Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:
இன்பாக்ஸ்

•  திருப்பதி ஏழுமலையானுக்குக் காணிக்கையாகக் குவிந்த நகைகளைவைத்து ஒரு கண்காட்சி நடத்த இருக்கிறார்கள். சமீப காலங்களில் குவிந்த தங்க, வைர, வைடூரிய நகைகளுடன் மன்னர்கள் காலத்தில் வழங்கப்பட்ட பல அரிய பொக்கிஷங்களும் காட்சிக்கு வைக்கப்படுமாம். சும்மாவே கூட்டம் அம்மும்... இப்போ பின்னுமே!

• ஐ.நா. சபை வெ

இன்பாக்ஸ்

ளியிட்ட 'அச்சுறுத்தும் போக்குடன் செயல்படும் நாடுகள்’ என்கிற பட்டியலில் இலங்கையும் இடம் பிடித்திருக்கிறது. அப்பாவி மக்களுக்கு எதிரான கொடுமைகள், அரச பயங்கரவாதம், தனி நபர் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகள் ஆகியவையே இலங்கையின் இந்தப் பெருமைக்குக் காரணம். இது ஆரம்பம்தான்!

• அமெரிக்காவில் வழங்கப் படும் மிக உயரிய விருதான அமெரிக்க நாடாளுமன்ற விருது வென்ற முதல் வெளிநாட்டவர் என்ற பெருமை பெற்றிருக்கிறார் ஆங் சான் சூ கி. ஒபாமா கையால் விருதைப் பெற்றதோடு மேடையில் பேசும்போது, ''இணை யத்தில் மூழ்கியே நேரத்தை வீணடிக்காதீர்கள்!'' என அமெரிக்க இளைஞர்களுக்கு அறிவுரை கூறியிருக்கிறார் ஆங். இந்திய இளைஞர்களுக்கும் பொருந்தும்!

இன்பாக்ஸ்

• பாலிவுட் வாய்ப்புகள் இழந்து, ஐ.பி.எல். புகழும் மறைந்த நிலையில் இப்போது தன் நடிப்பில் வெளிவர இருக்கும் 'இஷ்க் இன் பாரிஸ்’ படம்தான் ப்ரீத்தி ஜிந்தாவின் பெரிய நம்பிக்கை. படத்தை ஹிட் அடிக்க வைக்க பலே பப்ளிசிட்டியில் தீவிரமாக இருக்கிறார் ப்ரீத்தி. கடந்த வாரம் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்கு வந்த சல்மான் கானின் கன்னத்தில் திடீர் பச்சக் ஒன்றைக் கொடுத்து அதிர்ச்சிக்கு உள்ளாக்கிவிட்டார். மீடியா... மீடியா... ஓடியா!

• அப்பா விஜய் மல்லையா கடன் மேல் கடன் வாங்கி தத்தளித்துக்கொண்டு இருந்தாலும், மகன் சித்தார்த்துக்கு அந்தக் கவலை எல்லாம் இல்லை. 'கிங் ஃபிஷர்’ காலண்டருக்கான செக்ஸி மாடல்களைத் தேர்ந்தெடுப்பதில் பிஸியாக இருக்கிறார் சித்தார்த். இந்தப் 'பணிச் சுமை’ யைக் குறைக்க அவருக்குத் தோள் கொடுத்திருக்கிறார் மாடல் அழகி லிசா ஹைடன். அப்ப(£) கடன் வாங்கித்தானே ஆகணும்!

• 'இந்தியாவும் இந்தியாவின் முதல் பிரதமரான நேருவும்தான் ஃபேஷன் உலகின் இன்ஸ்பிரேஷன்!’ எனச் சொல்லி அசத்தி இருக்கிறார் அமெரிக்காவின் பிரபல ஃபேஷன் டிசைனர் வாரா வாங். நேரு பயன்படுத்திய வட்ட காலர், கோல்டு எம்ப்ராய்டரி ஆடைகள்தான் ஃபேஷன் உலகில் புதிய மாற்றங்களை உருவாக்கின என்று பாராட்டிக் குவிக்கிறார். நேரு ராக்ஸ்!

இன்பாக்ஸ்

• பாப் பாடகி ஷகிரா, தன்னுடைய காதலர் ஜெரார்டு மூலம் கர்ப்பமாகி இருக்கிறார். திருமணம் செய்துகொள்ளாத இருவரும் இந்தச் செய்தியை உலகத்துக்கு அறிவிப்பதில் மிகுந்த சந்தோஷப்படுவதாகத் தெரிவித்துள்ளனர். ''குழந்தை பிறந்த பிறகு கல்யாணம் பண்ணிக்கொள்ளலாமா, வேண்டாமா என்பதுகுறித்து யோசிப்பேன்!'' என்கிறார் ஷகிரா. எதுக்கும் பாப்பாகிட்டயும் கருத்து கேட்டுக்குங்க!

இன்பாக்ஸ்

• கணவன் வில்லியமுடன் நெருக்கமாக இருந்த 'டாப்லெஸ்’ படங்கள் வெளியான பரபரப்பை சட்டை செய்யாமல், நல்லெண் ணப் பயணத்தில் பரபரப்பாக இருக்கிறார் இங்கிலாந்தின் அரச குடும்பத்து மருமகள் கேட் மிடில்டன். குழந்தைகளைக் கொஞ்சு வது, பழங்குடியினரின் ஆடைகளை அணிந்து விருந்தோம்பலை ஏற்றுக்கொள்வது என வலம் வருவதால், கேட் மீதான கவர்ச்சி முத்திரை மறைந்து, எளிமை ஏஞ்சல் மதிப்பு அதிகரிக்கிறது. டயானா 2..?

இன்பாக்ஸ்

• 'சிங்கம் 2’-வில் செம குத்துப் பாட்டு ஒன்றுக்கு ஆட நயன்தாராவைக் கேட்டு இருக்கிறார்களாம். அவர் இல்லை என்றால் பாலிவுட் ஹீரோயினுக்குப் பறக்கு மாம் வாய்ப்பு. வாங்க தாரா!