"குழந்தை நல்லபடியாப் பொறக்கணும்னு கோயில் குளமெல்லாம் சுத்தி நிறையப் பூஜை செஞ்சேன். ரொம்ப நேரம் தூங்கக் கூடாது. கண்டதைச் சாப் பிடக் கூடாதுன்னு என்னையே வலுக்கட்டாயமா மாத்திக்கிட்டேன். 'எப்படா செல்லம் வெளியே வருவ? நீ எப்போ அம்மா, அப்பாவைப் பார்க்கப்போற?’னு வயித்துல இருக்கிற பாப்பாவைக் கொஞ்சிட்டே இருப்பேன். அடிக்கடி எட்டி உதைப்பா... அப்போலாம் 'அவசரப்படாதே செல்லம்... சீக்கிரம் வந்துடுவ’னு தட்டிக்கொடுத்துட்டே இருப்பேன். இப்படி எல்லாம் நடக்கும்னு நினைச்சிருந்தா என் தங்கத்தை ஆயுசுக்கும் வயித்துக்குள்ளயே வெச்சுப் பாதுகாத்தி ருப்பேனே!'' - ஒவ்வொரு வார்த்தைக்கும் உயிரில் இருந்து சக்தி திரட்டிப் பேசுகிறார் மலர்.

தமிழகத்தில் குழந்தைகளின் வாழ்வியல் சூழல் எவ்வளவு சீரழிந்துகிடக்கிறது என்பதற்கு இந்த வார உதாரணம்... ரஞ்சித் - மலர் தம்பதிக்கு நிகழ்ந்த சோகம்.

சென்னை கஸ்தூரி பாய் காந்தி அரசு மருத்துவ மனையில் மலருக்குப் பிறந்த பெண் சிசு ஊட் டச்சத்துக் குறைபாடு காரணமாகப் பிறந்த பதிமூன்றாவது நாளே இறக்க, பிரேதப் பரி சோதனைக்காக வைக்கப் பட்டு இருந்த சிசுவின் சடலத்தை எலிகள் குதறிவைத்து இருக்கின்றன. குழந்தை இறப்புக்கான காரணமே சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கும் நிலையில், எலிக்கடி காரணமாகச் சிதைந்த கன்னத் துடன் கொடுக்கப்பட்ட சிசுவின் சடலத்தைப் பெற்ற மலரின் வேதனை, உலகத்தின் எந்தத்தாய்க் கும் எப்போதும் நேரக்கூடாத ஒன்று. காதல் மணம்புரிந்த ரஞ்சித் - மலர் தம்பதிக்கு இந்த இழப்பின் வேதனை ஒவ்வொரு கணத்தையும் நரகம் ஆக்கிவிட்டது.

மனைவியைச் சமாதானம் செய்துகொண்டே எங்களிடம் பேசினார் ரஞ்சித். ''நான் சுத்த மாப் படிக்கலைங்க. பைண்டிங் பிரஸ்ல பசை ஒட்டுற வேலை பார்த்தேன். அங்கேதான் மலர் எனக்குப் பழக்கம். அப்பவே குழந்தைங்கன்னா மலருக்குக் கொள்ளை இஷ்டம். எந்தக் குழந் தையைப் பார்த்தாலும் அள்ளித் தூக்கிக் கொஞ்சிட்டே இருக்கும். மிட்டாய், பிஸ்கட்னு நிறைய வாங்கித் தரும். மலரைக் காதலிக்க ஆரம்பிச்ச பிறகுதான் என்வாழ்க் கையே மாறுச்சு. ரொம்பப் பொறுப்பா மாறினேன். மலருக்கு அப்பா, அம்மா ரெண்டு பேருமே இல்ல. அக்காவும் அண்ணன்களும் தான். 'நமக்கு அன்பு கிடைக்க லேனு கவலைப்படக்கூடாது மலரு. நமக்குக் கிடைக்காத அன்பை இன்னொருத்தருக்குக் கொடுத்துப்பார்த்து சந்தோஷப் படணும்’னு நான் சொன்னதும், அதுக்கு என்னை ரொம்பப் பிடிச்சுப்போச்சு. அஞ்சு வருஷம் காதலிச்சோம். ஆனா, அப்ப ஒரு நாள்கூட வெளியே எங்கேயும் சுத்துனது இல்லை. ரெண்டு பக்க மும் சொந்தக்காரங்க சம்மதத் தோட 2010-ம் வருஷம் டிசம்பர் மாசம் கல்யாணம் கட்டிக்கிட் டோம். ஆனா, ஒரு வருஷமாக் குழந்தை தங்கலே!'' என்று ரஞ்சித் நிறுத்தி மலரின் முகம் பார்க்கிறார்.

ஏதோ புரிந்ததுபோல ஒன்றிரண்டு வார்த்தை களாகப் பேசத் தொடங் கினார் மலர்...

''குழந்தை உண்டான தும் அவ்வளவு சந்தோஷப் பட்டேன். குழந்தைக்கு நல்லதுன்னு சொன்னதால மீன் சாப்பிட ஆரம் பிச்சேன். டீ அதிகமாக் குடிக்கக் கூடாதுன்னு நிறுத்திட்டேன். 'குட் மார்னிங்... குட் நைட்’னு தினமும் நடக்குறதை எல்லாம் வயித்துல இருக் கிற பாப்பாகிட்ட சொல்லிட்டே இருப்பேன். குழந்தைக்கு அலர்ஜி ஆகும்னு டி.வி. பாக்குறது, செல்போன் பேசுறது எல்லாம்கூட குறைச்சுக்கிட்டேன். சின்ன விஷயம் கூட என் குழந்தையைப் பாதிச்சுடக்கூடாதுன்னு ஒவ்வொரு நிமிஷமும் உஷாரா இருந்தேன். குழந்தைக்கு என் கையால முதல் டிரெஸ் தெச்சுப் போடணும், சோறு பிசைஞ்சு ஊட்டணும்னு அவ்வளவு ஆசை ஆசையா இருந்தேன். ஆனா...'' சில நிமிடங்கள் வெறித்துப் பார்த்துவிட்டு அவராகவே தொடர்ந்தார்.

''அவளுக்கு ஒரு முத்தம்கூட தரலீங்க நானு. எட்டு மாசத்துலயே பொறந்துட்டா. அவளுக்குச் சத்து இல்லைன்னு சொல்லி அவளை என் பக்கத்துலயே இருக்கவிடலை. திடுக்குன்னு ஒருநாள் 'உன் பொண்ணு இறந்துட்டா’ன்னு சொன்னாங்க. அதுவே எனக்குத் தாங்கலை. கட்டக் கடைசியா அவளை மாரோட அணைச்சுக்கிட்டு ஒரு முத்தம் கொடுக்கலாம்னு போனா, கன்னம் லாம் எலி கடிச்சு... (அழுகைக்கு இடையே திக்கித் திக்கிப் பேசுகிறார்) என் குழந்தை எவ்ளோ அழகா இருந்தாத் தெரியுமா?

'ஹரிணி’ன்னு பேர்வைக்கலாம்னு இருந்தோம். ஹரிணி முகம் என் கண்ணுக்குள்ளயே இருக்கு. நான் கும்பிட்ட எல்லாக் கடவுளுமே என்னைக் கைவிட்டுட்டாங்களே...'' - பெருங்குரல் எடுத்து அழுத மலரை நாம் அங்கு இருந்து கிளம்பும்வரை யாராலும் தேற்ற முடியவில்லை.

பள்ளிப் பேருந்துக்குள் வைத்துக் குழந்தையைக் கொன்றோம். மருத்துவமனையில் இறந்த குழந்தையை எலிகளுக்குத் தின்னக் கொடுக்கிறோம். அப்பாவிக் குழந்தைகளுக்கு இன்னும் என்னவெல்லாம் செய்யக் காத்திருக்கிறோம் நாம்?