என் விகடன் - திருச்சி
என் விகடன் - சென்னை
என் விகடன் - கோவை
என் விகடன் - மதுரை
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

இன்று... ஒன்று... நன்று!

இன்று... ஒன்று... நன்று!

விகடன் வாசகர்களுக்கு அன்பு வணக்கம்... நான் எழுத்தாளர் பாஸ்கர் சக்தி...

 நாம சாப்பிடுற சாப்பாடுதான் நம்ம உடம்பை உருவாக்கும். அதே மாதிரி நம்ம சிந்தனைகள்தான் நம்ம மன ஆரோக்கியத்தைச் செழுமைப்படுத்தும். அந்தச் செறிவான சிந்தனைகளை உண்டாக்க புத்தக வாசிப்புதான் ஒரே வழி! ஒவ்வொரு புத்தகமும் நம்மை வேறு ஒரு உலகத்துக்கு அழைச்சுட்டுப் போகும். நமக்கே தெரியாம, நம்மை வளர்க்குற வாசிப்பு அனுபவத்தை எப்படி அமைச்சுக்கலாம்னு கொஞ்சம் சொல்றேன்...

இன்று... ஒன்று... நன்று!

தமிழக இளைஞர்களுக்கு மதுவைப் பத்தி ஒரு தெளிவு இப்போ அவசியம் தேவை. ஏதோ குடிப்பழக்கம் இன்னைக்கு நம்ம சமூகத்துல ரொம்ப தேவைங்குற மாதிரியும் அதைத் தவிர்க்கவே முடியாதுங்கிற மாதிரியும் ஒரு கற்பிதம் இருக்கு. நம்ம ஆளுமையைப் பாதிக்கிற இந்தக் குடிப் பழக்கத்துக்கு எப்படி எளிமையா முடிவு கட்டலாம்னு சொல்றேன்.

நான் தேனி மாவட்டத்துக்காரன். இப்போ எங்க பக்கமும் தங்க நாற்கரச் சாலை போடுறோம்னு சொல்லி நூறு வருஷ மரங்களை எல்லாம் வெட்டுறாங்க. யுத்தம் மட்டும்தான் பேரிழப்பை உருவாக்குமா? இப்படி நம்மை நாமே சேதப்படுத்திக்கிறது எவ்வளவு சேதங்களை உண்டாக்குது தெரியுமா?    

நான் சமீபத்தில் பார்த்த ஒரு பிரெஞ்சுப் படம் என்னை ஒட்டுமொத்தமா உலுக்கிருச்சு. நல்ல சினிமாக்களை நாம எப்படிப் பார்க்கணும், அதுல இருந்து என்ன கத்துக்கணும்னு பளிச்னு புரியவெச்சுது அந்தப் படம். அது மூலமா நான் கத்துக்கிட்ட பாடத்தை உங்களுக்கும் சொல்றேன்.

நான் எழுத ஆரம்பிச்சு 17 வருஷம் ஆச்சு. நான் எழுத வரும்போது இருந்த இலக்கியப் போக்கு வேறு விதமா இருந்தது. சுவாரஸ்யத்தை நழுவவிடக் கூடாது, நேர்மையா எதையும் சொல்லணும், யாரும் வழி தவறிடக் காரணமா இருந்திடக் கூடாதுனு அப்ப ஒவ்வொரு எழுத்தும் தேர்ந்தெடுத்துத் தொடுத்திருப் பாங்க. புதுசா எழுத வர்றவங்க, 'எப்படி எல்லாம் எழுதலாம்’னு என்கிட்ட பல இடங்கள்ல கேட்பாங்க. அதற்குச் சில யோசனைகளை உங்ககிட்ட சொல்றேன்.

நான் விகடனில் எழுதுன 'தக்ளி’ கதையில்  ஒரு காந்தியவாதிதான் ஹீரோ. ஆனா, கதை ஆரம்பத்துலயே அவர் உயிரோடு இருக்க மாட்டார். நாம் முன்னோர்களை எப்படி மறுக்கிறோம், மறக்கிறோம், அதன் விளைவுகள் நமக்கு எப்பப் புரியும்னு அந்தக் கதையை முன்வைத்துச் சொல்றேன்.  

21.06.12-ல் இருந்து 27.06.12 வரைக்கும் 044-66808034  என்ற நம்பர்ல கூப்பிடுங்க. இன்னும் நிறைய பிரியத்தைப் பகிர்ந்துக்கலாம்...

அன்புடன்,
பாஸ்கர் சக்தி

இன்று... ஒன்று... நன்று!