Published:Updated:

"அந்தக் குழந்தையே நான்தான்!"

க.ராஜீவ்காந்திபடங்கள் : என்.விவேக்

"அந்தக் குழந்தையே நான்தான்!"

க.ராஜீவ்காந்திபடங்கள் : என்.விவேக்

Published:Updated:
##~##

"சொல்லுங்கண்ணே... சொல்லுங்கண்ணே...'' என்று கையில் மைக்குடன் கலாய்க்கும் இமான் அண்ணாச்சியிடம், ''நாங்க கேக்குறோம்... நீங்க சொல்றீயளா?'' என்று வம்புக்கு இழுத்தேன். ''ஏலேய்... பிரிச்சு மேய்ஞ்சுடலாம் வாலே!'' என்று வரவேற்பு கொடுத்தார்.

 ''சிவப்பழகு க்ரீம்கள் இருக்கிற மாதிரி கறுப்பழகு க்ரீம்கள் ஏன் வர்றதில்லை?''

''சின்ன வயசுல மர்பி ரேடியோனு ஒரு ரேடியோ பார்த்திருக்கியளா? அதுல கையக் கட்டிட்டு ஒரு சின்னப்பய செவப்பா நிப்பான்ல, அய்யோ அது நாந்தான். அட! நம்புங்க மக்கா... இப்பக்கூட ஊட்டச் சத்து மாவு லேக்டோஜென் டப்பால ஒரு குழந்தை குப்புறக் கவுந்து 'ஈ’னு இளிக்கும்ல... அய்யய்யோ! அதுவும் நாந்தான். ஆனா, நாளடைவுல கொஞ்சம் கறுத்து, ஒரு சுத்துப் பெருத்துப் போயிட்டேன் பார்த்தி யளா... அதாகப்பட்டது வெயில்ல காட்டுத் தனமா சுத்தி க்ரீம் தடவாமலேயே நம்மாளுங்க சும்மா தகதகனு கறுப்பு மின்னலா மாறிப்புடுறா னுங்க. இதுல க்ரீம் தடவி வேற எனக்கு பட்டி, டிங்கரிங் பார்க்கணுமானுதான் அந்த க்ரீம் தடவறது  இல்லை!''

"அந்தக் குழந்தையே நான்தான்!"

''ரஜினி இமயமலை போறதுக்கும் நித்தியானந்தா இமயமலை போறதுக்கும் என்ன வித்தியாசம்?''

ரஜினி... சிங்கம். சிங்கிளாத்தான் போவாரு. சாமி அப்படி கிடையாது டபுள் டபுளாப் போவாரு. கடேசில மாட்டிக்குவாரு. ரஜினியோட போட்டோ வுக்காக தமிழ்நாடே ஏங்கும். அதே மாதிரி இவரோட வீடியோவுக்கு வாலிப வயோதிக அன்பர்கள் ஏங்குவாங்க. ஏ... என்ன... நாஞ் சொல்றது சரிதானே?''

''நயன்தாராவுக்குப் பொருத்தமான ஜோடி யாரு?''

''ஏய்ய்... ஒரு நாலஞ்சு பேரு இருக்கானுவள்ல? எங்க ஊருலயேகூட ரெண்டு பேரு இருக்கானுக. ஏய்ய்... அதுல ஒருத்தன் பேரு இமான்ல! தம்பி... ஃப்யூச்சர்ல என்னமும் நடக்கலாம்ல?''

''நல்ல காதலுக்கும் கள்ளக் காதலுக்கும் என்ன வித்தியாசம்?''

''நல்ல காதல்னா... அவ அப்பன் அருவாளத் தூக்கிட்டு வருவான். கள்ளக் காதல்னா... அவ புருசன் அருவாளத் தூக்கிட்டு வருவான்!''

''ஷங்கரும் தங்கரும் சேர்ந்து படம் பண்ணா எப்படி இருக்கும்?''

''அந்தப் பட பூஜையே பெரிய கலவரத்துலல்லா முடியும். நாடு தாங்காது சொல்லிப்புட்டேன்!''

''தங்க நாற்கரச் சாலைனு சொல்லிட்டு, தார்ல ரோடு போட்டுருக்காங்களே... ஏன்?''

''அதுக்காக தங்கத்துலயே போடுவாங்கனு எதிர் பார்த்தியளா? சுரண்டிட்டுப் போயி அடமானம் போட்டுருவீங்கள்ல... அதான்! கரிக்கட்டையையே விட்டுவைக்காத நாடு... இதுல தங்கம் வேணுமாம்ல தங்கம்!''

''சின்னத் திரை ஜட்ஜ்களிலேயே சிறந்த ஜட்ஜ் யாரு?''

''ஏ... நம்ம நமீதாக்காதான். திறந்த ஜட்ஜ்னுதானே கேட்டீய! ஓ... சிறந்த ஜட்ஜா? இதுக்கே வீட்டுல இருக்கிற ஜட்ஜ்கிட்ட வெளக்கமாத்தடி விழும். அடுத்த கேள்விக்கு அர்ஜென்ட்டாப் போங்கப்பு!''

''கணவனே கண் கண்ட தெய்வம். அப்ப மனைவி?''

''சாத்தான்னு சொல்வேன்னு எதிர்பார்த்தியளா? இந்தக் கேள்விக்குப் பதிலே கிடையாதுல்லே!''