ஈரோடு மாவட்டத்தில், ஈமு கோழி முட்டையைக் காட்டி முதலீட் டாளர்களை மொட்டை அடித்த நிறுவனங்களை நினைவு இருக்கிறதா? அந்தச் சூடு ஆறுவதற்குள் அதே மாவட்டத்தில் ஐந்து நிதி நிறுவனங்கள், அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி, பல நூறு கோடிகளைக் கபளீகரம்செய்து இருக்கின்றன. ஒரு வாரமாக ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தைக் கண்ணீரும் கம்பலையுமாக முற்றுகையிட்டுக் கொண்டு இருக்கிறார்கள் முதலீட்டாளர்கள். இது ஆரம்பமோ, முடிவோ அல்ல... காலம் காலமாகத் தொடரும் துயரம். அன்றாடம் பார்த்தும், படித்தும், பட்டும்கூட ஏமாறுகிறார்கள் மக்கள்.

இல்லத்தரசி 20 ரூபாய் டாப்-அப் செய் வதற்குக்கூட ஏராளமான கேள்விகள் கேட்கும் கணவன்மார்களும், ஐந்து ரூபாய்க்கு வாங்கும் வெண்டைக்காய்க்காக பத்துப் பதினைந்து காய்களை உடைக்கும் இல்லத்தரசிகளும் இதில் மட்டும் ஏமாறுவது எப்படி?

இரண்டே காரணங்கள்தான். அறியாமை, பேராசை! இன்னும் எத்தனைக் காலம்தான் இதுவும் கடந்துபோகும்?

தமிழகத்தில் எங்கு நிதி நிறுவன மோசடிகள் நடந்தாலும், அதை விசாரிக்க, சென்னை அண்ணா நகரில் பொருளாதாரக் குற்றப் பிரிவுத் தலைமை அலுவலகம் இயங்குகிறது. எந்த நேரமும் ஏதாவது ஒரு ஏமாந்த கும்பல் இங்கே வந்து நிற்கிறது. சில மாதங்களுக்கு முன்பு எஸ்.எம்.எஸ். அனுப்பி ஆன்-லைனில் பணத்தை ஆட்டையைப் போட்டது 'விங் டெக்னோ' என்கிற மோசடி நிறுவனம்.

10,000 முதலீடு செய்தால், ஐந்து ஆண்டுகளில் 1 லட்ச ரூபாய் தருவோம் என்று வந்ததாம். விழுந்தடித்துக் கொண்டு ஆன்-லைன் மூலம் பணத்தைக் கட்ட... ஒரு கட்டத்தில்

30 லட்சத்தைச் சுருட்டிக்கொண்டு ஓடிவிட்டார்கள். ஒடிசாவில் பதுங்கி இருந்தவர்களைச் சமீபத்தில்தான் பிடித்தது போலீஸ்.

வெளிநாட்டின் அறக்கட்டளையில் இருந்து வயதான ஏழை கிறிஸ்துவ மக்களுக்கு பென்ஷன் தருவதாகச் சொல்லி முன்பணம் கேட்டிருக்கிறது ஒரு கும்பல்.

10 ஆயிரம் கட்டினால், அடுத்து வரும் 12 மாதங்களில்

54 ஆயிரத்தைப் பல கட்டங்களில் திருப்பித் தருவோம் என்பதுதான் அந்த கம்பெனியின் விளம்பரம். 5,000 பேர் சுமார்

20 கோடியைக் கட்டி ஏமாந்தார்கள்.

இடம் வாங்கித் தருவதாகச் சொல்லி நடக்கும் மோசடிகளும் அதிகம். புறநகரில் ஏமாந்த ஒரு விவசாயியிடம் அட்வான்ஸ் தந்து விட்டு, அந்த இடத்துக்குத் தன்னுடைய வாடிக் கையாளர்களை காரில் கூட்டிப்போய், 'இங்கே ஏர்போர்ட் வரப்போகிறது. அங்கே, நீச்சல் குளம் வரப்போகிறது' என்று கதைவிடுகிறார்கள். இதை நம்பி லட்சக்கணக்கான மக்கள் பணம் கட்டி ஏமாந்துகொண்டே இருக்கிறார்கள். சமீபத்தில் ஜே.பி.ஜே. சிட்டி டெவலப்பர்ஸ் என்கிற ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று, 3,648 முதலீட்டாளர்களிடம்

41 கோடி அளவுக்குச் சுருட்டிவிட்டது. சம்பந்தப்பட்டவர்களைப் பிடித்து பெரும்பான்மை சொத்துகளை முடக்கி இருக்கிறது போலீஸ்.

அடுத்து, ஆன்லைன் லாட்டரி மோசடி. 'அதிர்ஷ்டசாலியான உங்களுக்கு ஆஸ்திரேலியா லாட்டரியில்

1,000 கோடி கிடைத்துள்ளது. அதன் பிராசஸிங் தொகையாக 1 லட்சம் ரூபாயை ஆன்லைனில் கட்டினால், அடுத்தக் கட்ட தகவல் வரும்’ என்று சொல்லி மெயில் தட்டுவார்கள். பேராசையில் விழுந்து தினமும் ஏமாறுகிறவர்கள் பல ஆயிரம் பேர். ஆப்பி ரிக்க நாட்டுக்காரர்கள்தான் இந்த வகை மோசடியில் ஈடுபடுவதாக சைபர் க்ரைம் போலீஸ் சொல்கிறது.

இந்த மோசடிப் பேர்வழிகளைப் பிடிப்பதோ, அவர்கள் சுருட்டிய பணத்தை மீட்பதோ சுலபமான காரியம் இல்லை. இதில் இன்னொரு வகை, பண வீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்க டாலரின் விலையை நிர்ணயம் செய்வதாகச் சொல்லி ஏமாற்றுவது. ஊர் பேர் தெரியாதவர்களின் வங்கிக் கணக்குக்குப் பணத்தை மாற்றி விட்டு, ஏமாறுகிறார்கள்.

இதற்கு எல்லாம் என்ன காரணம்?

''முதலில் பொதுமக்கள் பேராசையை விட்டொழிக்க வேண்டும்'' என்கிறார் சட்ட ஆலோசகர் ரமேஷ். சட்டப் பாதுகாப்புகுறித்துத் தொடர்ந்து பேசியவர், ''இந்தி யாவில் மோசடி நிறுவனங் களைக் கட்டுப்படுத்தப் போது மான சட்டங்கள் உண்டு. ஆனால், அவற்றை நடை முறைப்படுத்துவதில் ஏராள மான சிக்கல்கள் இருக்கின்றன. முதலீடு வசூலிக்கும் பல நிறுவனங்கள் கம்பெனி சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப் பட்டு இருக்கும். ஆனால், ரிசர்வ் வங்கியில் நிதி நிறுவனங் களாகப் பதிவுசெய்யப்பட்டு இருக்காது. அதனால், அரசு பதிவுபெற்ற நிறுவனம் என்று சொல்வதை நம்பாதீர்கள். ரிசர்வ் வங்கியில் நிதி நிறுவனமாகப் பதிவுசெய்யப் பட்டு உள்ளதா என்பதைக் கவனியுங்கள். ரிசர்வ் வங்கியே தனது இணையதளத்தில் அங்கீகாரம் பெற்ற நிதி நிறுவனங்களின் பட்டி யலையும் வெளியிட்டுள்ளது'' என்கிறார் ரமேஷ்.

என்ன ஆகின பழைய வழக்குகள்?

ஏமாந்த முதலீட்டாளர் களுக்காகக் கடந்த 16 ஆண்டுகளாகப் போராடி வருகிறார்கள் முதலீட்டாளர் கூட்டமைப்புத் தலைவர் ராமமூர்த்தி மற்றும் துணைத் தலைவர் சீத்தாராம்.

''20 லட்சம் முதலீட்டாளர் கள் முழுமையாகப் பணம் கிடைக்காமல் தவிக்கிறார்கள். 480 மோசடி கம்பெனிகள், அதன் உரிமையாளர்கள் சுமார் 1,000 பேர் நம் மக்கள் பணத்தைத் தின்று விட்டார்கள். ஆனால், யாருமே பெரிதாகத் தண்டனை அனுபவிக்கவில்லை. வாரக் கணக்கில் மட்டும் சிறையில் இருந்துவிட்டு வெளியே வந்து, வெவ்வேறு வழிகளில் மக்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.

தமிழக போலீஸ் டி.ஜி.பி-யாக இருந்து ஓய்வு பெற்ற ஒருவர், சிலரைச் சேர்த்துக்கொண்டு நிதி நிறுவனம் தொடங்கினார். அந்த நிறுவனத்தின் சுயரூபம் முதலீட்டாளர்களுக்குத் தெரிந்ததும், நிறுவனத்தின் நிதியைக் கடனாக ஒரு நிறுவ னத்துக்குக் கொடுத்ததுபோலவும் அந்த நிறுவனம் கடனைக் கட்டாமல் ஏமாற்றிவிட்டதுபோலவும் ஆவணம் தயார் செய்து சட்டரீதியாகத் தப்பித்துவிட்டார்கள்.

'விசுதா ஃபைனான்ஸ்’ என்கிற நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களில் பாதிப் பேருக்கு மட்டுமே பணம் கிடைத்தது. சுமார் 2,000 பேர் களுக்குக் கிடைக்கவில்லை. 'லட்சுமி கோல்டு ஹவுஸ்’ நிறுவனம் சுமார் 1,000 பேரை ஏமாற்றி யது. 'இம்பீரியல் கோல்டு ஹவுஸ்’ நிறுவனத்தில் ஏமாந்தவர்கள் எண்ணிக்கை 5,000-க்கும் அதிகம். அந்த நிறுவனத்தினர் தலைமறைவாக இருக்கி றார்கள் என்கிறார்கள்.

இதற்கு எல்லாம் தீர்வு என்ன?

''முதலீட்டாளர்கள் கொஞ்சமேனும் விழிப்பு உணர்வோடு செயல்பட வேண்டும்'' என்கிறார் நிதி ஆலோசகர் நாகப்பன். தேக்கு மரங்கள் முதல் ஈமு கோழிகள் வரை எந்த முதலீடாக இருந்தாலும் நம் பணம் பறிபோகாமல் பாது காப்பாக முதலீடு செய்ய என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்று அவரே பட்டியலிட்டார்.

''முதலீடுகளில் இரண்டு வகையான முதலீடு கள் இருக்கின்றன. ரிஸ்க் உள்ள முதலீடு, ரிஸ்க் இல்லாத முதலீடு. வங்கி, அஞ்சலகம் இரண்டில் செய்யும் முதலீடுகளைத் தவிர மற்ற அனைத்து முதலீடுகளுமே ரிஸ்க் உள்ள முதலீடுகள்தான். ரிஸ்க் முதலீடுகளிலும் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று புராடக்ட் ரிஸ்க் - ஈமு கோழி, நாட்டுக் கோழி போன்றவை இதில் வரும். மற்றொன்று மார்க்கெட் ரிஸ்க்- பங்குச் சந்தையின் போக்கைச் சார்ந்த முதலீடுகள்.

நிதி நிறுவனங்களில் முதலீடு செய்யும்போது கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள்:

1. பணத்தைத் திரட்டும் நிறுவனங்கள், வங்கி அல்லாத நிறுவனங்களாக இருந்தால் அது ஆர்.பி.ஐ-யிடமோ ஆர்.பி.ஐ. அனுமதி பெற்ற அமைப்பிலோ பதிவுசெய்துள்ளதா என்பதை முதலில் சரி பாருங்கள்.

2. அரசு அனுமதி பெற்ற நிறுவனம் என்றால், உடனே கண்ணை மூடிக்கொண்டு நம்பாதீர்கள். நம் நாட்டில் அரசிடம் ஒரு நிறுவனம் அனுமதி பெறுவது எளிது. ரிசர்வ் வங்கியில் பதிவுசெய்து இருப்பதுதான் முக்கியம்.

3. பெயரில் லிமிட்டெட் என்று வரும் நிறுவனங் களை மட்டுமே ஓரளவுக்கு நம்ப முடியும்.

4. ஒவ்வொரு முதலீட்டுத் திட்டத்துக்கும் அதற்கு என முறைப்படி இருக்கும் ஒழுங்குமுறைக் கண்காணிப் பாளரிடம் அனுமதி வாங்கப்பட்டு இருக்கிறதா என்பதைக் கவனியுங்கள். குறைந்தபட்சம் அந்த நிறுவனம்பற்றிய தகவல்களை இணையதளத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம் (http:/www.mca.gov.in/). செயல்படும் நிறுவனங்கள் மட்டுமல்லாது மூடப்பட்ட நிதி நிறுவனங்கள் குறித்த தகவல்களும் இந்தத் தளத்தில் இருக்கும்.

6. எப்போதும் பணமாகத் தராதீர்கள். முடிந்தவரை காசோலைப் பரிவர்த்தனையைப் பயன்படுத்துங்கள். காரணம்... நிறுவனங்கள் விளம்பரப்படுத்தும் பெயரும் காசோலையில் உள்ள பெயரும் வேறுவேறாக இருந் தால், உங்களால் அவர்களை ஒன்றுமே செய்ய முடியாது.

7. முடிந்தவரை இத்தனை வருடத்துக்குப் பிறகுதான் பணம் கிடைக்கும் எனக் கட்டுப்படுத்தும் 'லாக் இன் பீரியட்’ திட்டங்களைத் தவிருங்கள். இதற்கு உதார ணம், தேக்கு மரத் திட்டத்தில் பணம் போட்டு ஏமாந்தவர்கள்.

8. ஈமு கோழி வளர்ப்புப் போன்ற தொழில்கள் மீது முதலீடு செய்தால், லாப விகிதம், பிசினஸ் மாடல் போன்றவற்றை அலசுங்கள். இவ்வளவு வருமானம் கிடைக்கும் என ஆசை காட்டுபவர்கள், அவர்களே ஏன் அந்தத் தொழிலைச் செய்யவில்லை என்பதை யோசித்துப் பாருங்கள். வங்கிகள் கொடுக்கும் அதிகபட்ச முதலீட்டு வருமானமே 9 சதவிகிதம்தான். நம் நாட்டில் எந்த முதலீட்டிலுமே 12 சதவிகிதத்துக்கு மேல் வருமானம் வர வாய்ப்பு இல்லை. நிச்சய வருமானம், உத்தரவாத லாபம் இந்த வார்த்தைகளை வங்கிகளைத் தவிர வேறு யார் சொன் னாலும் நம்பாதீர்கள்'' என்கிறார் நாகப்பன்.

இதை எல்லாம் தாண்டி அரசின் பங்களிப்பும் இருக்கிறது. ரிசர்வ் வங்கி அதிகாரிகள், சட்ட வல்லுநர்கள், காவல் துறை அதிகாரிகள் அடங்கிய கண் காணிப்புக் குழு ஒன்றை அமைக்க வேண்டும். ஆரம்பத்தில் இருந்தே நிதி நிறுவனங்களை இந்த அமைப்பு தொடர் கண்காணிப்பில் வைத்துக் கட்டுப்படுத்த வேண்டும்; மாதம்தோறும் ஆய்வுகள், தணிக்கைகள் செய்ய வேண்டும். இப்படி ஒரு வலுவான அமைப்பு அரசு சார்பில் நிச்சயம் தேவை. ஆனால், மோசடி நடக்கும் வரை ஆட்சியாளர்களையும் அதிகாரிகளையும் மோசடிக்காரர்கள் கவனித்துவிடுவதால், குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள்; பாதிக்கப்பட்டவர்களோ வீட்டோடு முடங்கிக்கிடக்கிறார்கள்!

அரசே வளர்த்த ஈமு!

ஈமு மோசடித் தொழிலை வளர்த்துவிட்டதே அரசு சார்ந்த துறையான 'பொதிகை’ தொலைக்காட்சிதான் என்கிற உண்மை எத்தனை பேருக்குத் தெரியும்? 2009-ம் ஆண்டில் இருந்து இந்த ஆண்டு வரை ஒவ்வொரு புதன் மாலையிலும் 'பண்ணைக்காரன்’ என்ற நிகழ்ச்சி பொதிகையில் 'ஈமுவாயணம்’ பாடியது. தற்போது கைதுசெய்யப்பட்டு உள்ள குருசாமி ஸ்பான்சர் செய்த நிகழ்ச்சி அது. அதேபோல், அரசு வானொலியான 'கொடைக்கானல் எஃப்.எம்.’மும் ஈமு புராணம் ஒலிபரப்பி, மக்களை உசுப்பிவிட்டது. இதுவரை ஈமு விவகாரத்தில் மட்டும் பாதிக்கப்பட்ட 9,000 பேர் புகார் கொடுத்து இருக்கிறார்கள்.

212 கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளது. ஆனால், இவ்வளவுக்குப் பின்பும் உசிலம்பட்டி அருகே மானூத்து கிராமத்தில் ஈமு வளர்ப்பதை என்னவென்று சொல்ல... அங்கு அதை வளர்க்கும் பன்னீர்செல்வத்திடம், 'நீங்களும் ஏமாந்துட்டீங்களா?' என்று கேட்டால், 'இல்லைங்க. இவங்க ரொம்ப நல்லவங்க. எனக்கு மாசா மாசம் ஆறாயிரம் வந்துடுது' என்கிறார். அவர் செலுத்திய முதலீடு மூன்று லட்ச ரூபாய். அதற்கு ஆறாயிரம் எம்மாத்திரம்? முதலீடு திரும்ப வருமா? என்றுகூட யோசிக்காமல் இருக்கிறார்கள் அப்பாவிப் பொது மக்கள்.

அடுத்து, ஈமுவைப் போலவே நாட்டுக் கோழி, வெள்ளாடு, சீமைப் பன்றி வளர்ப்பு போன்ற திட்டங்கள் விவசாயிகளைக் குறிவைத்து விரிக்கப்பட்டு இருக்கின்றன!

- எஸ்.ஷக்தி, கே.கே.மகேஷ்