Published:Updated:

கம்பெனி நிர்வாகம் பொறுப்பல்ல!

ராஜீவ்

கம்பெனி நிர்வாகம் பொறுப்பல்ல!

ராஜீவ்

Published:Updated:
##~##

கிவிட்டார்... பிரணாப் முகர்ஜியும் இந்தியாவின் ஜனாதிபதியாக. 'ரப்பர் ஸ்டாம்ப்’ என்று நாம் பேச்சுக்குச் சொல்கிறோம். ஆனால், அந்தப் பதவிக்கான சலுகை, பராமரிப்புகள் குறித்து அறிவீர்களா?  

   பட்ஜெட் நிதி ஒதுக்கீடு - நிதி கமிஷனை நியமிக்கும் ஜனாதிபதிக்குத்தான் பட்ஜெட்டில் முதல் செலவு. ஜனாதிபதி மாளிகை தொடர்பான செலவுகளுக்கு சுமார்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கம்பெனி நிர்வாகம் பொறுப்பல்ல!

22.5 கோடியை ஒதுக்குவார்கள்.

சம்பளம் - மாதம் துல்லியமாக

கம்பெனி நிர்வாகம் பொறுப்பல்ல!

1,47,728. இதுபோக, கைச்செலவுக்கு என ஆண்டுக்கு

கம்பெனி நிர்வாகம் பொறுப்பல்ல!

15 லட்சம். இது பொழுதுபோக்கு, உடை மற்றும் இன்னபிற செலவினங்களுக்காக.

வீடு - அநேகமாக உலகிலேயே மிகப் பெரிய வீட்டில் வசிக்கும் ஜனாதிபதி இந்திய ஜனாதிபதியாகத்தான் இருக்கும். மொத்தம் 2 லட்சம் சதுர அடியில் பரந்து விரிந்திருக்கும் ராஷ்டிரபதி பவனில் சுமார் 340 அறைகள் இருக்கின்றன. பிரணாப் மத்திய அமைச்சராக ராஷ்டிரபதி பவனுக்கு வந்தபோது, அங்கு உள்ள குதிரையின் பளபள பராமரிப்பைக் கண்டு 'அடுத்த ஜென்மத்துல ஜனாதிபதி மாளிகை குதிரையா பிறக்கணும்’ என்று ஆசை தெரிவித்தவர். ஜனாதிபதி குடும்பத்தினருக்கு எனப் பணிபுரிய 200 பணியாளர்கள் உண்டு.

கம்பெனி நிர்வாகம் பொறுப்பல்ல!

ஜனாதிபதி பயணிக்க -

கம்பெனி நிர்வாகம் பொறுப்பல்ல!

12 கோடி  மதிப்பு உள்ள மெர்சிடீஸ் பென்ஸ் காரை வழங்குகிறது அரசாங்கம். குண்டு துளைக்காத, வெடி விபத்திலும் பாதிக்காத பாதுகாப்பான கார் அது.

பயணச் செலவு - இது ஜனாதிபதியின் பயணங்களைப் பொறுத்தது. முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் கடந்த ஐந்து வருடங்களில்

கம்பெனி நிர்வாகம் பொறுப்பல்ல!

205 கோடிக்குப் பயணச் செலவு காண்பித்து இருக்கிறார்.

விமானங்கள் - எந்த நேரமும் பிரதமர் அல்லது ஜனாதிபதிக்குத் தேவைப்படும் என்று ஏழு விமானங்கள் தயார் நிலையிலேயே இருக்கும். அதில் நான்கு எம்ப்ரேர் விமானங்கள், மூன்று போயிங் விமானங்கள். இதில் எம்ப்ரேர் வகை விமானம் ஒன்றின் மதிப்பு

கம்பெனி நிர்வாகம் பொறுப்பல்ல!

140 கோடி. போயிங் விமானம் அதன் பாதுகாப்பு அம்சங்களையும் சேர்த்து

கம்பெனி நிர்வாகம் பொறுப்பல்ல!

934 கோடி மதிப்பு உடையது.

'ஏர் இந்தியா நிறுவனம் நஷ்டத்தில் இயங்குகிறது’ என்கிற செய்தி நினைவில் வந்தால், கம்பெனி நிர்வாகம் பொறுப்பல்ல!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism