Published:Updated:

ஒலிம்பிக் லட்சியம்... பதக்கம் நிச்சயம்!

சார்லஸ்

ஒலிம்பிக் லட்சியம்... பதக்கம் நிச்சயம்!

சார்லஸ்

Published:Updated:
##~##

ண்டன் ஒலிம்பிக்ஸில் இந்தியா வின் நம்பிக்கை நட்சத்திரம் சாய்னா நேவால். இந்த ஆண்டில் சுவிஸ் ஓப்பன், தாய்லாந்து ஓப்பன், இந்தோனேஷியா ஓப்பன் என ஹாட்ரிக் வெற்றிகளைக் குவித்து ஃபுல் ஃபார்மில் இருக்கிறார் சாய்னா. ஐதராபாத்தில் ஷாப்பிங் பிஸியில்  இருந்தவரை போனில் பிடித்தேன்.

 ''நிச்சயமாக ஒலிம்பிக்ஸில் பதக்கம் வெல்லும் இந்திய வீரர்கள் பட்டியலில் உங்கள் பெயரைத்தான் முதலில் வைத்திருக்கிறது இந்திய ஒலிம்பிக் சங்கம். ஊடகங்களும் ரசிகர்களும் உங்கள் மேல் கூடுதல் பிரஷரைத் திணிப்பதை எப்படிச் சமாளிக்கிறீர்கள்?''  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''லண்டனில் இருந்து பதக்கத்தோடுதான் திரும்ப வருவேன் என்பதில் எனக்கே முழு நம்பிக்கை இருக்கிறது. விளையாட் டில், அதுவும் குறிப்பாக தனி நபர் விளையாட்டுகளில் ஊடகங்கள் மற்றும்

ஒலிம்பிக் லட்சியம்... பதக்கம் நிச்சயம்!

ரசிகர் களால் கூடுதல் அழுத்தம் ஏற்படுகிறது என்பது உண்மைதான். இதற்காகவே என் மனதை ஒருநிலைப்படுத்தத் தினமும் யோகா செய்கிறேன். எந்த பிரஷரையும் சமாளிக்கக் கூடிய பக்குவம் இப்போது என்னிடம் இருக்கிறது. இந்தோனேஷியாவில் என் அதிரடி கேம் எனக்கே என் மேல் பெரிய நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. பதக்கம் நிச்சயம். ஆனால், அது தங்கமா, வெள்ளியா என்பது இப்போதைக்குத் தெரியாது.''

''இந்த ஒலிம்பிக்ஸில் மூன்று பலமான வீரர்களைக் களம் இறக்குகிறது சீனா. அவர்களை வெல்வது கடினம் என்று நீங்களே கூறி இருக்கிறீர்கள்.  அவர்களை வெல்ல இப்போது என்ன கேம் பிளான் வைத்திருக்கிறீர்கள்?''

''சீன வீரர்கள் ஒரு பாயின்ட்டைக்கூட எதிராளிக்கு விடக் கூடாதுனு ஆக்ரோஷமா விளையாடுவாங்க. அவங்களை ஜெயிக்கிறது சாதாரண விஷயம் இல்லை. ஆனா, இந்தோனேஷிய ஓப்பனில் கால் இறுதி ஆட்டத்திலும் இறுதி ஆட்டத்திலும் சீன வீரர்களை வீழ்த்தித்தான் பட்டம் ஜெயிச்சு இருக்கேன். அதனால அவங்க ப்ளஸ், மைனஸ்லாம் எனக்கு நல்லாத் தெரியும். அதேபோல, அவங்களுக்கும் என் பலம், பலவீனம் தெரியும். போட்டி கடுமையா இருக்கும். அதுல சந்தேகம் இல்லை. ஆனா, மோதி ஜெயிக்க நான் ரெடி.''

''போன வருடம் அடுத்தடுத்து நிறைய தோல்விகளைச் சந்தித்தீர்கள். மீடியா ஹைப்பும் விளம்பரக் கவனமும்தான் அதற்குக் காரணம் என்று கூறப்பட்டது?''

ஒலிம்பிக் லட்சியம்... பதக்கம் நிச்சயம்!

''நிறைய தோல்விங்கிறது உண்மைதான். ஆனா, அதுக்குக் காரணம் நீங்க  சொல்றதுலாம் இல்லை. எவ்வளவுதான் பிராக்டீஸ் பண்ணாலும், சமயத்துல அது எதிர்பார்த்த ரிசல்ட் கொடுக்காமப் போகும். விளையாட்டுல இது சகஜம்தான். ஆனா, அந்தத் தோல்விகள் எனக்கு நிறையக் கத்துக் கொடுத்துச்சு. என் ஸ்டாமினாவை அதிகரிக்க அந்தத் தோல்விகள்தான் உதவின. சமீபத்திய போட்டிகளில் தோல்வியின் விளிம்பில் இருந்துகூட மீண்டு வந்து ஜெயிக்கக் காரணம், ஸ்டாமினாதான். தோல்விகள் வெறும் தோல்விகள் மட்டும் அல்ல.''

''எப்படி ரிலாக்ஸ் செய்துகொள்கிறீர்கள்?''

ஒலிம்பிக் லட்சியம்... பதக்கம் நிச்சயம்!

''தூக்கம்தான் என் ரிலாக்ஸேஷன். சரியா ராத்திரி பத்து மணிக்குலாம் தூங்கப் போயிடுவேன். காலைல ஆறரை மணிக்குத்தான் எழுந்திருப்பேன். எட்டரை மணி நேரம் நிம்மதியான தூக்கம். அது போதும் எனக்கு, எந்த டென்ஷன்ல இருந்தும் மீண்டு வர.''

''ஒலிம்பிக்ஸில் பதக்கம் வென்றால், முதலில் நீங்கள் என்ன வாங்குவீர்கள்?''

''எதுவும் இல்லை. சத்தான உணவு, அழகான ஆடைகள்... அவ்வளவுதான் என் ஆசைகள். அதை என் பெற்றோர் பார்த்துக்கிறாங்க. இது வேணும் அது வேணும்னு எனக்கு எந்தக் கற்பனையும் இல்லை. ஆனா, யார் என்ன பரிசு கொடுத்தாலும் வாங்கிக்குவேன்!''- குறும்பாகச் சிரிக்கிறார் சாய்னா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism