Published:Updated:

கடமையைச் செய்ய பலிவாங்காதீர்கள்!

க.ராஜீவ்காந்திஓவியம் : ஹரன்

கடமையைச் செய்ய பலிவாங்காதீர்கள்!

க.ராஜீவ்காந்திஓவியம் : ஹரன்

Published:Updated:
##~##

'ஸ்ருதி’ மரணத்தைத் தொடர்ந்து தமிழகமே கடந்து செல்லும் பள்ளிப் பேருந்துகளைக் கொந்தளிப்பாகக் கவனித் துக்கொண்டு இருக்கும் தருணத்தில்,  சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் அமைந்திருக்கும் பிரபலமான பள்ளி வாசலில் கண்ட காட்சி இது. அந்தப் பள்ளி வாகனத்தின் டிரைவரிடம் ஒரு அப்பா யூ.கே.ஜி. படிக்கும் தன் குழந்தையையும் பள்ளி வேனில் அழைத்து வருமாறு கிட்டத்தட்ட காலில் விழாத குறையாக 'எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை... ஒரு ஓரமாக நிற்கவைத்தாவது அழைத்து வாருங்கள்!’ என்று கெஞ்சிக்கொண்டு இருந்தார். தமிழகத்தில் இதுதான் நிதர் சனம். உயிர் பலியானாலும், வேறு வழி இல்லை. பள்ளிப் பேருந்து, வேன்களில் தான் மாணவர்களைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டி இருக்கிறது. எதிர்காலத்தில் இப்படியான சம்பவங்களைத் தவிர்க்க என்னென்ன விதிமுறைகளைக் கடை பிடிக்க வேண்டும் என்று சென்னை மண்டலத்தில் சுமார் 34 வருடங்கள் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற கந்தசாமியிடம் கேட்டேன்.

கடமையைச் செய்ய பலிவாங்காதீர்கள்!

 ''பள்ளி வாகனங்கள் மட்டுமல்ல; அனைத்து வாகனங்களுக்கும் பாதுகாப்புக்கென கடுமையான சட்டங்கள் உள்ளன. ஆனால், அரசியல், பொருளாதாரக் காரணங்களால் அவற்றைத் திறம்படச் செயல்படுத்த முடியாத சூழல் உள்ளது. ஐந்தாறு ஆண்டுகள் ஆன பழைய வாகனங்களை ஏலம் எடுத்து தான் பள்ளிப் பேருந்துகளாகப்பயன்படுத்து கின்றன தனியார் பள்ளிகள். இதுவே விபத்துகளுக்குக் காரணமாகிறது. பெற்றோர், பள்ளி நிர்வாகம், அரசு... இந்த மூவர் கூட்டணி கரம் கோத்துச் செயல்பட்டால்தான் இப்படியான விபத்துகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க முடியும்!'' என்ற கந்தசாமி அவற்றை அடுக்கடுக்காகப் பட்டியல்இட்டார்.

பெற்றோர்களுக்கு...

•  முடிந்தவரை அருகில் உள்ள பள்ளி யிலேயே குழந்தைகளைச் சேர்க்கவும். இதனால் விபத்து அபாயம் நீங்குவதோடு குழந்தைகளுக்கு உடல் சோர்வு, நச்சுக் காற்று மூலமான தீமைகள் ஆகியவை விலகும். பயணத்தால் மிச்சமாகும் நேரத்தை குழந்தைகளின் பொழுதுபோக்கு, விளையாட்டு ஆகியவற்றுக்குச் செலவழிக்கலாம்.

• வசதியான குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோர்கள்கூட குறைந்த செலவு காரணமாக ஆட்டோ ரிக்ஷாக்களில் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புகிறார் கள். அதை முற்றிலுமாகத் தவிர்த்துவிடுங்கள்.

•  தங்

கடமையைச் செய்ய பலிவாங்காதீர்கள்!

கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகள் மட்டுமல்லாது எந்த ஒரு பள்ளி வாகனமும் அதிவேகத்தோடு சென்றால் அந்தவாகனத் தின் பின்புறம் 'புகார் தெரிவிக்க’ என்று இருக்கும் தொலைபேசி எண்ணில் புகார் அளிக்கலாம்.

தனியார் பள்ளிகளுக்கு...

• பள்ளிப் பேருந்துகளை இயக்க  இள வயது ஓட்டுநர்களைவிட மத்திய வயதில் நல்ல அனுபவம் உள்ள ஓட்டுநர்களையே தேர்வுசெய்யுங்கள்.

• ஒவ்வொரு வாகனத்துக்கும் தனித்தனி நடத்துநரை நியமித்து மாணவர்கள் பேருந்துக்குள் ஏறுவது, இறங்குவதை உறுதி செய்தல் வேண்டும்.

•  மென்பொருள் நிறுவனங்களில் உள்ளதுபோல தனியார் பள்ளிகளும் ஐந்து ஆண்டுகள் பழமையான வாகனங்களை இயக்குவதைத் தவிர்க்க வேண்டும்.

• நெரிசல் மிகுந்த இடங்களில் மாணவர்களை இறக்கிவிடவே கூடாது.

அரசுக்கு...

• அனுமதிக்கப்பட்ட அளவைவிட மிகுதியாகக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் ஓட்டுநர்களின் உரிமங்களை உடனடியாக ரத்துசெய்ய வேண்டும்.

• தமிழகம் முழுக்கவே பள்ளிகள் தொடங் கும், முடியும் நேரங்களை அரை மணி நேரம் முன்னதாகவோ, பின்னதாகவோ மாற்றி அமைத்தல்  வேண்டும்.

• அனைத்துப் பள்ளி வாகனங் களிலும் வேகக் கட்டுப்பாட் டுக் கருவி பொருத்துவதைக் கட்டாயமாக்கித் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

• எதிர்காலங்களில் பள்ளி வாகன விபத்துகளைச்சாதாரண சாலை விபத்துகளாகப் பதியா மல் ஓட்டுநர் முதல் பள்ளியின் தாளாளர் வரை அஜாக்கிரதை யாகச் செயல்பட்ட அனைவருக்கும் கடும் தண்டனை அளிக்கும் வகையில் குற்ற வழக்குகளாகப் பதிவுசெய்ய வேண்டும்.

• ஒவ்வொரு முறையும் அரசு இயந்திரத்தை முடுக்க, அப்பாவிகளின் உயிர் பலிகளை எதிர்பார்க்காதீர்கள்!