Published:Updated:

கஷ்டப்பட்டார் சூப்பர் ஸ்டார்... கஷ்டப்படுத்துறார் பவர் ஸ்டார்!

செம ஜாலி பேட்டிக.ராஜீவ்காந்திபடங்கள் : வீ.நாகமணி

கஷ்டப்பட்டார் சூப்பர் ஸ்டார்... கஷ்டப்படுத்துறார் பவர் ஸ்டார்!

செம ஜாலி பேட்டிக.ராஜீவ்காந்திபடங்கள் : வீ.நாகமணி

Published:Updated:
##~##

செம ஜாலி பேட்டி மேடம்... ஓ.கே-வா?'' என்றதும் சூதுவாது புரியாமல் ஓ.கே. சொன்னார் கலா மாஸ்டர்.

 ''சூப்பர் ஸ்டாருக்கும் பவர் ஸ்டாருக்கும் என்ன வித்தியாசம்?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

(சின்னதாகக் குழம்புகிறார்) ''ஐயோ, அது எப்டிங்க? ரெண்டு பேரையும் எப்படி கம்பேர் பண்ணலாம்? சூப்பர் ஸ்டார் கஷ்டப்பட்டு ஃபீல்டுக்கு வந்தவர். பவர் ஸ்டார் ஃபீல்டுக்கு வந்து எல்லாரையும் கஷ்டப்படுத்துறவர். எப்படி... ஃபர்ஸ்ட் பால்லயே சிக்ஸரா?''

''ஜனாதிபதி தேர்தல்ல ஏகப்பட்ட செல்லாத ஓட்டு விழுகுதே... என்ன பண்ணலாம்?''

''ஓ... ஜனாதிபதிக்குத் தேர்தல்லாம் நடத்துறாங்களா? ம்... என்கிட்ட விட்டுடுங்க... 'மானாட மயிலாட’ ஸ்டைல்ல போட்டி நடத்தி சூப்பரா செலெக்ட் பண்ணிரலாம்.''

''தி.மு.க. ஆதரவோட துணை ஜனாதிபதி ஆனவர் பெயர் என்ன?''

''ஐயோ... நேத்துதானே படிச் சேன்... மறந்துடுச்சே... ஏதோ ஆசாரினு வந்துச்சு!''

கஷ்டப்பட்டார் சூப்பர் ஸ்டார்... கஷ்டப்படுத்துறார் பவர் ஸ்டார்!

''நமீதா ஏன் ஜீரோ சைஸ் முயற்சிக்கலை?''

''அதானே... ஏன் பண்ணலை? அவளால வாயைக் கட்ட முடியாது. அதானல இருக்கும்.''

''டான்ஸ் மாஸ்டர், ரிங் மாஸ்டர் எதுல ரிஸ்க் அதிகம்?''

''டான்ஸ் மாஸ்டருக்குத்தான். சிங்கத்தைப் பழக்கப்படுத்துறது ஈஸி. சொல்லிக்கொடுக்கிறதை அப்படியே செய்யும். ஆனா, டான்ஸ் மாஸ்டரா நான் படுற அவஸ்தை இருக்கே... ஒரு நாள் இருந்து பாருங்க தெரியும்.''

''காங்கிரஸ்ல எத்தனை கோஷ்டி இருக்கு?''

''காங்கிரஸ் இன்னும் இருக்கா என்ன? (சட்டெனப் பதறி) அச்சச்சோ... இது வேண்டாம். 'தெரியாது’னு சொன்னேன்னு போட்டுக்குங்க... ப்ளீஸ்!''

''நூடுல்ஸுக்கும் இடியாப்பத்துக்கும் என்ன வித்தியாசம்?''

''ம்... நூடுல்ஸ், சைனீஸ் இடியாப்பம். இடியாப்பம், கேரள நூடுல்ஸ்.''

''மானும் மயிலும் ஆடிப் பார்த்திருக் கீங்களா?''

''ஏங்க... நீங்க உண்மையிலயே ரிப்போர்ட்டர்தானா? ஐ.டி. கார்டு காட்டுங்க. (சமாளிப்புக்குப் பின்...) மயில் ஆடிப் பார்த்திருக்கேன்... மான் ஆடி... மான் ஆடுமா சார்? ஆனா, இந்தப் பேரை கலைஞர் ஐயா வெச்சப்ப, 'என்னடா, பழைய பேரா இருக்கே’னு எனக்கே வருத்தமாத்தான் இருந்துச்சு. அப்புறம் அவரே என்னைச் சமாதானப்படுத்திட்டார். இப்போ பேர் செம ஹிட்டுல்ல!''

கஷ்டப்பட்டார் சூப்பர் ஸ்டார்... கஷ்டப்படுத்துறார் பவர் ஸ்டார்!

''ஏன் அவரை 'அஞ்சா நெஞ்சன்’னு கூப்பிடுறாங்க?''

''அஞ்சா நெஞ்சனா? அப்படின்னா? சத்தியமாத் தெரியாதுங்க. எதுவும் தமிழ் டப் பண்ண ஹாலிவுட் பட டைட்டிலா இது?''

''நியூட்ரினோ என்றால் என்ன?''

''நியூட்ரின்... சாக்லேட் கம்பெனிதானே?''

''ப்ளஸ் டூ-வுல உங்க கெமிஸ்ட்ரி ஸ்கோர் என்ன?''

''அப்பாடா... இப்பவாவது என்னைப் பத்தி ஒரு கேள்வி கேட்டீங்களே... ஆறு மார்க்குங்க!''

''வெறும் ஆறா?''

''ஆமாங்க... எனக்கு தமிழ், இங்கிலீஷ், கணக்குத் தவிர, வேற எதுவுமே வராது!''

''நித்தியானந்தா - ஆதீனம் கெமிஸ்ட்ரிக்கு உங்க மார்க் எத்தனை?''

''நித்தியானந்தாவுக்கு எல்லார் கூடவும் செம கெமிஸ்ட்ரி. ஆனா, ஆதீனம் ம்ஹூம்... ஜீரோ!''

'' 'சும்மா கிழிகிழிகிழினு கிழிச்சிட்டேடா...’ அப்படின்னா என்னங்க?''

''அது ரஜினி சார் டயலாக். அவர்கிட்ட இருந்து பிருந்தா காப்பி அடிச்சா. நான் அவகிட்ட இருந்து பிடிச்சிக்கிட்டேன். அப்படின்னா, எதிர்பார்த்ததைவிட அதிகமா ஆடிட்டாங்கனு அர்த்தம்!''

''கொடநாடு பின்கோடு என்ன?''

''வம்புல மாட்டிவிடப் பாக்குறீங் களா? ஆனா, உண்மையிலயே எனக்குத் தெரியாது!''

''சமீபத்தில் தமிழக அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட அமைச்சர் யாரு?''

''எனக்கு அரசியல் நாலெட்ஜ் சுத்தமா கிடையாதுங்க!''

''ஈமு கோழி முட்டை போடுமா?''

''அந்தக் கோழியையே நான் பார்த்தது கிடையாதே. அது நிறையப் பேருக்குப் பட்டையப் போடுதுன்னுதானே நியூஸ் வருது.''

'' 'பில்லா 2’ல அஜித் எத்தனை கோட் மாத்துனாரு?''

''நிறைய நேரம் நடந்துட்டே இருந்தாரு. கோட் மாத்துனாரா என்ன? பட், ஐ லவ் அஜித்!''

''எத்தனை மில்லி அடிச்சா தள்ளாடலாம்?''

''எனக்கு எப்படி சார் இதெல்லாம் தெரியும்? (கோபமாகிச் சமாதானமாகிறார்). 10 கிளாஸ் அடிச்சுட்டு ஸ்டெடியா நிக்கிறவங்களும் இருக்காங்க... ஒரே கிளாஸ்ல தள்ளாடி லூஸு மாதிரி உளர்றவங்களும் இருக்காங்க. அதெல்லாம் ஆளைப் பொறுத்தது.''

''அரசாங்கத்தின் விலை இல்லாப் பொருட் கள் ஏதும் வீட்டுக்கு வந்துருக்கா?''

''புரியலை! அப்படின்னா?''

''மாஸ்டர் பீஸுக்கும் டம்மி பீஸுக்கும் என்ன வித்தியா சம்?''

''மாஸ்டர் பீஸ்னா பெஸ்ட்...  என்னை மாதிரி. டம்மி பீஸ்னா உங்களை மாதிரி... வேஸ்ட்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism