Published:Updated:

இன்று... ஒன்று... நன்று!

இன்று... ஒன்று... நன்று!

பிரீமியம் ஸ்டோரி
##~##

அன்புள்ள விகடன் வாசகர்களுக்கு... வணக்கம்.

 மனிதர்களைச் சிக்கலில் ஆழ்த்தும் விஷயம் காதலா கோபமா, ஆசையா எனக் கேட்டால் இவை எதுவுமே இல்லை, கர்வம்தான் என எளிதாகச் சொல்லிவிடலாம்.

காதலுக்கும் கோபத்துக்கும் ஆசைக்கும் இடையில் அடிஆழத்தில் கர்வம் ஓடிக்கொண்டுஇருக்கிறது. நான் யார் தெரியுமா, நான் நினைத்தால் என்ன நடக்கும் தெரியுமா எனக் கேட்டவர்கள் அவ்விதமே அழிந்துபோய் இருக்கிறார்கள். கர்வத்தை வெல்ல என்ன வழி? எனது அனுபவத்தின் சாயலை உங்களுக்கு அளிக்கிறேன்.

இன்று... ஒன்று... நன்று!

காதல் என்பது என்ன? எத்தனையோ பேர் எவ்வளவோ சொல்லிவிட்டார்கள். 'காதல் என்பது பரஸ்பரம் விட்டுக்கொடுத்தல்’ எனத் தெளிவாகச் சொன்னார் ஜே.கிருஷ்ணமூர்த்தி. இதைப் புரிந்துகொண்டவாழ்க்கை தான் துல்லியமாக இருக்கும். பயனுள்ளதாக அமையும்.

கோபத்தைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது. கோபம் உடனடியாக அழிக்கக் கூடியது எதிராளியை அல்ல. சிலர் 'முன்கோபி’ என்பதில் பெருமைப்பட்டுக்கொள்கிறார்கள். 'எனக்குக் கோபம் வரும், பாருங்க’ எனச் சொல்லத் தொடங்கிவிடுகிறார்கள். சினத்தைச் சிதைக்க வேண்டிய வழிமுறைகளை, கோபத்தில் இருந்து விடுபடப் பழகிக்கொள்கிற தங்க விதிகளை நான் சொல்லக் கேளுங்கள். கொஞ்சம் நீங்கள் சாப்பிடுகிற உணவுபற்றிச் சொல்ல வேண்டி இருக்கிறது. உங்கள் மனப்போக்கை உணவுதான் தீர்மானிக்கிறது. அது மூச்சையும் கட்டுப்படுத்துகிறது. காமத்தில் மூச்சு துடிக்கும், கோபத்தில் மூச்சு திண்டாடும். அகந்தையில் பேச மூச்சு தாறுமாறாகும். அன்பில் மூச்சு சீராக இருக்கும். உணவு எங்கே ஐயா இங்கே வந்தது எனக் கேட்கிறவர்களுக்கு சொல்ல நிறைய இருக்கிறது நண்பனே!

மனதின் அமைதிக்கு இன்னொன்றும் தேவைப்படுகிறது. அதுதான் மந்திர ஜெபம். அம்மாதிரியான ஜெபத்துக்கு உங்கள் தொழிலோ, சாதியோ, மதமோ குறுக்கீடாக அமையாது. மன பாரத்தைக் குறைத்து, கொந்தளிப்பைக் குறைக்க, அதைவிட எளிதான வழி வேறு எதுவும் கிடையாது. ஒரு சொற்றொடரைத் திரும்பச் திரும்பச் சொல்வதால் நேர்கிற பயிற்சியை உங்களுக்கு விளக்கிச் சொன்னால் புரியும். பழக முடியாது எனச் சொல்லாதீர்கள்.

பாதிக்கப்பட்டவனின் பாடம்தான் உங்களுக்கான படிப்பு. இதயத்தின் ஆழத்திலிருந்து வருவது எல்லாமே மனப்பூர்வமானது... 2-8-12 முதல் 8-8-12 வரை 044-66808034  என்ற எண்ணில் அழையுங்கள் பேசுவோம்!

தங்கள் அன்புள்ள
பாலகுமாரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு