Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:
இன்பாக்ஸ்

•  உலகின் மிக இளம் வயது 'சி.இ.ஓ’-க்களாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்கள் சென்னையைச் சேர்ந்த சகோதரர்களான ஷ்ராவன் மற்றும் சஞ்சய் குமரன். புதிது புதிதான மொபைல் ஆப்ஸை நிறுவிய இவர்களுக்கு வயது 12 மற்றும் 10. எட்டு, ஆறாம் வகுப்பு மாணவர்களான இவர்கள் உருவாக்கிய கேட்ச் மீ, ஆல்பபட் போர்ட், ப்ரேயர் ப்ளானட், ஒலிம்பிக் தீஃப் ஆகிய  கேம்ஸ் ஆப்ஸ் 20 நாடுகளில் ஹிட். 'கடந்த மூன்று வருடங்களாகத் தினமும் ஒரு மணி நேரம் கோபல், பேஸிக், சி எனக் கணினி புரொகிராம்களைப் படித்தோம். ஐ.ஐ.டி. படிப்பை முடித்து ஸ்டீவ் ஜாப்ஸ்போல ஆக ஆசை’ என்கிறார்கள் இந்த சாஃப்ட்வேர் கில்லாடி கள். தில்லா விளையாடுங்க!  

இன்பாக்ஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

•  'பில்லா 2’ படத்தில் அஜித்தை மிரட்டிய ஸ்டைல் வில்லன் வித்யுத் ஜம்வால், இப்போது விஜயையும் மிரட்டவிருக்கிறார். 'துப்பாக்கி’ படத்திலும் இவர்தான் வில்லன். தல - தளபதி ரசிகர்கள் எல்லாரும் கொடி பிடிப்பாங்க டிமிட்ரி!

இன்பாக்ஸ்

•  நீல் ஆர்ம்ஸ்ட்ராங் நிலவில் காலடி எடுத்துவைத்து 43 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. ஆண்டு விழாக் கொண்டாட் டத்துக்கு ஆர்ம்ஸ்ட்ராங்கையும் அவருடைய சகா ஆல்ட்ரினையும் வரவழைத்துக் கௌரவித்த 'நாசா’, அப்போது அவர்கள் நிலவில் காலடி எடுத்துவைத்த வீடியோவையும் பிரமாண்டமாகத் திரையிட்டு இருக்கிறது. இந்த நிகழ்வின்போது, இந்த 82-வது வயதில் மீண்டும் நிலவுக்குச் செல்லும் ஆசையை வெளிப்படுத்தி கைத் தட்டலை அள்ளினார் ஆர்ம்ஸ்ட்ராங். நிலாவுக்குப் போனா பாட்டியை விசாரிங்க தாத்தா!

•  பெங்களூரு - இந்திரா காந்தி இசைச் சாரல் பூங்காவில் 7.5 ஏக்கர் பரப்பளவில் இந்தியாவுக்காகப் போரில் இறந்தவர்களுக்காக பிரமாண்ட நினைவுக் கல்வெட்டுகளை நிறுவத் தயாராக இருக்கிறார்கள். சுதந்திரம் அடைந்தது முதல் இன்று வரை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நாட்டுக்காக இன்னுயிர் ஈந்த சுமார் 22 ஆயிரத்துக்கும் அதிகமான ராணுவ வீரர்களின் பெயர்கள் அதில் பொறிக்கப்பட இருக்கின்றனவாம். சல்யூட்!

இன்பாக்ஸ்

•  விஜய்... சூர்யா... இருவரும் காஜலுக்காக வெயிட்டிங்! 'துப்பாக்கி’, 'மாற்றான்’ இரண்டு படங்களிலும் ஹீரோயின் காஜல்தான். ஃபெப்சி ஸ்ட்ரைக் காஜல் கால்ஷீட்டைக் காலி செய்ய, இப்போது இரு பட யூனிட்களும் ஒரே நேரத்தில் காஜலைத் துரத்துகின்றன. 'துப்பாக்கி’யில் மூன்று பாடல்கள், 'மாற்றான்’-க்கு ஒரு பாடல் மற்றும் சில காட்சிகள் பாக்கி. இரு பட இயக்குநர்களும் தத்தமது படத்தில் முதலில் நடிக்குமாறு காஜலை நெருக்க, 'நீங்களே பேசி ஒரு முடிவுக்கு வாங்க’ என்று நேக்காக நழுவி தெலுங்கில் டூயட் பாடிக்கொண்டு இருக்கிறார் காஜல். ஜல்...ஜல்... மோதல்!

•  ஐரோப்பாவில் இப்போது காதலர்கள் இடையே 'ஒன் இன் டூ’ டாட்டூ ட்ரெண்ட். அதாவது, ஓர் உருவத்தை இரண்டாகப் பிரித்து ஒவ்வொருவர் உடம்பிலும் பாதிப் பாதி பச்சை குத்திக்கொள்வது. இதயத்தை இரண்டாகப் பிய்த்து வரைந்துகொள்வார்கள். அதை இருவரும் அருகில் நின்று இணைத்துக் காட்டும்போது முழு இதயம் தெரியும். உருவங்கள் போக வாக்கியங்கள், பெயர்களையும் இப்படி பச்சைக் குத்திக்கொள்கிறார்கள். என்னாமா காதலிக்கிறாங்க!

இன்பாக்ஸ்

•  டோலிவுட் ப்ரின்ஸ் மகேஷ்பாபு குட்டி இளவர சிக்கு அப்பா ஆகியுள்ளார். மகேஷ்பாபு - நம்ரதா ஜோடிக்கு இரண்டாவது பரிசாக மகள் பிறந்திருக்கிறார். ஆறு வயது மகன் கவுதம் கிருஷ்ணாவோடு ஒரு விளம்பரத்தில் நடிக்கவிருக்கிறார் மகேஷ். ஐ... இதுல விஜயைக் காப்பி அடிக்கிறார் ஆந்திர இளைய தளபதி!

இன்பாக்ஸ்

• அது என்னவோ காதலுக்கும் கமல் குடும்பத்துக்கும் அவ்வளவு ராசிபோல. கமல், ஸ்ருதியைத் தொடர்ந்து அக்ஷரா ஹாசனும் இப்போது கிசுகிசுக்கப்படுகிறார். நஸ்ருதின் ஷாவின் இளைய மகன் விவானுக்கும் அக்ஷராவுக்கும் 'சம்திங்... சம்திங்’ என்பது பாலிவுட் பரபரப்பு. இத்தனைக்கும் ''நாங்க சின்ன வயசுல இருந்து ஃப்ரெண்ட்ஸ். அந்த நெருக்கத் துக்கு 'ரொமான்ஸ்’ என்று சொன் னால், நான் என்ன செய்ய முடியும்? எனக்கு விவானைக் காதலிக்கும் ஐடியா நிச்சயம் இல்லை'' என்று சொல்லியிருக்கிறார் அக்ஷரா. ஆனால், பிறந்த நாள் பார்ட்டியில் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட படங்களுக்குக் காதல் அர்த்தம் கற்பிக்கிறது மீடியா. இப்போல்லாம் ஃப்ரெண்ட்ஸே இப்படித்தான் இருக்காங்க!  

இன்பாக்ஸ்

•  தனது மகன் ராம் சரண் தேஜாவுக்கு தெலுங்கு சினிமாவில் இருக்கும் பீக் மார்க்கெட்டை அப்படியே தக்கவைப்பதுதான் சிரஞ்சீவியின் முக்கிய அஜெண்டா. இதனால், மகன் நடிக்கவிருக்கும் படங்களுக்கான கதைகளைத் தானும் கேட்டு, பிடித்திருந்தால் மட்டுமே ஓ.கே. செய்கிறார். சூப்பர் அப்பா!

இன்பாக்ஸ்

•  நம்ம பிரதீபா பாட்டீலையே மிஞ்சிவிட்டார் ஹிலாரி கிளின்டன். அமெரிக்க அதிபர் ஒபாமா நிர்வாகத்தில் வெளியுறவு அமைச்சராகப் பதவி ஏற்றதில் இருந்து ஹிலாரி, 102 நாடு களுக்கு சுமார் எட்டரை லட்சம் மைல்கள் பறந்து பறந்து சிறப்பு செய்திருக்கிறார். இந்த வகையில் அமெரிக்க வெளியுறவுத் துறையில் ஹிலாரி செய்திருப்பது புதிய சாதனை. அந்தப் பயணத்துல என்ன சாதிச்சாங்க... அதுதானே சாதனை?!

இன்பாக்ஸ்

•  பிரணாப் முகர்ஜியின் 'நம்பர் 2’ சீனியாரிட்டி அந்தஸ்து கட்சிக்கு உள்ளேயும் கூட்டணிக்கு உள்ளேயும் பெரும் புகைச்சலைக் கிளப்பி இருப்பதாலேயே, 'கட்சி, ஆட்சி இரண்டிலும் அதிகாரத்துக்கு வரத் தயார்’ என்று ராகுலை அறிவிக்கச் செய்தா ராம் சோனியா. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!

இன்பாக்ஸ்

•  புரூஸ் லீயின் நினைவு நாளான ஜூலை 20-ம் தேதி 'ஐ யம் புரூஸ் லீ’ என்ற புத்தகத்தை வெளியிட்டு இருக்கிறார்கள் அவருடைய ரசிகர்கள். சிறு வயது வறுமை, கராத்தேவையும் ஜூடோவையும் இணைத்து 16 வயதிலேயே புது பாணி தற்காப்புக் கலையை தோற்றுவித்தது, சினிமாவில் அபார சாதனைகள் படைத்துவிட்டு 32 வயதிலேயே மறைந்தது என அவருடைய வாழ்க்கை வரலாற்றை அசை போடும் நினைவுகள் நிரம்பியிருக்கும் புத்தகம் அது. மிஸ் யூ புரூஸ் லீ!

இன்பாக்ஸ்

•  இந்தியாவின் முதல் சூப்பர் ஸ்டார்... பாலிவுட் பாக்ஸ் ஆபீஸ் பாட்ஷா... ராஜேஷ் கன்னா தன் 69-வது வயதில் மறைவதற்கு முன் பேசிய கடைசி வாக்கியம் இது... 'டைம் அப் ஹோ கயா - பேக் அப்’. இப்போது அவர் இறந்த வருத்தம் மறைவதற்குள் குடும்பத்துக்குள் சொத்து பஞ்சாயத்து கிளம்பியிருப்பது, அவருடைய ரசிகர்களை இன்னும் வேதனையில் ஆழ்த்தியிருக்கிறது. அவரது ஆன்மாவை சாந்தியடையவிடுங்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism