Published:Updated:

இன்று... ஒன்று... நன்று!

இன்று... ஒன்று... நன்று!

இன்று... ஒன்று... நன்று!

இன்று... ஒன்று... நன்று!

Published:Updated:

விகடன் வாசகர்களுக்குப் பாச வணக்கம்,

 எனக்குத் தெரிஞ்ச நாலு விஷயங்களை உங்களுக்குச் சொல்றதுல ரொம்ப சந்தோஷம்.

உடல் நலத்தோட இருக்கணும்னு ஆசைப்படுறோம். ஆனா, அததுக்குரிய கவனம் எடுக்கிறோமா? சோர்வா இருக்கும்போது, ஓய்வு எடுக்கிறது இல்லை. தூக்கம் வரும்போது, தூங்குறது இல்லை. இப்படி இயற்கைக்கு மாறா செயல்பட்டா, நோய்கள் வராம என்ன செய்யும்?

உணவை எப்படிச் சமைக்கணும், அதற்கான வழிமுறைகள் என்ன, எல்லா உணவுகளையும் சமைச்சுச் சாப்பிடணும்கிற அவசியம் இருக்கா என்ன? என்னோட அனுபவத்தில் நான் கத்துக்கிட்ட விஷயங்களைச் சொல்றேன்... தெரிஞ்சுக்கங்க.

இன்று... ஒன்று... நன்று!

100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை நாடு முழுக்க அரசாங்கம் செயல்படுத்துது. அந்தத் திட்டம் திருப்திகரமா இல்லைனு நாலும் தெரிஞ்ச வல்லுநர்கள் சொல்றாங்க. பக்கத்துல, ஆந்திரத்துல ஒரு அருமையான திட்டத்தை உண்டாக்கி, நடைமுறைப்படுத்தி இருக்காங்க. மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்தானே? அந்த விவரத்தைப் பகிர்ந்துக்கிறேன். நாட்டுக்கு நல்லது நடந்தா, வீட்டுக்கும் நல்லதுதானே?

பூமி சூடாகிட்டே இருக்கு. பருவ மழையும் அடிக்கடி தப்பிப்போகுது. இந்தியாவின் பாதி மாநிலங்களில் வறட்சி தாண்டவமாடுது. மீதி மாநிலங்களில் வெள்ளம். இப்பவே... இந்த நிமிஷமே ஒரு கோடி மரமாவது இந்தியாவில் நடப்படணும். பூமி வெப்பம் என்னென்ன நாச விளைவுகளை உண்டாக்கும் தெரியுமா? எங்கேயோ தூர தேசாந்திரத்தில் இல்லை... இங்கே நமக்கு ரொம்பப் பக்கத்தில் என்னென்ன அபாயம் நேரும்னு சொல்றேன். பூமிக்குப் பச்சைப் போர்வை போர்த்த வேண்டிய அவசியம் நம்ம எல்லாருக்கும்தான் உரியது.

எந்தவொரு நல்ல விஷயத்தையும் பழமைனு சொல்லிப் புறக்கணிக்கிறோம். நமக்கு எவ்வளவோ நல்லது செஞ்சு ஒண்ணு மண்ணா உறவாடிக்கிடந்த பசு மாடுகளைக்கூட கொலைக் களத்துக்கு அனுப்பிட்டோம். நாடு முழுக்கப் பால் கிடைக்காம 43 சதவிகித குழந்தைகள் வயிறு உப்பி, ரத்தசோகையில் தள்ளாடுதுங்க. நம்மோட அடிப்படைத் தேவைகளைக்கூட இழக்கத் துணிஞ்சுட்ட நம்மளோட இயலாமையை உங்களோடு பகிர்ந்துக்கிறேன். சொல்ற எதுவும் படிச்சதோ, கேட்டதோ இல்லீங்க. பட்ட அனுபவத்தில் கிடைச்சதுதான்.

27-9-12 முதல் 3-10-12 வரை 044- 66808034 எண்ணில் என்னைக் கூப்பிடுங்க. மனசுக்கு நிறைவான விஷயங்களைப் பேசுவோம்... சரியா?

உங்கள்
நம்மாழ்வார்.