Published:Updated:

"சாமி சத்தியமா நினைக்கலை!"

எஸ்.ஷக்தி, கரு.முத்து, சண்.சரவணக்குமார்படங்கள் : வி.சக்தி, அருணகிரி, ரா.வசந்த் குமார்

"சாமி சத்தியமா நினைக்கலை!"

எஸ்.ஷக்தி, கரு.முத்து, சண்.சரவணக்குமார்படங்கள் : வி.சக்தி, அருணகிரி, ரா.வசந்த் குமார்

Published:Updated:
##~##

டந்த ஜூலை மாதம் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் கலந்துகொண்ட 6,72,204 பேரில், தேர்ச்சி அடைந்தோர் 2,448 பேர். தேர்ச்சி சதவிகிதம் 0.36 மட்டுமே. அதிலும் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடம் பெற்ற அனைவரும் பெண்கள்தான். மகிழ்ச்சியும் பூரிப்புமாக உற்சாகத்தில் திளைக்கும் தமிழச்சிகளைச் சந்திப்போமா...  

 திவ்யா, இடைநிலை ஆசிரியர் தேர்வு.

உடுமலைப்பேட்டை அருகே கரட்டூரைச் சேர்ந்த திவ்யா, இப்போது ஒரு தனியார் பள்ளியின் ப்ளஸ் ஒன் மற்றும் ப்ளஸ் டூ வகுப்புகளின் கணித ஆசிரியை. எம்.எஸ்ஸி., பி.எட். ஆகியவற் றோடு ஆசிரியர் பயிற்சியும்

"சாமி சத்தியமா நினைக்கலை!"

முடித்திருக்கிறார்.

''அரசாங்கப் பள்ளிகளிலேயே முழுக்கத் தமிழ் மீடியத்தில் படிச்ச பொண்ணு நான். எப்பவும் ஃபர்ஸ்ட் ரேங்க்தான் எடுப்பேன். ப்ளஸ் டூ முடிச்சதுமே 'டீச்சிங்தான் திவ்யா உன் ரூட்’னு மனசுல பாடம் பண்ணிக்கிட்டேன். வேலை தேடுறப்ப, என் நோட் புக்ல 'நான் பத்து, பன்னிரண்டாம் வகுப்புகளுக்கு மேத்ஸ் டீச்சர் ஆகணும்’னு ஆயிரம் தடவை எழுதிவெச்சேன். ஒண்ணாம் கிளாஸ்ல இருந்து பத்தாம் கிளாஸ் வரைக்குமான சமச்சீர்க் கல்விப் புத்தகங்களை அட்டை டு அட்டை படிச்சேன். 'ஒரு ரப்பர் டியூப், பலூன்கள், சி வடிவ டியூப், கொஞ்சம் க்ளிப்... இதெல்லாம் உங்ககிட்ட கொடுத்தா என்ன பண்ணுவீங்க?’னு ஒரு கேள்வி. 'லங்ஸ் வடிவம் தயார் பண்ணி பசங்களுக்கு விளக்குவேன்’னு பதில் எழுதினேன். இப்படிப் புரிஞ்சு, ரசிச்சுப் படிச்சா... எப்போ எக்ஸாம் வெச்சாலும் ஆசிரியர்களும் ஆல் பாஸ்தான்!''  

சித்ரா, கணிதம் - அறிவியல் பிரிவு.

"சாமி சத்தியமா நினைக்கலை!"

நாகப்பட்டினம் மாவட்டம், ஆயக்காரன்புலத்தைச் சேர்ந்த சித்ராவுக்கு வயது 39. கணவர் திருப்பதி, ஆசிரியர் பணியில் இருக்கிறார். மூத்த மகள் தீபா, பொறியியல் மாணவி.  இளைய மகள் ஸ்ரீபா, ப்ளஸ் ஒன் மாணவி.

''எங்கப்பா புலவர் வை.பழனிச்சாமி இந்தப் பகுதியில் பிரபலமான ஆசிரியர்.  அதனாலேயே இயல்பா 'ஆசிரியர் லட்சியம்’ எங்க குடும்பத்தில் எல்லார் மனசுலயும் பதிஞ்சிருச்சு. என் அண்ணனும் ஆசிரியர்தான். பிள்ளைங்களும் வீட்டுக்காரரும் கிளம்பின பிறகு சீரியல், தூக்கம், அரட்டைனு நேரத்தை வீணாக்காமப் படிச்சுட்டே இருந்தேன். அதிலும் என் மகளோட பத்தாம் வகுப்புப் புத்தகம்தான் என் கண் கண்ட தெய்வம். அவளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்துக்கிட்டே நானும் அதில் பாடம் படிச்சேன். 120 மார்க் நிச்சயம்னு நினைச்சேன். ஆனா, இப்படி முதல் மார்க் வாங்குவேன்னு சாமி சத்தியமா நினைக்கலை!'' என்று கூச்சமும் சந்தோஷமுமாகச் சொல்கிறார் சித்ரா.    

அருள் வாணி, பட்டதாரி ஆசிரியர் தேர்வு.

''கல்லூரிப் படிப்பு முடிச்சதும் எனக்குக் கல்யாணம் கட்டிரலாம்னு பையன் பார்க்க ஆரம்பிச்சப்போ, '

"சாமி சத்தியமா நினைக்கலை!"

வாத்தியார் மாப்பிள்ளை’தான் வேணும்னு அடம்பிடிச்சு இவரைக் கட்டிக்கிட்டேன். என் வீட்டுக்காரர் ஹரிபாஸ்கர்தான் இப்ப நான் பேட்டி கொடுக்கவே காரணம்!'' என்று கணவர் புகழ் பாடி வரவேற்றார் கம்பத்தைச் சேர்ந்த அருள் வாணி.

''கல்யாணமாகி எட்டு வருஷமாச்சு. சின்ன பிள்ளையிலயே டீச்சரா வரணும்னு ஆசைப்பட்டு, பக்கத்து வீட்டுப் பிள்ளைகளோட டீச்சர் கணக்கா ஸ்கேல் வெச்சு அதட்டிதான் விளையாடிட்டு இருப்பேன். ஆறாம் வகுப்புல இருந்து பத்தாம் வகுப்பு வரைக்குமான சமச்சீர்க் கல்விப் புத்தகங்களைப் படிக்கச் சொன்னார் என் கணவர். அவரை வேலைக்கு அனுப்பிட்டு, மூணு வயசுக் குழந்தை சஹானாவைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிட்டு, வீட்டு வேலையை முடிச்சுட்டு கொஞ்ச நேரம் படிப்பேன். அப்புறம் ரெஸ்ட். ராத்திரி அவரோட உக்காந்து அன்னைக்குப் படிச்சதை ரிவைஸ் பண்ணுவேன். அவர் கேள்வி கேட்க... நான் பதில் சொல்வேன். தெரியலைன்னா அவரு விளக்கிச் சொல்வார். பரீட்சைக்குக் கடைசி ரெண்டு மாசம் முன்னாடில இருந்து சொந்தபந்தங்களோட கல்யாணம் காட்சிக்குக்கூடப் போகாமப் படிச்சுட்டே இருந்தேன். முன்னாடி ஆறு மாசம் நர்சரி ஸ்கூல்ல வேலை பார்த்தேன். அப்போ ரொம்ப சிரமப்பட்டேன். அந்தக் கஷ்டத்தோட ஒப்பிடுறப்போ, பரீட்சைக்குப் படிக்கிறதெல்லாம் கஷ்டமே இல்லைங்க!'' என்று வெள்ளந்தியாகச் சிரிக்கிறார் அருள்வாணி.