Published:Updated:

ஆசியாவின் வேகமான விரல்கள்!

ஆசியாவின் வேகமான விரல்கள்!

பிரீமியம் ஸ்டோரி
##~##
ஸ்
டீஃபன் தேவஸி... இந்திய இசை உலகின் வசீகரன். ஆசியாவின் அதி வேகமான கீ-போர்டு ப்ளேயர். ரெக்ஸ் பாண்ட் எனப்படும் பாரம்பரியம் மிக்க கிறிஸ்டியன் இசைக் குழுவில் வாசித்த ஒரே இந்தியன். அப்போது இவரது வாசிப்பைக் கேட்டு ரசித்தவர் இரண்டாம் போப் ஜான் பால். மிக வேகமாக கீ-போர்டு வாசிப்பதில் லண்டன் டிரினிட்டி ஸ்கூல் ஆஃப் மியூஸிக்கில் 92.2 சதவிகிதம் வாங்கிய ஸ்டீஃபன், லண்டன் பில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ராவில் ரஹ்மானுக்கு அடுத்து கீ-போர்டு வாசித்த இரண்டாவது இந்தியன். ''அச்சோ, போதும் போதும் சார். சிம்பிளா... எனக்கு மியூஸிக் பிடிக்கும் அவ்வளவுதான்!'' என்கிறார் ஸ்டீஃபன்!  
ஆசியாவின் வேகமான விரல்கள்!

''கேரளாவைச் சேர்ந்தவன் நான். சின்ன வயசுலயே கீ-போர்டு காதல். இசைக் கலைஞர்களுக்கு சென்னைதான் தாய் மடி. அதனால், தமிழகம் வந்த என்னை ஹரிஹரன் சார் அரவணைச்சார். நான்கு வருடங்கள் ஹரிஹரன் - லெஸ்லியோடு இணைந்து பணியாற்றிய காலத்தில்தான், இசையை முழுமையாக உணர்ந்துகொண்டேன். அதோடு, ஜாகீர் உசேன், ஏ.ஆர்.ரஹ்மான், உஸ்தாத் அம்ஜத் அலிகான், டாக்டர் எல்.சுப்ரமணியம், டிரம்ஸ் சிவமணி, விக்கு விநாய கம், மாண்டலின் ஸ்ரீனிவாஸ் என இசை ஜாம்பவான்களின் அறிமுகங்கள் கிடைத்தன. இவர் கள் அனைவருடனும் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். இதில் என்னை மிகவும் கவர்ந்தவர் ரஹ்மான். வருத்தமோ, சந்தோஷமோ ஒரே ஒரு நொடிதான் பிரதிபலிக்கும். அடுத்த நொடியே இயல்பாகிவிடுவார். இசை சம்பந்தமாக எந்த சமரசமும் செய்துகொள்ள மாட்டார்.

ஒரு ஸ்டேஜ் ஷோவில் 'ஜானே து ய ஜானே நா’ இந்திப் படத்தின் பாடலுக்கு என்னை கீ-போர்டு வாசிக்கச்

ஆசியாவின் வேகமான விரல்கள்!

சொல்லியிருந்தார். எனக்குப் பெரிய வேலை இல்லை. சின்ன பிட் மட்டும் வாசிக்க வேண்டும். ஆனால், ரிகர்சலின்போது தடுமாறிவிட்டேன். 'என்ன?’ என்று கேட்டார். 'எனக்கு இந்த ப்ளே வரவில்லை’ என்றேன். அவரைவிட உயரமான ஓர் இடத்தில் நான் நின்றுகொண்டு இருந்தேன். மேடையின் இண்டு இடுக்கு வழியாக ஏறி வந்தவர், அதை வாசித்துக் காட்டினார். 'நாளைக்கு ஷோவில் என்னால் ஏறி வந்து கீ-போர்டு வாசிக்க முடியாது. ஓர் இரவு முழுக்க உன்னிடம் இருக்கு. பயன்படுத்திக் கத்துக்கோ’ என்று கிளம்பிவிட்டார். மறு நாள் ஷோவில் நான் சரியாக வாசித்தேன். ஷோ முடிந்ததும், 'ஒரு தப்பை சின்னதா இருக்கும்போதே சரி பண்ணிடணும். இல்லேன்னா, நமக்குத்தான் பிரச்னை’ன்னு தட்டிக்கொடுத்துச் சிரித்தார். அதுதான்

ரஹ்மான்!''- அமைதியாகச் சிரிக்கிறார் ஸ்டீஃபன்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு