Published:Updated:

இந்திய இளைஞர்களின் இன்ஸ்பிரேஷன் !

சொல்கிறார் சச்சின் ம.அருளினியன் படம்: ந.வசந்தகுமார்

இந்திய இளைஞர்களின் இன்ஸ்பிரேஷன் !

சொல்கிறார் சச்சின் ம.அருளினியன் படம்: ந.வசந்தகுமார்

Published:Updated:
##~##

கிரிஷா நாகராஜேகௌடா...  பாராலிம்பிக் இந்தியன்!  

மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற கிரிஷா, இப்போது இரண்டு கோடி இந்திய மாற்றுத் திறனாளிகளின் ரோல் மாடல்.  கர்நாடகத்தின் பின்தங்கிய கிராமம் ஒன்றில், எளிய குடும்பத்தைச் சேர்ந்த கிரிஷாவின் பெற்றோர், விவசாயக் கூலிகள். பிறந்தபோதே கிரிஷாவின் இடது காலில் சிறிய குறைபாடு இருந்தது. அப்போது அதைச் சரிசெய்வதற்கான சிகிச்சை செலவுக்குப் பணம் இல்லை அவர் பெற்றோரிடம்.

''அடுத்த வேளை சாப்பாட்டுக்கே பணம் இல்லாதப்போ, ஆபரேஷன் செலவுக்கு அப்பா எங்கே போவார்? ஆனா, அதுவும் நல்லதுக்குத்தான்னு இப்ப புரியுது!'' என்று சிரிக்கிறார் கிரிஷா.

இந்திய இளைஞர்களின் இன்ஸ்பிரேஷன் !

''இறுதிப் போட்டியில் நீங்களும் தங்கம் வென்ற பிஜி நாட்டின் வீரரும் ஒரே அளவு தூரம்தான் தாண்டினீர்கள். ஆனால், குறைந்த முயற்சிகளில் தாண்டியதால் அவருக்குத் தங்கப் பதக்கம். நூலிழையில் தங்கத்தைத் தவறவிட்டதற்காக வருந்துகிறீர்களா?''    

''அட... நீங்க வேற! மாற்றுத் திறனாளிகளுக்குனு தனியா விளையாட்டுப் போட்டிகள் நடக்குதுங்கிறதே எனக்கு ரொம்ப நாளாத் தெரியாது. பல வருஷமாத் தடகள விளையாட்டுப் போட்டிகளில் ஆரோக்கியமான வீரர்களுடன்தான் போட்டி போட்டுட்டு இருந்தேன். அங்கேயும் சில வெற்றிகள் கிடைச்சது. ஏதோ ஒரு சமயம் யாரோ ஒருத்தர் சொன்ன சின்ன தகவலைப் பிடிச்சு, மாற்றுத் திறனாளிகள் போட்டிகளில் பங்கெடுத்துக்கிட்டேன். அந்த நிலைமையில் இருந்து இப்போ இங்கே வந்து நிக்கிறதே எனக்குப் பெருசா இருக்கு. இருந்தாலும் தங்கத் தைத் தவறவிட்டது வருத்தம் தான். அடுத்த பாராலிம்பிக்ஸ் இருக்கே... அப்போ பார்த்துக் கலாம்!''  

''சச்சின் டெண்டுல்கர் போன்ல பேசிப் பாராட்டினாராமே... என்ன சொன்னார்?''

''எனக்கு அவர்தான் ஹீரோ. 'நான் சச்சின் பேசுறேன்’னு போன்ல அவர் சொன்னப்போ, எங்கேயோ மேல பறக்குற மாதிரி இருந்துச்சு எனக்கு. ரொம்ப உரிமை எடுத்துக்கிட்டுப் பேசினார். 'நீ இந்திய இளைஞர்களுக்கு இன்ஸ்பிரேஷன். இதுதான் ஆரம்பம். இன்னும் நிறைய சாதிக்கணும். எப்பவும் எதுக்காகவும் விட்டுக்கொடுக்காதே’னு சொன்னார். வாழ்க்கை முழுக்கக் கேலி கிண்டல்களையே

இந்திய இளைஞர்களின் இன்ஸ்பிரேஷன் !

சந்திச்சு வளர்ந்த எனக்கு, பல கோடி இந்தியர்களின் ரோல்மாடல்கிட்ட இருந்து அப்படி ஒரு வார்த்தையைக் கேட்டது பெரிய கிஃப்ட். இன்னும் மனசுக்குள்ள அவர் குரல் ஓடிட்டே இருக்கு!''

''சாய்னா நேவால்கூட உங்களைப் பாராட்டி இரண்டு லட்ச ரூபாய் பரிசாக் கொடுத்திருக்காங்களே?''

''அந்தத் தங்கையின் அன்புக்கு நன்றி சொல்ல என்கிட்ட வார்த்தை இல்லை. ரெண்டு லட்சம் பணத்தைவிட... அதைக் கொடுக்குற மனசு இருக்கே... அதுதான் பெரிசு!''

''உங்களைப் போல சாதிக்கத் துடிக்கும், ஆனால் வாய்ப்பு கிடைக்காத மாற்றுத் திறனாளிகளுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க?''

''நான் எப்பவும் என்னை ஊனமுற்றவனாகவே நினைச்சது கிடையாது. என் கால்ல ஒரு சின்ன குறை. அதுக்குப் பதிலா வேற ஏதோ ஒரு திறமை என்கிட்ட நிச்சயம் இருக்குன்னு எனக்கு நானே சொல்லிக்குவேன். ஒவ்வொரு மாற்றுத் திறனாளியும் அப்படித் தான். அவங்களுக்குள்ள ஏதோ ஒரு விசேஷம் இருக்கும். அதைக் கண்டு பிடிச்சு பட்டை தீட்டுங்க. உங்க முன்னேற்றத்தில் நம்பிக்கை உள்ளவங்க உங்களைச் சுத்திஇருக் கிற மாதிரி பார்த்துக்கங்க, எனக்கு என் கோச் சத்தியநாராயணா இருக்கிற மாதிரி!''  

''பலருக்கு நீங்க ஒரு முன்மாதிரி. உங்களோட முன்மாதிரி யார்?''

''குத்துச் சண்டை வீரர் சுஷில் குமார். தொடர்ச்சியாக பெய்ஜிங், லண்டன் ஒலிம்பிக்குகளில் பதக்கம் ஜெயிச்சவர். போராடும் குணம் நிரம்பின அவர், மென்மையான சுபாவம்கொண்டவர். அது எனக்குப் பிடிக்கும்!''

''பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் தென் இந்தியர் நீங்கள். அரசாங்கத் தரப்பில் அதற்கான அங்கீகாரம் கிடைக்கிறதா?''

''இன்னும் இல்லை. ஆனா, கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன். விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதில் தமிழ்நாட்டு அரசாங்கம்தான் மத்த மாநிலங்களுக்கு முன்மாதிரி. என்னுடன் பாராலிம்பிக் பயிற்சியில் ஈடுபட்ட தமிழக வீரர்கள் திருமலைக்குமார், ரஞ்சித்குமார்... அவங்க ரெண்டு பேரும்  திறமைசாலிகள்தான். எனக்கு எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை. வெற்றி அடையாளம் இல்லாத அவங்களுக்கும் தமிழ்நாடு அரசாங்கம் ஏதாவது உதவி செய்தால், நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்!

நான் ரஜினியோட வெறி பிடிச்ச ரசிகன். 'பாட்ஷா’, 'படையப்பா’ படத்தை எல்லாம் எத்தனை தடவை பார்த்திருப்பேன்னு எனக்கே கணக்கு தெரியாது. 'சிவாஜி’ பார்த்துட்டு ரஜினி மாதிரி மொட்டை அடிச்சுட்டுத் திரிஞ்சேன். தமிழ்ப் பத்திரிகையில இருந்து வந்திருக்கீங்க... ரஜினி சார்கிட்ட சொல்லுங்க... கர்நாடகத்துல உங்களோட தீவிர ரசிகன் பாராலிம்பிக்கில் பதக்கம் ஜெயிச்சிருக்கான். அவனுக்கு உங்களைப் பார்க்க அவ்வளவு ஆசைனு!''

இந்திய இளைஞர்களின் இன்ஸ்பிரேஷன் !

''எப்போ கல்யாணம்..?''

''2016 ஒலிம்பிக்கில் தங்கம் அடிச்சுட்டுக் கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்!''

''ஏன் காதலிகிட்ட சபதம் போட்டிருக்கீங்களா?''  

''காதலியா? 'மஹதீரா’ படம் பார்த் துட்டு காஜல் அகர்வாலை சின்சிய ராக் காதலிச்சேன். என்னா அழகு... என்னா சிரிப்பு. எனக்கு ஓ.கே-தான்!''  

- கண்ணடித்துக் குறும்பாகச் சிரிக்கிறார் கிரிஷா!