Published:Updated:

ஒன் அண்ட் ஒன்லி ஒலிம்பிக்!

சார்லஸ், ஆர்.சரண்

ஒன் அண்ட் ஒன்லி ஒலிம்பிக்!

சார்லஸ், ஆர்.சரண்

Published:Updated:
##~##

ண்டன் ஒலிம்பிக் கிராமத்தில் சின்ன ஸ்க்ரூ கழன்று விழுந்தாலும், அது உலகத்துக்கு பிரேக்கிங் நியூஸ்!

 அமெரிக்கா - ரஷ்யா, இந்தியா - பாகிஸ்தான், இஸ்ரேல் - பாலஸ்தீனம் என எதிரி நாடுகளைக்கூட ஒரே இடத்தில் ஒன்றிணைப்பது ஒலிம்பிக் மட்டுமே. லண்டன் ஒலிம்பிக்கில் அதிக பதக்கங்களை வெல்லும் போட்டி சீனாவுக்கும் அமெரிக்கா வுக்கும் இடையேதான். எதிர்பார்ப்புக்கு ஏற்ப இந்த ஒலிம்பிக்கில் முதல் தங்கத்துடன் கணக்கைத் துவக்கி முன்னணி வகிக்கிறது சீனா. சில ஒலிம்பிக் சுவாரஸ்யங்கள் இங்கே...

•  இந்தியாவுக்கு ஆரம்பமே அதிர்ச்சி! துவக்க விழா அணிவகுப்பில் இந்திய தேசியக் கொடியை ஏந்திவந்த சுஷில் குமார் அருகே டி-ஷர்ட், ஜீன்ஸுடன் சம்பந்தமே இல்லாமல் நடந்துவந்த பெண் யார் என்று இந்தியாவே உதறியது. நடனக் குழுவில் இடம்பெற்று இருந்த பெங்களூரைச் சேர்ந்தவரான மதுரா, இந்திய அணி வீரர்களுடன் மைதான நுழைவாயில் வரை நடந்து வர அனுமதிக்கப்பட்டு இருந்தார். ஆனால், உணர்ச்சிவசப்பட்டு மைதானம் முழுக்க அவர் நடைபோட்டது, சர்ச்சைகளுக்கு இறக்கை கட்டிவிட்டது!

ஒன் அண்ட் ஒன்லி ஒலிம்பிக்!

•  முந்தைய ஒலிம்பிக்குகளில் பதக்கங்களை வென்றவர்கள் சில சென்ட்டிமென்ட்களை விடாமல் கடைபிடிப்பார்கள். நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் மூன்று முறை தன்னுடைய கைகளைச் சுழற்றிவிட்டுத்தான் நீச்சல் குளத்துக்குள் குதிப்பார். கடந்த ஒலிம்பிக்கில் மூன்று பதக்கங்களை அள்ளிய ஸ்டெஃபானி ரைஸ் எட்டு முறை கைகளைச் சுழற்றிவிட்டு, நான்கு முறை கண்ணாடிகளைத் தட்டிப்பார்த்து, நான்கு முறை தலையில் தட்டிவிட்டுத்தான் நீச்சல் குளத்துக்குள் குதிப்பார். செரீனா வில்லியம்ஸ் முதல் சர்வுக்கு முன் ஐந்து முறை தரையில் பந்தை அடித்து பவுன்ஸ் செய்வது வழக்கம்.  

•  பாலினச் சர்ச்சையால் இந்தியாவின் சாந்தி விலக்கிவைக்கப்பட்டார். ஆனால், அதேபோன்ற சர்ச்சையால் பாதிக்கப்பட்ட தென் ஆப்பிரிக்கத் தடகள வீராங்கனை கேஸ்டர் செமன்யா, லண்டன் ஒலிம்பிக்கில் தென் ஆப்பிரிக்காவின் நம்பிக்கை நட்சத்திரம். 800 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் கலந்துகொள்ள இருக்கும் செமன்யா தங்கம் தட்டுவார் என்பது எதிர்பார்ப்பு!

•  அமெரிக்க பீச் வாலிபால் ஜோடியான கெர்ரி லீ, மிஸ்ட்டி மேதான் இந்த ஒலிம்பிக்கின் கவர்ச்சி தேவதைகள். கடந்த இரண்டு ஒலிம்பிக்குகளில் தங்கம் வென்ற இந்த ஜோடியே, லண்டனிலும் தங்கம் தட்டி ஹாட்ரிக் அடிக்கும் என்கிறார்கள்!

ஒன் அண்ட் ஒன்லி ஒலிம்பிக்!

ஒலிம்பிக் வில்வித்தைப் போட்டியில் பார்வைத் திறன் குறைபாடுகொண்ட தென் கொரியாவின் இம் டாங்க்ஹியுன் இரண்டு உலக சாதனைகளைப் படைத்திருக்கிறார். லண்டன் ஒலிம்பிக்கில் படைக்கப்பட்ட முதல் உலக சாதனை இவருடையதுதான். இவரால் 70 மீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைக் குறிவைப்பது மிகவும் சிரமம். ஆனாலும், வில்வித்தைப் போட்டி யில் 699 புள்ளிகளைக் குவித்து சாதனை படைத்தார் இம்.

•  இந்த ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் வென்றவர்... ககன் நரங். 10 மீட்டர் ஏர் ரைஃபில் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ககன், சென்னையில் பிறந்தவர். 2010-ம் ஆண்டு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்குத் தன் பெயர் பரிந்துரைக்கப்படவில்லை என்பதால், காமென்வெல்த் போட்டியில் இருந்து விலகுவதாக முதலில் அறிவித்தார். சமரசத்துக்குப் பிறகு போட்டியில் கலந்துகொண்ட ககன், நான்கு தங்கப் பதக்கங்களை வென்றார். 2011-ம் ஆண்டு அவருக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது!