Published:Updated:

பாடம் படிப்போம்!

சமஸ்படம் : ஆர்.எம்.முத்துராஜ்

பிரீமியம் ஸ்டோரி
##~##

சென்னை பிரிட்டிஷ் கவுன்சில் அலுவலகம். ஆங்கிலப் பயிலரங்கு. முதல் நாள் வகுப்பு. பாடம் என்ன தெரியுமா? திடீரென ஓர் அசம்பாவிதம் நடந்தால் அந்த இடத்தில் இருந்து எப்படிப் பாதுகாப்பாக வெளியேறுவது என்ற விளக்கம். கட்டடத்தின் முழு அமைப்பு; அவசர வழிகள் எங்கெல்லாம் இருக்கின்றன; எப்படி எல்லாம் பாதுகாப்பாக வெளியேறலாம் என்று திரையில் ஓடுகிறது. இதுதான் முதல் பாடம். அது ஒரு பெரிய கட்டடம். பயிலரங்குக்கு வருபவர்களில் பெரும்பாலானோர் பெரியவர்கள். பயிற்சியோ சில நாட்கள். ஓர் ஆபத்தையும் எதிர்கொண்டிராத குழந்தைகளை நெருக்கடி மிக்க நம்முடைய பள்ளிக்கூடங்களுக்கு நாம் எப்படி அனுப்புகிறோம் என்பதுடன் இந்தச் சூழலை ஒப்பிட்டுப்பாருங்கள். நாம் எவ்வளவு பின்தங்கி இருக்கிறோம்?

உலகிலேயே அதிகபட்சமாக இந்தியாவில்தான் ஓர் இடத்தில் தீ விபத்து நேரிட்டால், அந்த இடத்தில் அப்போது இருப்பவர்களில் 60 சதவிகிதத்தினர் தீயால் பாதிக்கப்படுகிறார்கள். சிவகாசிக்கு வெளியே இருப்பவர்களுக்குத் தீ

பாடம் படிப்போம்!

விபத்து கள் பெரிய விஷயமாகத் தெரியலாம். ஆனால், மாதம் நாலைந்து விபத்துகள் அங்கு நடக்கின்றன; அவற்றில் பல யாருக்கும் தெரியாமல் மூடி மறைக்கப் படுகின்றன. உண்மையில், சிவகாசி விபத்துகளின் மூலகாரணம் தீ அல்ல; அலட்சியம். அரசிடம் அலட்சியம் ஊழலால் உருவா கிறது; மக்களிடம் அலட்சியம் விழிப்பு உணர்வு இன்மை யால் உருவாகிறது.

சிவகாசியில் இயங்கும் பட்டாசுத் தொழிற்சாலைகளில் பாதிக்கும் மேற்பட்டவை அனுமதி பெறாதவை. பட்டாசுத் தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் 2.5 லட்சம் பேரில் கிட்டத்தட்ட 50 ஆயிரம் பேர் குழந்தைத் தொழிலாளிகள். எல்லா விதிமீறல்களும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறைக்குத் தெரியும். லஞ்சம் அதன் கண்களைக் கட்டி இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் அனுமதியற்ற பட்டாசு ஆலைகளில் சோதனைக்குச் சென்ற மாவட்ட வருவாய் அலுவலர் கொம்பையன் ஏராளமான கருந்திரிகளைக் கைப்பற்றினார். அதன் அபாயம்பற்றித் தெரியாமல் கைப்பற்றிய அத்தனை திரிகளையும் எரிக்கச் சொன்னார். திரியோடு சேர்ந்து அவரும் அவருடன் சோதனைக்குச் சென்ற ஒன்பது பேரும் கருகிச் செத்தனர். இந்தியாவில் தீயைப் பற்றி நமக்கு இருக்கும் விழிப்பு உணர்வுக்குச் சின்ன உதாரணம் இது. ஒரு மாவட்ட வருவாய் அலுவலருக்கே இவ்வளவுதான் தெரியும் என்றால், படிப்பறிவு இல்லாத தொழிலாளிகளுக்கு?

ஓர் உயிரின் முக்கியத்துவத்தை நாம் பள்ளிக்கூடங்களில் இருந்து சொல்லிக்கொடுக்கத் தொடங்க வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு