Published:Updated:

இன்று... ஒன்று... நன்று!

இன்று... ஒன்று... நன்று!

இன்று... ஒன்று... நன்று!

இன்று... ஒன்று... நன்று!

Published:Updated:

விகடன் வாசகர்களுக்கு, 'டிராஃபிக்’ ராமசாமியின் வணக்கம்.

னக்கு 'டிராஃபிக்’னு அடைமொழி சேர்த்த விகடன் மூலம் மீண்டும் உங்களைச்  சந்திப்பதில் எனக்குப் பெருமகிழ்ச்சி.

இன்று... ஒன்று... நன்று!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நாம எதுக்கும் பயப்படக் கூடாது. தப்பு செய்யுற யாரையும் நாம கேள்வி கேட்கலாம். கான்ஸ்டபிள்ல இருந்து முதலமைச்சர் வரை யார் தப்பு செய்தாலும் அதைக் கேள்வி கேட்கும் உரிமை எனக்கு, உங்களுக்கு... ஏன், நம்ம எல்லாருக்குமே உண்டு. 'தனி மரம் தோப்பாகுமா?’னு நீங்க கேட்கலாம். ஒத்தையா நிக்கிற ஆலமரம்தான் விழுது பரப்பிப் பெருகி நிக்குது. அது மனுஷங்களுக்கும் பொருந்தும்.

இப்படிச் சமூக நோக்கத்துக்காக வேலை செய்யும்போது எதிர்ப்படும் சவால்கள் என்ன..? அரசாங்கமே எதிர்த்தாலும், அந்த எதிர்ப்பைச் சமாளிக்கிறது எப்படி..? 24 மணி நேரமும் என்னை அணுகுறது எப்படி..? காது கொடுத்துக் கேளுங்க. இப்போதைக்கு இல்லைன்னாலும் எதிர்காலத்துல நிச்சயம் ஒரு நாள் உங்களுக்குக் கை கொடுக்கும்.

நாம தினமும் பயணிக்கிற சாலைகள் எப்படி இருக்கு பாருங்க. அதனால எவ்வளவு உயிர் இழப்பு, பொருள் இழப்பு, நேர இழப்பு? அதிகபட்ச சகிப்புத்தன்மையுடன் எவ்வளவு நாள் காத்திருப்பது? உங்க விலை மதிக்க முடியாத நேரத்தைத் திருடுற உரிமையை அவங்களுக்கு யார் கொடுத்தா? 'இதுக்காக எல்லாம் போராடிக்கிட்டு இருக்க முடியுமா’னு நீங்க கேட்டீங்கன்னா, இதுக்குப் போராடாம வேற எதுக்குப் போராடப்போறீங்க? நமக்குக் குடும்பச் சூழ்நிலைகள் நிறைய இருக்கலாம். அதுக்காக நாம முழுப் பொறுப்பையும் தட்டிக் கழிக்க முடியாது. நான் செய்த சில முயற்சிகளையும் அதனால் எனக்கு அல்ல, மக்களுக்கு நேர்ந்த பலன்களையும் சொல்கிறேன்.

துறை அதிகாரிகளிடம் கடிதம் மூலம் குறைகளை முன்வைப்பது எப்படி? குறைகளைத் தெரிவித்துவிட்டு எத்தனை நாள் வரை காத்திருக்கலாம்? நீங்களே உங்கள் கோரிக்கைகளை முன்வைத்து கோர்ட்டில் வாதாடுவது எப்படி? அதிகாரிகளையும் கோர்ட்டையும் அணுகுவது பெரிய விஷயம் கிடையாது. அதற்கான சில உத்திகளைச் சொல்லித்தர்றேன்.

முக்கியமா, எதுக்கெடுத்தாலும் நாம அரசாங்கத்தைக் குறை சொல்லிட்டே இருக்கக் கூடாது. அதேசமயம், கேள்வி கேட்கக் கூடிய முழுத் தகுதியை நாம் பெற்றிருக்க வேண்டும். விதிகளை நாமே மதித்து நடக்க வேண்டும். தனி மனித ஒழுக்கத்தை மறந்துவிட்டு நீங்கள் அரசைக் கேள்வி கேட்க முடியாது.

20-9-12 முதல் 26-9-12 வரை 044-66808034 என்ற எண்ணில் அழையுங்கள். நல்ல சட்டமாப் பேசுவோம்... சரியா?

உங்கள்
'டிராஃபிக்’ ராமசாமி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism