விகடன் வாசகர்களுக்கு வணக்கம்...

என்னை ஞாபகம் இருக்கா? ஜார்கண்ட் மாநிலம், சுக்மா மாவட்ட ஆட்சியராக இருந்தபோது மாவோயிஸ்ட் கடத்திய திருநெல்வேலித் தமிழன்... அலெக்ஸ் பால்மேனன். விகடனில் மாணவ நிருபராக வாழ்க்கையை எதிர்கொண்ட நான், இப்போ அதே விகடன் மூலமா உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சிஅடைகிறேன்.

பத்திரிகையாளராகப் பல்வேறு வகையான மனிதர்களையும் விநோதமான சூழ்நிலைகளையும் எதிர்கொண்டேன். ஏழை எளிய மக்களுக்கு எதாவது செய்ய வேண்டுமானால், அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்ற தாக்கம் எனக்குள் அப்போதுதான் வேரூன்றியது. அந்த எண்ணம்தான் இப்போது நான் கலெக்டராக உங்கள் முன் நிற்பதற்குக் காரணம். 'நானும் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆகணும். அதுக்கு எனக்கு வழி காட்டுங்கண்ணா’னு இப்பவும் தமிழ்நாட்டுல இருந்து தினம் எனக்கு அழைப்புகள் குவிகின்றன. அந்த எண்ணம் மட்டுமே இருந்தால் போதாது. அதை வலுப்படுத்திச் செயல்படுத்த வேண்டும். அதற்கு உங்கள் மனதை எப்படித் தயார்படுத்த வேண்டும், எதைத் தவிர்க்க வேண்டும் என்றெல்லாம் சொல்லி இருக்கிறேன். கொஞ்ச நேரம் காது கொடுத்துக் கேளுங்களேன்!

ஜார்கண்ட் மாநிலம், நம் ஊர் மாதிரி கிடையாது. தினமும் பிரச்னைகளோடுதான் விழிக்க வேண்டும், பிரச்னைகளோடுதான் தூங்க வேண்டும். அப்படி நான் சந்தித்த பிரச்னைகளையும் அதைச் சமாளிக்க நான் தேர்ந்தெடுத்த வழிமுறைகளையும் கொஞ்சம் உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.

குழந்தைகளை நல்ல பள்ளிக்கூடமா பார்த்துச் சேர்க்கிறீர்கள். அவர்களும் பாடப் புத்தகத்தில் இருப்பதை அப்படியே படித்து மனப்பாடம் செய்கிறார் கள். நல்ல மதிப்பெண்கள் வாங்குகிறார்கள். அதனால் என்ன பிரயோஜனம்? இந்தப் பாடத்திட்டம் சரியானதுதானா? அதையும் தாண்டி நாம் நம் குழந்தைகளுக்கு என்ன கத்துக்கொடுக்க வேண்டும் என்று தெரியுமா?

'என்னைப் போல ஆகணும்’னு என்னிடமே பலர் சொல்லும்போது சந்தோஷமாக இருக்கும். ஆனால், என் ரோல் மாடல் யார் தெரியுமா? அவரை நான் எப்போது கவனிக்க ஆரம்பித்தேன் தெரியுமா? ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கும். கேளுங்களேன்...

இப்போது அரசுப் பணிகளில் அரசியல்வாதி களின் குறுக்கீடு தவிர்க்க முடியாத ஒரு விஷயம். எனக்கும் அப்படிப்பட்ட குறுக்கீடுகளும் இடையூறுகளும் நிறைய வந்திருக்கின்றன. நான் அதை எப்படிச் சமாளிக்கிறேன்?

இன்னும் பல நல்ல விஷயங்களையும் உங்களிடம் மனம்விட்டுப் பேசுறேன். 06-09-12 முதல் 12-09-12 வரை 044-66808034 என்ற எண்ணில் அழையுங்கள். காத்திருக்கிறேன். நன்றி!

என்றும் உங்கள்,
அலெக்ஸ் பால்மேனன்.