Published:Updated:

எங்கேயோ கேட்ட குரல்!

எஸ். ஷக்திபடம் : வி.ராஜேஷ்

பிரீமியம் ஸ்டோரி
##~##

நினைவிருக்கிறதா வெள்ளியங்கிரியை? அச்சு அசலாக ஜெயலலிதா குரலில் பலருக்கு போனில் பேசிக் கலாய்த்தாரே, அவரேதான். இப்போது, கிருத்திகா உதயநிதியின் குரலில் தினேஷ்குமாரும், ஜெயலலிதாவின் மகள் என்று சொல்லி பிரியா மகாலட்சுமியும் பலரிடம் பேசி அபேஸ் செய்த செய்திகள் வரும் நிலையில்... அவர்களின் முன்னோடியான வெள்ளியங்கிரி என்ன செய்கிறார்.

 ''சி.எம். பொண்ணுனு சொல்லி ஒரு அம்மணி பேசி ஏமாத்தி சிக்கின விஷயம் தெரியுங்களா?''

''ஆங்... படிச்சேங்ணா! கெரகம் இப்படி எல்லாங்ளா அக்குறும்பு பண்ணுவாங்க? மிமிக்ரிங்கிறது சாமி கொடுத்த வரம்ங்க. அதைவெச்சு நாலு பேரைச் சிரிக்கவைக்கலாம். தப்பு பண்ணக் கூடாது!''

எங்கேயோ கேட்ட குரல்!

''நீங்க இப்ப ஜெயலலிதா குரல்ல பேசுறது இல்லைங்ளா?''  

''நான் அப்பவே பேசி என்னத்தங்ணா கண்டேன்? 'மாயாண்டி குடும்பத்தார்’ படம் பாத்துப்போட்டு சீமானோட நம்பரப் புடிச்சு சும்மா பேசுனேனுங். நமக்குத்தான் மிமிக்ரி தெரியுமேனு அம்மா குரல்ல பேசுனேன். ஆனா, அவர் உண்மையான அம்மானு நம்பிட்டார். ஒரு தடவை, பேலன்ஸ் இல்லைங்கிறதால மிஸ்டு கால் கொடுத்தேன். 'அம்மா மிஸ்டு கால் எல்லாமா கொடுப்பாங்க?’னு சுதாரிச்சுக்கிட்டாருங்ணா. அப்பால போலீஸ் வெவகாரமெல்லாம் ஆன பெறவு, 'இவன் சரியான கெரகம் புடிச்ச பயலா இருப்பான் போலவே’னு நம்ம சோட்டுப் பசங்கள்லாம் விலக ஆரம்பிச்சுட்டாங்களா... நான் மிமிக்ரியே பண்றது இல்லைங்ணா!''

''சரி... யார்கிட்டயும் மாட்டிக்காம மிமிக்ரி பண்றது எப்படி?''

''நான் மிமிக்ரி பண்ணி ஒரு பைசாகூடப் பணம் சம்பாதிக்கலங்ணா. உசுரே போறதா இருந்தாலும் இப்டிப் பொரட்டுப் பொழப்புக்குப் போற ஆள் நானில்லீங்ணா. கேபிள் டி.வி. வயர் இழுக்குற வேலையும் தோட்டங்காட்டுல கூலி வேலையும் பார்த்துக் கெடச்ச அம்பது, நூறை வெச்சு டாப்பப்பு பண்றதுக்கே பத்தலைங்ணா! தேவையில்லாத கேள்விங்க இது. ஆனா, ஒண்ணு சொல்றேங்ணா... அடுத்தவன் பணத்த அபேஸ் பண்ற மாதிரி என்ன செஞ்சா லும் என்னைக்கோ ஒருநாள் சிக்கித்தான் ஆகணுங்ணா!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு