Published:Updated:

இன்று... ஒன்று... நன்று!

இன்று... ஒன்று... நன்று!

பிரீமியம் ஸ்டோரி

விகடன் வாசகர்களுக்கு, இந்த யுகபாரதியின் அன்பும் நலமும்!

 திரைப்பாடல் ஆசிரியராக இருப்பது சௌகரியமானது. நம்முடைய அனுபவங்களோடு, பாத்திரங்களின் தன்மையிலும் இருந்து வாழ்ந்து பார்ப்பது மாதிரியான விஷயம் அது. எப்போதும் எங்கேயும் 'என்னதான்

இன்று... ஒன்று... நன்று!

இருந்தாலும் பழைய பாடல்கள் மாதிரி வருமா?’ என்ற ஆதங்கத்தை யாரும் இப்போது தவிர்த்துவிட்டுப் போக முடியாது. 90% உண்மை இது. நான் சமீபத்தில் எழுதிய பாடல் ஒன்றில் அத்தகைய குறைபாட்டைக் களைய முயல்வது மாதிரி எழுத முயன்றேன். அதன் அனுபவத்தை உங்களிடம் பேசுகிறேன். 'கவிதை என்றால் என்ன?’, 'எது கவிதைக்கு இலக்கணம்?’, 'கவிக்கும் மகா கவிக்கும் இடையிலான வேறுபாடு என்ன? இதையெல்லாம் காரணகாரியத்தோடு ஆராய்ந்தால், பல சுவையான தகவல்கள் கிடைக்கின்றன. உதாரணமிட்டுப் பகிர்ந்துகொள்கிறேன்.

ஒரு யுவனோ, யுவதியோ திருமணம் என்றால் துணுக்குறுவது ஏன்? மனரீதியான அச்சத்துக்கும் பதற்றத்துக்கும் என்ன காரணம்? என் திருமண அழைப்பிதழையே சாட்சி வைத்துப் பேசுகிறேன். கேளுங்கள்.

புத்தக வாசிப்பு குறைந்துவிட்டது என்பது பெரும் கவலை. வாசிப்பே இல்லாமல் போய்விடுமோ என்ற பதற்றம்கூட வருகிறது. தொலைக்காட்சி, இணையதளம், கைபேசி என ஆயிரம் காரணங்கள் சொன்னாலும், சமீபத்தில் நான் ரசித்துப் படித்த ஒரு புத்தகத்தின் தன்மையைப் பகிர்ந்துகொண்டால், உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

கவியரசு கண்ணதாசனின் பாடல்களைக் கேட்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அவரின் எளிய தமிழும் சொல்லாட்சியும் ஆழமான புலமையும் அருமையானவை. சொல்லாத இடத்துக்கும் இட்டுச் செல்லும் அவரின் ஆற்றலை அவரின் ஒரு பாடல் மூலமாகவே உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். எங்கே கண்ணதாசன் நிமிர்ந்து நிற்கிறார் என்பதை நான் சொல்லக் கேளுங்களேன்!

13-09-12 முதல் 19-09-12 வரை  044-66808034 என்ற எண்ணில் அழையுங்கள். கதை கதையாகக் கதைப்போம்!

உங்கள் நண்பன்,
யுகபாரதி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு