான கருத்தரங்கம் அது. அதில் பேசிய ரஷ்ய வரலாற்று ஆய்வாளர் லெவ் லூரி, லெனின் மரணத்தையும் ஸ்டாலின் அவருக்குப் பின் ஆட்சிக்கு வந்ததையும் முடிச்சுப்போட்டுப் பேசினார். இதற்குச் சான்றாக ஸ்டாலின் பொலிட் பீரோவுக்கு 1923-ல் அனுப்பிய கடிதம் ஒன்றையும் சுட்டிக்காட்டினார்.

அப்போதே கம்யூனிஸ்ட்டுகள் மத்தியில் இதற்குக் கடுமையான எதிர்ப்பு இருந்தது. லெனின் இறக்க வேண்டும் என்று ஸ்டாலின் நினைத்திருந்தால், ஏன் லெனினின் உடலை அவர் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; அரசாங்கம் ஸ்டாலினை அவமானப்படுத்தும் நோக்கிலேயே லெவ் லூரியைக் கருத்தரங்குக்கு அனுப்பி இருக் கிறது'' என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால், இப்போது அரசின் குறி ஸ்டாலின் மட்டும் அல்ல; லெனினும் என்று தெரிந்த பின் கொந்தளித்துப்போய் இருக்கிறார்கள் தோழர்கள்.

விடுங்கள் தோழர்களே... அவர் கோடிக்கணக்கானோரின் இதயங்களில் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்!