Published:Updated:

இன்று... ஒன்று... நன்று!

இன்று... ஒன்று... நன்று!

இன்று... ஒன்று... நன்று!

இன்று... ஒன்று... நன்று!

Published:Updated:

அன்புள்ள விகடன் வாசகர்களே... வணக்கம்.

 உங்கள் ஒவ்வொருவரையும் தேடிச் சென்று செய்தி சொல்ல விகடன் அளித்த தளத்தை மட்டில்லா மகிழ்ச்சியுடன் பயன்படுத்திக்கொள் கிறேன்!

இன்று... ஒன்று... நன்று!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சமயம் கலையை வளர்க்கிறது. காசிக்குப் போய்விட்டு வந்து, 'பக்கத்து வீட்டுக்காரன் இன்னும் நலமாக இருக்கின்றனா?’ எனக் கேட்டால் அந்த ஆன்மிகத்துக்கு எந்த அர்த்த மும் கிடையாது. அன்பை வளர்ப்பதுதான் நாம் இறைவனை அடையும் முதல் நிலை. அது எப்படி என்று எளிமையாகச் சொல்கிறேன்.

நம் மருத்துவத்தில் உயிர் எங்கே இருக்கிறது எனக் கேட்டால் விதவிதமாகச் சொல்வார்கள். ஆனால், என் அனுபவ சாந்தத்தில் உயிர் எங்கே இருக்கிறது என்பதைப் பகிர்ந்துகொள்கிறேன்.

வாழ்க்கையில் நாம் கை கொள்ள வேண்டிய விஷயம் எது என்று கேட்டால் நிராதரவாக, பாதுகாப்பற்ற மக்களைக் காப்பதுதான் எனச்சொல் வேன். அவர்களுக்கு வேண்டியது அனுதாபம் அல்ல... தோழமை. உதவுவதுதான் மிகப் பெரிய குணம். அதை ஒரு சிறுகதை மூலம் புரியவைக்கிறேன்.

குழந்தைகளுக்கும் நமக்குமான உலகம் விடுபட்டுவிட்டது. நாமும் ஒருகாலத்தில் குழந்தைகளாக இருந்தோம் என்பதே மறந்துவிட்டது. குறிப்பாக பெற்றோர்கள், குழந்தைகள் நெருக்கம் அற்றுப்போய்விட்டது. அவர்களின் உலகத்தில் நம் பயணங்கள் அமைவது இல்லை. உறவுகள் அன்பால் இணைக்கப்படு வதன் அவசியத்தை என் பார்வை யில் சொல்கிறேன். எல்லோராலும் உணர முடிகிற எளிய உண்மைதான் அது.

மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் என்றார் திருஞானசம்பந்தர். வங்கிச் சேமிப்பு, வசதிகள் மட்டுமே நம்மை வாழவைத்து விடாது. நிம்மதிக்கான வேர் நிச்சயம் பொருளில் இல்லை. அப்படி என்றால் மண்ணில் நல்ல வண்ணம் வாழ வழி என்ன? என் மனதுக்குப் பட்டதைச் சொல்கிறேன்.

திருமணங்கள் அன்பால் நிச்சயிக்கப்படாமல் பொருளால் அமைவது தொடர் நிகழ்ச்சியாகி வருகிறது. வாழ்க்கையில் பல உன்னதங்களை இழந்துவிட்டோமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. உணர்வால், உறவால், தோழமையால் ஆண் - பெண் இணைந்து வாழ வேண்டிய அவசியத்தை உங்களுக்குச் சொல்கிறேன். வாழ்க்கை வேடிக்கை கிடையாது. அதை உணர்ந்து வாழ்வதுபற்றி உங்களிடம் பகிர்ந்துகொள்ள முயற்சித்திருக்கிறேன்.

26-07-12 முதல் 1-08-12 வரை 044-66808034 என்ற எண்ணில் என்னை அழையுங்கள். நல்லன பல பகிரக் காத்திருக்கிறேன்.

இன்று... ஒன்று... நன்று!

நன்றி!

தங்கள் அன்புள்ள,
குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism