Published:Updated:

இன்று... ஒன்று... நன்று!

இன்று... ஒன்று... நன்று!

பிரீமியம் ஸ்டோரி

விகடன் வாசகர்களுக்கு வணக்கம்...

இன்று... ஒன்று... நன்று!

நான் ச.தமிழ்ச்செல்வன் பேசுறேன்... ஓர் எழுத்தாளரா உங்ககிட்ட எழுத்து மூலமாப் பேசிட்டு இருந்த நான், இப்போ விகடன் மூலமா நேரடியா பேசப்போறேன்.

உலகத்திலேயே தாம் வாழ்ற நிலப்பரப்பை அதோட தன்மைகளுக்கு ஏத்த மாதிரி அஞ்சு வகையாப் பிரிச்சு, அதுக்கேத்த மாதிரி தொழில், விவசாயம் பண்ற ஒரே இனம்... நம்ம தமிழ் இனம்தான். அந்தப் பெருமையைக் கொஞ்சம் பெருமிதமாப் பேசலாமா?  

ஹோட்டல், திருமண மண்டபங்கள்ல ஆண்கள் சமைக்க, வீட்டுச் சமையல் அறையில் மட்டும் பெண்கள் அவஸ்தைப்படுவது ஏன்? ஆண்கள் சமைக்க வேண்டிய அவசியத்தையும் சமையலில் இருக்கும் சுவாரஸ்யங்களையும் எடுத்துச் சொல்றேன். காதலிக்கும் இடமாக சமையலறை இருக்கும்கிறது உங்களுக்குத் தெரியுமா?

இந்த உலகத்தை ஒன்றாம், இரண்டாம், மூன்றாம் நாடுகள்னு பிரிச்சிருக்காங்க. அவங்க எப்படிப் பிரிச்சிருக்காங்க, நாம அதை எப்படிப் பார்க்கணும்னு சொல்றேன். இன்னொரு உண்மையைச் சொல்லணும்னா, நம்ம மனசுல இந்தியாவைப் பத்தி இருக்குற அபிப்ராயம் உண்மையில் ஐரோப்பாக்காரங்களால் உருவாக்கப்பட்டது. இந்த விஷயத்தைப் பத்தி விளக்கமா பேசுவோம்.

தமிழர்கள், தமிழ் மொழி மட்டும் பேசுறது இல்லை. இரு மொழி பேசுற தமிழர்கள் தமிழ்நாடு முழுக்க இருக்காங்க. அவங்களைப் பத்தி, அவங்களை நாம எப்படி நடத்தணும்கிறதைப் பத்திச் சொல்றேன்.

பிரபஞ்ச ரகசியம் உங்களுக்குத் தெரியுமா? திட, திரவ, வாயுக்களால் ஆன இந்தப் பிரபஞ்சத் தில் எந்தப் பொருளையும் படைக்க முடியாதுங்கிறது அறிவியல் உண்மை. படைப்பே கிடையாதுன்னா படைக்கிறவன் எப்படி இருப்பான்? மனுஷன் கண்டுபிடிச்ச எல்லாப் பொருட்களும் நமக்கு சேவை பண்ணிட்டு இருக்கும்போது, மனுஷன் படைச்ச கடவுளுக்கு மட்டும் மனுஷனே சேவை பண்ற ரகசியம் என்ன?

பெருவெடிப்பில் ஆரம்பிச்சு பெருங்காயம் வரைக் கும் வாழ்க்கையோட அத்தனை சுவாரஸ்யங் களையும் பேசுவோம்!

12.7.12ல இருந்து 18.7.12 வரைக்கும் 044-66808034  என்கிற எண்ணில் என்னைக் கூப்பிடுங்க. காத்திருக்கேன்...  

நன்றி.

அன்புடன்,
ச.தமிழ்ச்செல்வன்  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு