Published:Updated:

இன்று... ஒன்று... நன்று!

இன்று... ஒன்று... நன்று!

இன்று... ஒன்று... நன்று!

இன்று... ஒன்று... நன்று!

Published:Updated:

விகடன் வாசகர்களுக்கு என்னோட அன்பான வணக்கம்.

ருத்துவர் ஆகணும்னு ஆசைப்பட்ட நான், கர்னாடக இசைப் பாடகி ஆனது இப்போ வரைக்கும் எனக்கு ஆச்சர்யம். அந்த அதிசயம் நிகழ என் வழிகாட்டிகள்தான் காரணம். அந்த வழி காட்டிகள் ரெண்டு பேரைப் பற்றிக் கொஞ்சம் பேச ஆசை. மருத்துவர் ஆகலைன்னாலும் அதே ஆராய்ச்சி மனோபாவத்தோடதான் இசையில் ஈடுபடுறேன்.

இன்று... ஒன்று... நன்று!

'எந்த மேடை ஏறினாலும் அந்த அரங்கத்தை அவ்ளோ தன்மையா வசப்படுத்துறீங்க’னு சந்திக்கிற எல்லாரும் சொல்வாங்க. ஒவ்வொரு மேடையும் எனக்கும் டெஸ்ட்தான். அந்த ஆசிட் டெஸ்ட்டை எப்படி வெற்றிகரமா சமாளிக்கிறேன்னு சில ரகசியங்களைப் பகிர்ந்துக்குறேன். நாம எல்லாருமே சமுதா யத்துல ஓர் அங்கம். ஆனா, அதுக்காக நாம எந்தச் சந்தாவும் கட்டுறது இல்லை. நாம கட்ட வேண்டிய உண்மையான சந்தா எது? நான் புரிஞ்சுக்கிட்டதைக் கொஞ்சம் உங்க ளுக்கும் சொல்றேன்.  

சாதிக்கிற அத்தனை பேரும் ரொம்ப சாதாரண நிலைமையில இருந்து வந்தவங்கதான். காதலோடு ஒரு விஷயத்தை அணுகுறதும் அதற்காக உழைக்கிறதும் கடைசி வரைக்கும் மாணவ மனநிலை யில் கற்றுக்கொண்டே இருப்பதும்தான் ஒரு சாதனையாளர் உச்சத்தை அடையக் காரணமா இருக்கும். அப்படியான சக்சஸ் ஃபார்முலாக்கள் சிலதைச் சொல்றேன்.

பெண்களுக்கு இங்கே நிறைய சுதந்திரம் இருக்கு. ஆனா, அந்தச் சுதந்திரத்தை அவங்க சரியாப் பயன்படுத்திக்கிறாங்களா? கொஞ்சம் சந்தேகமா இருக்கு. பாரதி சொன்ன புதுமைப் பெண் உருவாக இன்னும் என்ன செய்யணும்கிறதை அன்பா சொல்றேன்.

மனிதனாகப் பிறந்தால் மட்டும் பத்தாது... மனிதப் பண்புகளோட வாழணும். சிலருக்குக் கோபம் அதிகமா வரும். சிலர் எப்போதும் வருத்தமாவே இருப்பாங்க. சிலர் அலட்சியமா இருப்பாங்க. ஒவ்வொருத்தரும் தன்னிடம் இருக்கும் எதிர்மறைக் குணங்களை மாத்திக்கிட்டா எவ்வளவு நல்லது விளையும்னு நட்போட சொல்ல வர்றேன்.  

இதெல்லாம் போக 'கண்ட நாள் முதலாய்...’, 'குறையன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா...’ பாடல்களை மனமுருகப் பாடி இருக்கேன்.

30.08.12 முதல் 05.09.12 வரை 044-66808034என்ற எண்ணில் அழையுங்கள். அன்பைப் பரிமாறிக்கொள்ளலாம்!

உங்கள்,
சுதா ரகுநாதன்.