Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:

•  'எங்கள் ஊரில் ஏன் மழை இல்லை? இன்னும் மூன்று நாட்க ளுக்குள் வருண பகவான் இந்தக் கேள்விக்குப் பதில் அளிக்க வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை எடுக் கப்படும்!’ எனப் பாய்ந்திருக்கும் வக்கீல் நோட்டீஸ்தான் இப்போது உ.பி. பரபரப்பு. உத்தரப்பிரதேசத்தின் ஹர்டோய் மாவட்டத்தில் உள்ளூர் மாஜிஸ்திரேட் ஒருவர் பெயரில் இந்த நோட்டீஸ் மாவட்ட வருவாய்த் துறை குமாஸ்தாவின் முகவரிக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அதிர்ச்சி அடைந்த அந்த குமாஸ்தா, 'தொழில்நுட்பக் காரணங்களால் வருண பகவானைத் தொடர்புகொள்ள முடியவில்லை!’ எனப் பதில் அனுப்பியுள்ளார். கிரேஸி கடவுளே!

இன்பாக்ஸ்

• அமெரிக்க அதிபர் ஒபாமா, ஆஸ்திரேலியப் பிரதமர் ஜூலியா கில்லர்ட் பாணியில் இளம் வாக்காளர்களைக் குறிவைத்து கூகுள் ப்ளஸ் ஹேங் அவுட் சாட்டில் குதிக்கிறார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி. குஜராத் மாநிலத் தேர்தலுக்குச் சில மாதங்களே இருக்க, இணையத்தில் நவீன பிரசாரம் மேற்கொள்கிறார் மோடி. நடக்கட்டும் நடக்கட்டும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இன்பாக்ஸ்

• 'சத்யமேவ ஜெயதே’ ஷோ முடிந்தாலும் அமீரின் சமூக சேவைகள் தொடரும். மகாராஷ்டிரத்தின் கடும் வறட்சியைச் சமாளிக்க உதவுமாறு அமீர் கானிடம் கோரிக்கை விடுத்துள்ளார் அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் லட்சுமண். உலக வங்கி மற்றும் மத்திய அரசு நிதி உதவியுடன் நிறைவேற்றப்படும் பல திட்டங்கள்குறித்து அவருடன் விவாதித்திருக்கிறார் அமீர். இதனால், மாநிலத்தின் குடிநீர் விநியோகம் மற்றும் சுகாதாரத்துக்கான விளம்பரத் தூதுவராக அமீர் நியமிக்கப்படலாம். தமிழ்நாட்டுக்கு யாருப்பா?

•  சென்ற வாரம் தமிழகத் தலைநகரில் பரபரப்புக் கிளப்பிய செய்தி... தன்னுடைய பெண் சிசுவை ஒரு பிளாஸ்டிக் பையில் வைத்துக்கொண்டு அலைபாய்ந்து திரிந்த ஒரு பெண்தான். வேண்டாத உறவில் பிறந்ததால் அந்தக் குழந்தையைத் தூக்கி எறிய அலைந்துகொண்டு இருந்த அந்தப் பெண்மணி, இப்போது காப்பகத்தில் இருக்கிறார். காப்பகத்தில் உள்ள அந்தக் குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்க ஆர்வம் காட்டினார்கள் பலர். அதில் நடிகர்கள் பிரபுதேவா, லாரன்ஸ், கவிஞர் விஷாலி கண்ணதாசன் ஆகியோரும் அடக்கம். இவர்களில் விஷாலியிடம் குழந்தை தஞ்சம் அடைவதற்கான வாய்ப்புகள் பிரகாசம். உனக்கும் உள்ளதடி... ஒரு தாய் மடி!

•  6,100 கோடி டாலர்கள் செலவில் ஒரு டாக்ஸி தயாரிக்கிறார்கள் அமெரிக்காவில். அட, கால் டாக்ஸி அல்ல. விண்வெளியில் வீரர்கள் உலவ உதவும் காஸ்ட்லி டாக்ஸி. 'க்யூரியாசிட்டி’ வெற்றியைத் தொடர்ந்து நாசாவின் அடுத்த புராஜெக்ட் இந்த டாக்ஸி. சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரர் களை அழைத்துச் செல்ல இந்த டாக்ஸி பயன்படுமாம். டாக்ஸியில் மீட்டர் உண்டா?

இன்பாக்ஸ்

• வருஷா வருஷம் இரண்டிரண்டு குழந்தைகளாகத் தத்தெடுத்துக்கொண்டு இருக்கிறார் ஹன்சிகா மோத்வானி. இந்த வருஷமும் மும்பையின் சேரிப் பகுதியைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளைத் தத்தெடுத்து, அவர்களுடைய படிப்பு உள்ளிட்ட அனைத்துச் செலவுகளையும் ஏற்கப்போவதாக அறிவித்தார். தத்தெடுத்த குழந்தைகளை வரவழைத்து அவர்களுடன் கேக் வெட்டிப் பிறந்த நாள் கொண்டாடுச் சாம் பொண்ணு... குட் கேர்ள் நீ!

இன்பாக்ஸ்

•  உலகின் தலைசிறந்த 50 படங்களின் வரிசையில் இடம்பிடித்திருக்கிறது சத்யஜித் ரேயின் 'பதேர் பாஞ்சாலி’. கடும் போட்டிக்கு இடையே ஹிட்ச்காக்கின் 'வெர்டிகோ’ படத்தை முந்தி இடம் பிடித்திருக்கிறாள் பாஞ்சாலி. ஒன்றரை லட்ச ரூபாய் செலவில் நாடக நடிகர்களைக்கொண்டு 1955-ல் உருவாக்கப்பட்ட 'பதேர் பாஞ்சாலி’ அரை நூற்றாண்டைக் கடந்தும் அங்கீகாரங்களைக் குவித்துக் கொண்டு இருக்கிறாள். சலாம் பாஞ்சாலி!

இன்பாக்ஸ்

• கிட்டத்தட்ட ஹாலிவுட்டின் ஆக்ஷன் மாஸ்டர்கள் அத்தனை பேரும் சேர்ந்து நடிக்கும் 'த எக்ஸ்பெண்டபிள்ஸ்-2’ படத்துக்கு அதிரிபுதிரி எதிர்பார்ப்பு. முதல் பாகத்தில் ஒரு காட்சியில் மட்டும் தலைகாட்டிக் கடந்துபோகும் அர்னால்டு, இரண்டாம் பாகத்தின் ஆக்ஷன் மேளாவில் பங்கெடுத்திருக்கிறார். 'ரோல் மாடலாக நான் நினைக்கும் சில்வெஸ்டர் ஸ்டாலோனைவிட நான் சினிமாவில் அதிகமான ஆட்களைக் கொன்றுவிட்டேன். அவரது ஸ்கோர் 288. என்னுடைய ஸ்கோர் 289’ என்று ஜாலி ஜோக் அடிக்கிறார் 65 வயது அர்னால்டு. கொன்னு கொன்னு விளையாடுறீங்களே!

இன்பாக்ஸ்

• ஸ்ரீதேவியைத் தொடர்ந்து மாதுரி தீக்ஷித்தும் இந்தி சினிமாவில் 'ரீ என்ட்ரி’ கொடுக்கிறார். ஏகப்பட்ட கதைகளைக் கேட்டவர் 'குலாப் கேங்’ படத்தின் கதையில் சில மாற்றங்கள் செய்தால், நடிக்கத் தயாராக இருப்பதாகக் கூறியிருக்கிறார். அதற்கும் சம்மதித்து மாதுரி கால்ஷீட் கிடைத்தால் போதும் என்று ஷூட்டிங் ஆரம்பித்திருக்கிறார்கள். கனவு ஆன்ட்டீஸ்!

• பிரதமர், அதிபர் எனச் சகலரும் சகட்டுமேனிக்கு பாகிஸ்தான் கோர்ட்டில் குட்டு வாங்கும் சந்தர்ப்பத்தைக் கெட்டியாகப் பிடித்துக்குக் கொண்டு அரசியல் செய்கிறார் இம்ரான் கான். தாலிபான்களின் தற்கொலைத் தாக்குதல் எச்சரிக்கையையும் மீறி, அமெரிக்காவுக்கு எதிராக பாகிஸ்தானின் ஆப்கன் எல்லையில் பிரமாண்ட ஆர்ப்பாட்டம் அறிவித்திருக்கும் இம்ரான் மீது பாகிஸ்தான் மக்களின் கரிசனம் திரும்பி இருக்கிறது. தேர்தல்ல ஜெயிச்சுட்டா, தரிசனமே கிடைக்காது!

இன்பாக்ஸ்

•  இந்த வார அரசியல் காமெடி பீஸ்... உ.பி. பொதுப்பணித் துறை அமைச்சர் சிவபால் யாதவ். அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில், 'திட்டங்களை நிறைவேற்றக் கடுமையாக உழைக்கும்போது நிதியைக் கொஞ்சம் திருடலாம். ஆனா, மொத்தமாக் கொள்ளையடிக்காதீங்க!’ என்று அறிவுறுத்திஇருக்கிறார். ஊடகங்களில் செய்தி வெளியாகி எதிர்க் கட்சிகள் வறுத்தெடுக்கவும், ''எங்கே எப்ப எதைப் படம் பிடிப்பானுவோன்னே தெரியலையே'' என்று புலம்பிக்கொண்டு இருக்கிறார். உண்மை சுடும்ல!

• 'அண்ணனுடன் சேர்ந்து நடிக்க ஆசை!’ என்று சொல்லிக்கொண்டு இருந்த கார்த்தி, சிங்கப்பூரில் நடைபெற்ற 'மாற்றான்’ பட இசை வெளியீட்டு விழா மேடையில் சூர்யா ஆடிக்கொண்டு இருக்கும்போது திடீரெனத் தானும் ஏறி ஆடியிருக்கிறார். சும்மாவே காட்டு காட்டுனு காட்டுவீங்க. இப்ப எந்த சேனல்ல காட்டுவீங்க!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism