Published:Updated:

இன்று... ஒன்று... நன்று!

இன்று... ஒன்று... நன்று!

இன்று... ஒன்று... நன்று!

இன்று... ஒன்று... நன்று!

Published:Updated:

விகடன் வாசகர்களுக்கு வணக்கம்!

நான் குஷ்பு...

இன்று... ஒன்று... நன்று!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பதினெட்டு வயசு வரைக்கும் குஷ்புவுக்கு ஒரு பேங்க் சலான் ஃபில் பண்ணக்கூடத் தெரியாது. ஆனா, இப்போ சினிமா, டி.வி., அரசியல், குடும்பம்னு பரபரப்பா இயங்கிட்டு இருக்கேன். அதுக்குக் காரணம், நீங்கதான்! தினமும் நான் சந்திக்கிற ஒவ்வொருத்தர்கிட்ட இருந்தும் ஒரு நல்ல விஷயத்தைக் கத்துக் கிறேன். அப்படி நான் உணர்ந்த சிலவிஷயங் களை உங்களோட ஷேர் பண்ணிக்க ஆசை...

கல்யாணத்துக்குப் பிறகு புகுந்த வீட்டில் பிரச்னைகள் ஏதும் வராம இருக்க என்ன செய்யலாம்? தமிழ்நாட்டையே புகுந்த வீடாக் கொண்ட நான், என்னோட அனுபவத்தில் இருந்து டிப்ஸ் தர்றேன்.

நான் ஏன் அரசியல்ல குதிச்சேன்னு சொல்லணும் இல்லையா? பெண்கள் அரசியலுக்கு வரணும்கிறது என்னோட விருப்பம். யாரையும் சாராம தன் சொந்தக் காலில் நின்னு வாழ, பெண்கள் நிறையப் போராட வேண்டி இருக்கு. அதுக்கு அரசியல் உங்களுக்கு எப்படி உதவும்னு சொல்றேன். அரசியல்ல இருக் கணும்னு விரும்புன நான் ஏன் தி.மு.க-வைத் தேர்ந்தெடுத்தேன்? அதுக்கும் பதில் சொல்றேன்.

குடும்பம்னாலே பிரச்னை இருக்கத்தானே செய்யும்? என் குடும்பத்தில் ஏதாவது பிரச்னை வந்தா சமாளிக்கிற வழிகள்பத்தியும் என் குழந்தைகள், கணவர், எங்க ரெண்டு பேருக்கும் எங்க பெண் குழந்தைகள் எந்த அளவுக்கு முக்கியமானவங்களா இருக்காங்க... எல்லாம் சொல்றேன்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகமா நடக்குற நம்ம ஊர்ல, அதைப் பத்திப் பேசாம இருப்பேனா? பெண் சிசுக் கொலை பத்தியும் பெண்களை சமூகம் எப்படியெல்லாம் மதிக்கணும்னும் பெண்களுக்குக் கல்வி

எவ்வளவு அவசியம்னும் ஆண்களுக்கும் புரியிற மாதிரி சொல்றேன். அப்புறம், எனக்கு ரொம்பப் பிடிச்ச சினிமாபத்திப் பேசியிருக்கேன். தமிழ் சினிமா மேல் நான் வெச்சிருக்குற மதிப்பு, ஒரு நல்ல படம்னா என்ன, எனக்குப் பிடிச்ச ஒரு படத்தை தியேட்டர்ல பார்க்கும்போது நான் எப்படியெல்லாம் ரசிப்பேன், நான் யாரோட ரசிகை இப்படி இன்னும்... இன்னும்... நிறைய விஷயங்களைப் பத்திச் சொல்லி இருக்கேன்.

28.06.2012-லேர்ந்து 04.07.2012 வரைக்கும் 044-66808034 என்ற நம்பரில்  கூப்பிடுங்க. உங்களுக்கு நிச்சயம் உபயோகப்படுற ஏதோ ஒரு அனுபவம் சொல்றேன்...

அன்புடன்,
குஷ்பு

இன்று... ஒன்று... நன்று!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism