Published:Updated:

இப்படிக்கு தோழர் செங்கொடி!

கே.ராஜாதிருவேங்கடம்

இப்படிக்கு தோழர் செங்கொடி!

கே.ராஜாதிருவேங்கடம்

Published:Updated:
##~##

கஸ்ட் 28. செங்கொடி என்ற போராளி தீக்குள் தன்னைக் கருக்கிக்கொண்ட ஓராண்டு நினைவு நாள். பேரறிவா ளன், முருகன், சாந்தன் ஆகியோ ரின் தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்க முக்கியக் கார ணமாக அமைந்தது செங்கொடி யின் உயிர்த் தியாகம்தான்!

 அந்தப் புரட்சிப் பெண்ணின் வாழ்க்கை, 'இப்படிக்கு, தோழர் செங்கொடி’ என்ற குறும்படமாக உருவாகி இருக்கிறது. அந்தப் படத்தைப் பற்றிப் பேசுகிறார் படத்தின் இயக்குநர் வெற்றிவேல் சந்திரசேகர். ''காடுகள் அழிக்கப் பட்டதால் சமவெளிப்பகுதிக்குக் குடிபெயர்ந்து பாரம்பரியத் தொழி லைக் கைவிட்டு கொத்தடிமைக் கூலித் தொழிலாளிகளாக வாழ்ந்து வந்த பழங்குடிகளான இருளர்களில் ஒருவர்தான் சரசு என்கிற செங்கொடி. 2011 ஆகஸ்ட் 28-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை காஞ்சிபுரம் தாலுகா அலுவலகத்தில் தன்னைத் தீக்கிரையாக்கிக்கொண்டவர் செங்கொடி. ஆனால், பழங்குடியினர் தற்கொலை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இப்படிக்கு தோழர் செங்கொடி!

என்பதை அறியாதவர்கள் என்பதை இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும். சுதந்திர இந்தியாவில் பொது பிரச்னைக்காக ஒரு பெண் தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்டது அதுவே முதல் முறை!

யார் இந்தச் செங்கொடி? தனிமனிதராய் அநீதிக்கு எதிராகப் பொங்கியெழுந்த செங்கொடியின் குடும்பச் சூழல், அரசியல் பின்னணி என்ன? இவரது இந்த முடிவு உண்மையில் சாதித்ததுதான் என்ன என்பன போன்ற கேள்விகளுக்கு விடைகளைத் தேடிய என்னுடைய பயணமே இந்த ஆவணப்படம்.

உடலை வருத்திக்கொண்டு கோரிக்கையை முன்வைத்துப் போராடுவதைத்தான் மகாத்மா காந்தி முதல் 12 ஆண்டுகளாக உண்ணாநிலைப் போராட்டம் நடத்தும் இரோம் ஷர்மிளா வரை முன்னிறுத்துகிறார்கள். நம்முடைய உயிரே ஆனாலும் அதை மாய்த்துக்கொள்ளும் உரிமை நமக்குக் கிடையாது. தமிழ்ச் சமூகத்தில் அறிவார்ந்த இளைஞர்களின் உயிரும் அவர்களின் இருப்பும் அவசிய மாக இருக்கும்தறுவாயில் இது போன்ற தற்கொலைப் போராட்டங்கள் தேவை அற்றவை; தவறான முன்னுதாரமாகிவிடக் கூடாது என்பதை இந்தப் படம் மூலம் வலியுறுத்தி இருக்கிறேன். இந்தப் படம் செங்கொடி ஊடாக அரச பயங்கரவாதத்தை அலசுகிறது. செங்கொடி வாழ்க்கையை இந்தப் படம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தும்!'' என்கிறார்.

செங்கொடியின் வாழ்க்கை நிகழ்வுகளை செங்கொடியின் உருவ ஒற்றுமை கொண்ட பெண்களை நடிக்கவைத்துப் படமாக்கி இருக்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism