Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:
இன்பாக்ஸ்

•  மீண்டு(ம்) வருகிறார் வடிவேலு. இம்சை அரசன் 23-ம் புலிகேசி போன்ற ஒரு ஹிட்டோடு இரண்டாம் இன்னிங்ஸைத் தொடங்க முடிவுசெய்திருப்பவர், அறிமுக இயக்குநர் ஒருவரின் இயக்கத்தில் நடிக்கஇருக்கிறார். படத்தின் தலைப்பு...  'தெனாலி ராமன்’! கௌம்பிட்டாருய்யா... கௌம்பிட்டாரு!

இன்பாக்ஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

•  'தி டர்ட்டி பிக்சர்’ தமிழ் மற்றும் தெலுங்கு ரீ-மேக்கில் நடிக்க நயன்தாரா மறுத்துவிட்டாராம். இரண்டு பெரிய நம்பர் சம்பளம் என்ற தூண்டிலுக்கும் சிக்கவில்லை நயன். 'சீதையாக நடித்து கிடைத்த நல்ல இமேஜை, கெடுத்துக்கொள்ள வேண்டாமே’ என்பது அவருடைய எண்ணமாம். இப்போது அந்த சில்க்... எந்த மில்க் என்பதுதான் கோலிவுட், டோலிவுட்டின் கேள்வி. 'உங்களில் யார் அடுத்த சில்க்’ நடத்துங்க மக்கா!

•  உத்தரப்பிரதேசத்தில் தன் மகன் அகிலேஷ் யாதவ்வின் 100 நாள் ஆட்சிக்கு 100 மார்க் கொடுத்திருக்கிறார் சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ். ''மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் எல்லாத் துறைகளையும் கவனமாக எடுத்துக்கொண்டு நான் கொடுத்துஇருக்கும் மார்க் இது'' என்கிறார் முலாயம். ஆனால், சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவரும் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரு மான சுவாமி பிரசாத் மௌர்யாவோ, ''கடந்த 100 நாட்களில் அரசு பிறப்பித்து இருக்கும் அதிகாரிகளின் பணிமாற்றல் உத்தரவுகளின் எண்ணிக்கை மட்டும் 2,000. அதாவது, ஒவ்வொரு அதிகாரியும் இரண்டு முறை மாற்றப்பட்டு இருக்கிறார்கள்'' என்று அதிர்ச்சி உண்மையை உடைத்திருக்கிறார். யூ டூ அகிலேஷ்!

இன்பாக்ஸ்

•  கலிஃபோர்னியா இசையமைப்பாளர்கள் பள்ளியில் படித்த ஸ்ருதி, 'தி எக்ஸ்ட்ராமென்டல்ஸ் ராக் பேண்டில்’ ஸ்டார் பாடகர். ஷூட்டிங் பரபரப்பால் இசைக்கு பிரேக் விட்டுஇருந்தவர், இப்போது ஆசை ஆசையாக கிடாரைக் கையில் எடுத்திருக்கிறார். கவர்ச்சி மழை டு இசை மழை!

இன்பாக்ஸ்

•  சி.எஸ்.அமுதனின் இரண்டாவது படமான 'இரண்டாவது பட’த்தில் ரம்யா நம்பீசனுக்கும் ஒல்லி வில்லியாக வரும் விஜயலட்சுமிக்கும் கலங்கடிக்கும் கலர்ஃபுல் சண்டைக் காட்சி இருக்கிறதாம். அதில் தமிழ் சினிமாவின் டிரேட் மார்க் சண்டைகளைச் செமத்தியாகக் கலாய்த்து இருக்கிறார்களாம். ஐ லேடீஸ்... லேடீஸ்!

இன்பாக்ஸ்

•  'சார்லீஸ் ஏஞ்சல்ஸ்’ புகழ் கேமரூன் டயஸுக்கு வயது 40. ஆனால், இன்னமும் டீன் ஏஜ் லுக்கில் அதிரடித்துக்கொண்டு இருக்கும் டயஸ்தான் அமெரிக்காவில் அதிகம் சம்பாதிக்கும் நடிகைகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். வெறுமனே டாலர்களை மட்டும் குவித்துக்கொண்டு இருக்காமல், தற்போது ஆரோக்கியம் தொடர்பான புத்தகம் ஒன்றை எழுதிவருகிறார். இப்போதே பல பதிப்பகங்கள் டயஸ் வீட்டு வாசலில் வரிசைகட்டி நிற்கின்றன. அழகான ஃபிகருதான்... அதுக்கேத்த டாலர்தான்!

இன்பாக்ஸ்

•  ஷாரூக், அமீர், சல்மான் என எத்தனை கான்கள் வந்தாலும், இன்னமும் தான்தான் டான் என்பதை நிரூபித்திருக்கிறார் அமிதாப். சார் தொகுத்து வழங்கவிருக்கும் 'கோன் பனேகா க்ரோர்பதி’ ஆறாவது சீஸனுக்கு அவருக்கு வழங்கப்படவிருக்கும் சம்பளம்

இன்பாக்ஸ்

140 கோடி. இப்போது டி.ஆர்.பி-யில் மூன்றாவது இடத்தில் இருக்கும் அமீர் கானின் 'சத்ய மேவ ஜெயதே’வை க்ரோர்பதி முதல் வாரத்திலேயே தாண்டிவிடும் என்கின்றனர் சேனல் ராஜாக்கள். ஒரு கேள்விக்கும் பதில் சொல்லாமலே 'பிக் பி’ ஆகிட்டார் க்ரோர்பதி!

•  'ஐ யம் டேகிங் யூ... யூ ஆர் டேகிங் மீ... அண்ட் வீ ஆர் மேக்கிங் ஹிஸ்ட்ரி!’ - ஃபேஸ்புக் காதலர்களான தெபோரா டாரஸ் பட்டேல், வெரின்ஜியா, ஜெஃப்ரி அனபா என்கிற பாப் பாடகர்கள் கூட்டணி அமைத்து உருவாக்கி இணையத்தில் வெளியிட்டு இருக்கும் இந்த ஆல்பம்தான் இப்போது யூ டியூப் ஹிட். 'ஃபேஸ்புக்கை விரும்பும் எவருக்கும் எங்கள் பாடல் பிடிக்கும்!’ என்கிறார்கள் இவர்கள். லைக்!

இன்பாக்ஸ்

•  மெகா ஹிட் அடித்த 'தூம்’, 'தூம் 2’ படங்களின் வரிசையில் தயாராகவிருக்கும் 'தூம் 3’ இந்திப் படத்தின் வில்லன் அமீர் கான். ரஜினிக்கு இப்போது வட இந்தியாவிலும் ரசிகர்கள் அதிகரித்து இருப்பதால், படத்தில் ரஜினியை நடிக்கவைக்கும் முயற்சிகள் நடக்கின்றன. ரஜினி வெர்ஸஸ் அமீர். அட்டகாச ஆட்டமாச்சே!

•  பாகிஸ்தானில் பிரதமராக இருந்த யூஸுஃப் ரஸா கிலானியை பதவியில் இருந்து, நாட்டின் உச்ச நீதிமன்றம் அகற்றியதை அடுத்து, முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சரான மக்தூம் ஷஹாபுதின் பெயரைப் பரிந்துரைத்தது பாகிஸ்தான் மக்கள் கட்சி. ஆனால், சில மணி நேரங்களிலேயே உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அவருக்கு எதிராக பிடிவாரன்ட் ஒன்றைப் பிறப்பித்தனர். அடுத்து, ராஜா பர்வேஸ் அஷ்ரஃப்பைப் பரிந்துரைத்து, நாடாளுமன்றத்தில் அவர் பிரதமராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார். ஆனாலும், அடங்கவில்லை அக்கப்போர். அவர் மின் சக்தித் துறை அமைச்சராக இருந்தபோது நடந்த ஊழல்களைக் கிளறத் தொடங்கி இருக்கிறது பாகிஸ்தான் நீதித் துறை. குழப்பஸ்தான்!

இன்பாக்ஸ்

•  உலகில் முதன்முதலாக சோதனைக் குழாய் மூலம் குழந்தை பெற்றவர் இங்கிலாந்தைச் சார்ந்த லெஸ்லி ப்ரவுன். சமீபத்தில் தனது மகள் லூஸி ப்ரவுனின் பிறந்த நாளின்போது, 'சோதனைக் குழாய் முறை மட்டும் இல்லாமல் போயிருந்தால், இன்று என் பிள்ளைக்கு அம்மாவாகவும் பேரக் குழந்தைக்குப் பாட்டியாகவும் இருந்திருக்க மாட்டேன்’ என்றெல்லாம் உருக்கமாகப் பேசியிருந்தார் லெஸ்லி. இந்த முதல் சோதனைக் குழாய் அம்மா தன் 64-வது வயதில் சமீபத்தில் மரணம் அடைந்துவிட்டார். நிறைவான தாய்மை!

•  இந்திய வில் வித்தை வீரர்கள் கடினமான ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி, ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதி பெற்றிருக்கிறார்கள். தருண்தீப் ராய், ஜெயந்தா தலுக்தர், ராகுல் பானர்ஜி என்ற இந்த மூவர் அணிதான் நார்வே, கனடா ஆகிய நாடுகளைக் கால் இறுதி, அரைஇறுதிச் சுற்றுகளில் வீழ்த்தி, இறுதிச் சுற்றில் ஆஸ்திரேலியாவை மண்ணைக் கவ்வ வைத்துள்ளது. ஏற்கெனவே நம் இந்திய வில் வித்தை வீராங்கனைகளான பம்பாய்லா தேவி, தீபிகா குமாரி, ஸ்வ்ரோ ஒலிம்பிக்குக்குத் தகுதி பெற்றுவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சொல்லி அடிங்க கில்லீஸ்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism