வெளியிடப்பட்ட நேரம்: 10:20 (18/11/2013)

கடைசி தொடர்பு:15:48 (19/11/2013)

நடிகர் திடீர் கண்ணையா மரணம்!

சென்னை: 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த திடீர் கண்ணையா சென்னையில் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 77. அவரது உடல் தகனம் இன்று அயனாவரம் சுடுகாட்டில் நடக்கிறது.

அவள் ஒரு தொடர்கதை, அபூர்வ ராகங்கள், ஏட்டிக்கு போட்டி, என்ன பெத்த ராசா உள்பட 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் திடீர் கண்ணையா.

சென்னை பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டே படங்களில் நடித்து வந்தார். இவர் கடந்த சில நாட்களாக சளி மற்றும் மூச்சு திணறலால் அவதிபட்டு வந்தார். நேற்று அவர் மூச்சு விடமுடியாமல் சிரமப்பட்டார்.

உடனடியாக அவர் அயனாவரத்தில் உள்ள ரயில்வே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று பகல் 12 மணிக்கு மரணம் அடைந்தார்.

அவரது உடல் தகனம் இன்று காலை 11 மணிக்கு அயனாவரம் சுடுகாட்டில் நடக்கிறது.

மரணம் அடைந்த திடீர் கண்ணையாவுக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகளும் இருக்கிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்