Published:Updated:

இன்று... ஒன்று... நன்று!

இன்று... ஒன்று... நன்று!

இன்று... ஒன்று... நன்று!

இன்று... ஒன்று... நன்று!

Published:Updated:

விகடன் வாசகர்களே... நலமா?

இன்று... ஒன்று... நன்று!

நான் உதயசந்திரன்... உங்கள் நாளின் சில நிமிடங்களை எனக்கு ஒதுக்குவீர்களா? கொஞ்சம் வாழ்க்கை பேசுவோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புத்தகங்கள் உலகை மாற்றுமா? மில்லியன் டாலர் கேள்வி இது. மோகன்தாஸின் வாழ்வை டால்ஸ்டாய் பாதித்த தருணம்தான் மகாத்மா பிறந்த தருணம். மனித சிந்தனைகளைத் தலைமுறை தாண்டிக் கொண்டுபோய்க் கொண்டாடுபவை புத்தகங்கள்தான். புத்தகங்களுக்கு நாம் நெருங்கிய தோழனாக ஆக வேண்டியதன் அவசியம்பற்றிச் சொல்கிறேன்.

மகாகவி பாரதியைப் பற்றிய 'பாரதி’ படம் அவருடைய இறுதி ஊர்வலத்தில் 12 பேரே கலந்துகொண்ட காட்சியுடன் தொடங்கும். அந்தப் படத்தின் காட்சி ஒன்றில் நான் பங்குகொண்டதையும் அதன் இயக்குநரைச் சூழ்ந்துகொண்டு இளைஞர்கள் கேட்ட பதற்றம் மிக்க கேள்வியையும் உங்களுக்குச் சொல்கிறேன்.

மேல்தட்டு மனிதர்களின் வீழ்ச்சியும் ஆட்டோ டிரைவர்களின் நேர்மையும் பேசப்படும் காலம் இது. உதவி ஆட்சிய ராகப் பரமக்குடியில் பணிபுரிந்தபோது, சாதிக் கலவரங்களை அடக்க முயன்றபோது, ஆக்கிரமிப்புகளைக் களைய முயன்றபோது, எனக்கு ஒரு கடிதம் வந்தது. இன்னமும் என் மனதில் பாரமாகக்கிடக்கிற அந்தக் கடித வரிகளைச் சொல்கிறேன்... கேளுங்கள்!

தாயின் கருணையும், தந்தையின் கண்டிப்பும், நட்பின் தோழமையும், காதலின் இதத்தையும் நாம் வார்த்தைகளில் இருந்தே பெறுகிறோம். எனக்கு என்னவோ வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தினால், எந்தச் சூழலையும் சமாளிக்கலாம், வெற்றி பெறலாம் எனத் தோன்றுகிறது. அப்படி நான் சமாளித்த விதத்தையும் உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.

இப்போது மாணவர்கள் கனவுகளோடு மதிப்பெண்கள் சுமந்தும் அலைகிறார்கள். பெற்றோருக்குப் பிடித்ததையே அநேகமாக எடுத்துப் படிக்கிறார்கள். மதிப்பெண்கள் வெறும் முகவரிதான். அதுவே அடையாளம் அல்ல. பிடித்த துறையைத் தேர்ந்தெடுப்பதும் அதில் ஈடுபாடு காட்டுவதும் எவ்வளவு தூரம் முக்கியம் என்பதற்கு ஒருவரை அடையாளம் காட்டுகிறேன். அது தாய்ப்பால் ஞானப் பால் ஆன கதை.

16.8.12 முதல் 22.8.12 வரை 044-66808034 என்ற எண்ணில் அழையுங்கள். இன்னும் நெருக்கமாக, விளக்கமாகப் பேசலாம்!

தங்கள் அன்புள்ள
உதயசந்திரன்

இன்று... ஒன்று... நன்று!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism