Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:
இன்பாக்ஸ்
##~##

• சயீஃப் - கரீனா திருமணம்பற்றி நாளுக்கு ஒரு வெடி வெடிக்கிறது பாலிவுட். ஹரியானாவில் திருமணம், மும்பையில் வரவேற்பு, விருந்துக்கு பான் மசாலா மட்டுமே 15 அயிட்டங்கள் என்பதில் தொடங்கி 'ராம்லீலா’ பட வாய்ப்பை கரீனா உதறியதற்கு கர்ப்பம்தான் காரணம் என்பது வரை சரம் சரமாகப் பரபரப்புகள். ஆனால், 'சயீஃப்ரீனா’ ஜோடியோ எதற்கும் பதில் கொடுக்காமல் உற்சாக ஊர்வலம் வந்துகொண்டு இருக்கிறது. எல்லாம் கல்யாணம் வரைக்கும்தான்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

• காங்கிரஸின் பிரதம வேட்பாளர் பட்டியலில் இப்போது இடம் பிடித்திருப்பவர் டெல்லி முதல்வர் ஷீலா தீக்ஷித். விலைவாசி உயர்வால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நடுத்தர வர்க்க மக்களின் எதிர்ப்பைச் சமாளிக்க, 'நடுத்தர வர்க்க லுக்’ கொண்ட ஷீலாவையே களம் இறக்கலாம் என்று நினைக்கிறாராம் சோனியா. ஆனால், ஒருவேளை ராகுல் போட்டியிட முடியாத சூழலில்தான் ஷீலாவுக்கு அந்த வாய்ப்பு கிடைக்குமாம். மக்கள் கொலவெறில இருக்காங்க. சிக்கிடாதீங்க ஷீலாம்மா!

• பாகிஸ்தான் அதிபர் சர்தாரி மகன் பிலால் பூட்டோ வுக்கும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹீனா ரப்பானிக்கும் 'அது’ என ஹாட் நியூஸ் அடித்துக்கொண்டிருக்க, சம்பந்தப்பட்ட இருவரும் அதுகுறித்த கவலை  இல்லாமல் தத்தமது வேலையில் கண்ணாக இருந்தார்கள். ரப்பானியின் கணவர் ஃபிரோஸ் தான் ஏகத்துக்கும் கலங்கிப்போய் இருக்கிறார். ''என் மனைவி ரொம்ப நல்லவ. இந்த செய்திக் குப் பின்னாடி சர்வதேச அளவி லான சதி இருக்கு'' என்றெல் லாம் புலம்பி, உச்சகட்டமாக இதுபற்றி விரிவான விசாரணை வேண்டும் என்று வேறு கேட்டு இருக்கிறார். குடும்பத்துல குண்டு வெச்சுட்டாங்களே!

இன்பாக்ஸ்

• தேர்தல் ஜுரத்தில் தகிக்கிறது குஜராத். எல்லோரையும் முந்திக்கொண்டு பிரசாரக் களத்தில் சுற்றிச் சுழலத் தொடங்கிவிட்டார் மோடி. சமீபத்தில் குஜராத் வந்த சோனியா, தனது பேச்சில் ஒரு வார்த்தைகூட மோடியைப் பற்றிக் குறிப்பிடாமல் கடந்து சென்றதே மோடியின் முதல் ரவுண்ட் வெற்றிதான் என்று குதூகலிக்கிறார்கள் பா.ஜ.க. புள்ளிகள். கருத்துக் கணிப்புகளும் மாநிலத் தில் மோடி அலையைத்தான் சுட்டிக்காட்டுகின்றன. ஜெயிச்சா மோடி மஸ்தான் வித்தைதான்!

இன்பாக்ஸ்

• இயக்குநருக்காக ஹீரோக்கள் காத்திருக்கும் காலம் இது. 'ஈ’ ராஜமௌலி இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படத்துக்காகத் தன் திருமணத்தையே தள்ளிப்போட்டு இருக்கிறார் தெலுங்கு நடிகர் பிரபாஸ். ராஜமௌலி படத்தில் முழுக் கவனமும் செலுத்த வேண்டும். அதற்குத் திருமண ஏற்பாடுகள் தடையாக இருந்துவிடக் கூடாது என்பதே காரணமாம். ரஜினி படம் எப்போ பிரதர்?

• பிரான்ஸ் அதிபர் ஹோலாண் டின் 47 வயது துணைவி வலேரி. கணவர் அதிபர் என்றாலும் கடந்த 22 வருடங்களாக 'பாரீஸ் மாட்ச்’ என்ற பத்திரிகையில் தான் பார்த்துவரும் வேலையைத் தொடர்கிறார் வலேரி. இரண்டு முறை விவாகரத்தான வலேரி, ஹோலாண்டைச் சந்திக்கும் முன்னரே மூன்று குழந்தைகளுக்குத் தாயானவர். ''எனது குழந்தைகளை வளர்க்க ஹோலாண்டை எதிர்பார்க்க மாட்டேன். அதற்கு எனது பத்திரிகைப் பணியின் வருமா னம் உதவும்'' என்கிறார் வலேரி. அழகும்மா!

இன்பாக்ஸ்

• குத்துச்சண்டையில் மேரி கோம் என்றால், மல்யுத்தத்தில் பபிதா குமாரி. சமீபத்தில் நடந்த உலக மல்யுத்தப் போட்டியில் 51 கிலோ எடைப் பிரிவில் ரஷ்யாவின் ஜமீராவைத் தோற்கடித்து வெண்கலப் பதக்கம் வென்றிருக்கிறார் பபிதா. உலக அளவில் மல்யுத்தப் போட்டியில் பதக்கம் வென்ற இரண்டாவது இந்திய வீராங்கனை இவர்தான். சீக்கிரமே தங்கம் தட்டு தங்கம்!

இன்பாக்ஸ்

• சல்மான் கானுக்கு 'சூப்பர் ஹீரோ’ அந்தஸ்து பெற்றுக் கொடுத்த 'தபாங்’ படத்தின் இரண்டாவது பாகம் தயாராகிறது. முதல் பாகத்தில் சல்மான் கான் அணிந்திருக்கும் இதய வடிவிலான குளிர் கண்ணாடி ஹிட் அடித்தது. அதேபோல, இரண்டாம் பாகத்தில் இடம்பிடித்திருக்கும் சரக்கு... மெட்டல் பால். எதிரிகளை உலோகப் பந்து மூலம் அதிரடிக்கப்போகிறாராம் சல்மான். தபாங் டமால்!  

• பொற்கோயில் ராணுவத் தாக்குதலை முன்னெடுத்த முன்னாள் தளபதி குல்தீப் சிங் பிரார் மீது லண்டனில் கத்திக்குத்து தாக்குதல் நடந்தது அல்லவா? ஊர் திரும்பியதும் உள் துறை அமைச்சகத்தில் கூப்பிட்டுப் பேசி இருக் கிறார்கள். நம்பிக்கையோடு சென்றவரிடம், ''கண் காணாத இடமாகச் சென்றுவிடுங்கள்; பாதுகாக்கிறோம்'' என்று ஆலோசனை சொல்லி இருக்கிறார்கள். வெறுத்துப்போன பிரார், ''என்னுடைய இறுதி நாட்களை நான் ஏன் சிறைவாசத்தில் கழிக்க வேண்டும்? என்னைப் பாதுகாத்துக்கொள்ள எனக்குத் தெரியும்'' என்று சொல்லிவிட்டுத் திரும்பி இருக்கிறார். வயசானாலும் சிங்கம் சிங்கம்தானே?

இன்பாக்ஸ்

• இந்தியில் பிரபலமான பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் கலந்துகொள்ள தென்னிந்தியப் பிரபலம் ஒருவருக்கு அழைப்பு வந்துள்ளது. நடிகை சாயாலி பகத், அமீர் கானின் சகோதரர் ஃபைசல் கான், நவ்ஜோத் சிங் சித்து போன்ற பிரபலங்களோடு கலந்துகொள்ள அழைப்பு வந்திருக் கும் அந்தப் பிரபலம்... நித்தியானந்தா. சாமிக்கு கேமரான்னாலே அலர்ஜி ஆச்சே!

இன்பாக்ஸ்

• 12 வயதுச் சிறுவனுக்கு லிப் கிஸ் கொடுத்து சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் அமெரிக்கப் பாடகியும் நடிகையுமான கேரி அண்டர்வுட். கேரி கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில், 12 வயதுச் சிறுவன் ஒருவன் கேரிக்கு முத்தம் கொடுப்பது தனது 'நீண்ட கால’ ஆசை என்று சொல்லிச் செல்ல, உடனே அந்தச் சிறுவனை நெருங்கி யாரும் எதிர்பாராத தருணத்தில் 'நச்’ என்று லிப் கிஸ் அடித்துவிட்டார் கேரி. அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்க, 'நான் 13 வயதில் முதல் முத்தம் வாங்கினேன்!’ என்று தகவல் சொல்லி அப்ளாஸ் அள்ளியிருக்கிறார் கேரி. நீங்கள்லாம் நல்லா வருவீங்க!

இன்பாக்ஸ்

• அமெரிக்க அதிபருக்கான தேர்தல் பிரசாரத்தில் இத்தனை நாட்களாக ஓங்கியிருந்த ஒபாமாவின் கை, ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு இடையிலான முதல் விவாதத்துக்குப் பிறகு சற்றே இறங்கிவிட்டது. போட்டி வேட்பாளரான மிட் ரோம்னியின் பேச்சுக்குப் பதிலடி கொடுக்க முடியாமல் மேடையில் ஒபாமா திணற, விவாதத்துக்குப் பிறகான கருத்துக் கணிப்பில் ரோம்னிக்கு ஆதரவாக 67 சதவிகித வாக்குகளும் ஒபாமாவுக்கு ஆதரவாக 25 சதவிகித வாக்குகளும் கிடைத்துள்ளன. அடுத்த இரண்டு விவாதங்களில் ஒபாமா பேசும் பேச்சுதான் அவரது அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும்.டி.ஆர்-கிட்ட டிப்ஸ் கேளுங்க மிஸ்டர் ஒ!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

• இறந்துபோன ஒசாமா பின்லேடனிடம் செக்ஸ் அடிமையாக இருந்தவர் கோலா பூப். ஒசாமாவுக்கும் தனக்கும் இடையிலான தொடர்பு பற்றி 'டயரி ஆஃப் தி லாஸ்ட் கேர்ள்’ என்ற புத்தகத்தில் எழுதி இருந்தார் கோலா. விற்பனை யில் சக்கைப்போடு போட்ட அந்தப் புத்தகம் இப்போது, 'பின்லேடன்ஸ் செக்ஸ் ஸ்லேவ்’ என்ற பெயரில் படமாகிறது. தனது கதாபாத்திரத் தில் நடிக்க நவோமி காம்பெல், கெர்ரி வாஷிங்டன் ஆகியோரைச் சிபாரிசு செய்திருந்தார் கோலா. ஆனால், 'ஸ்லம்டாக் மில்லியனர்’ புகழ் ஃபிரீடா பின்டோவை நடிக்கவைக்க முடிவு செய்திருக்கிறது தயாரிப்புத் தரப்பு. 'சாக்லேட் நிறமும் ஆப்பிரிக்க ஸ்டைல் முடியும் கொண்ட வள் நான். எனது வேடத்தில் எப்படி அந்தப் பெண் பொருந்திப்போவாள்?’ என்று புலம்புகிறார் கோலா. ஃப்ரீயா விடுங்க கோலா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism