Published:Updated:

நாய்க்காக்கு சொரி டைஜின் மன்மோகன்!

க.ராஜீவ்காந்திபடங்கள் : கே.ராஜசேகரன்

நாய்க்காக்கு சொரி டைஜின் மன்மோகன்!

க.ராஜீவ்காந்திபடங்கள் : கே.ராஜசேகரன்

Published:Updated:
##~##

"கேள்வி கேட்ட வாத்தியாருகிட்டயே பதிலுக்குக் கேள்வியாக் கேட்டு நோகடிச்சவய்ங்க நாங்க... அப்பவே அப்பூடி... இப்பக் கேக்கவா வேணும்... கேளுங்கப்பு!'' - ஜாலி, கேலி பேட்டி என்றதும் உற்சாகமாகக் காற்றில் பரோட்டா விசிறியபடியே வந்து அமர்ந்தார் சூரி.

 '' 'சுந்தரபாண்டியன்’ படத்துல வர்ற மாதிரி எந்தப் பொண்ணையாவது ஏலம், குத்தகைக்கெல்லாம் விட்டுருக்கீங்களா?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''கொன்டேபுடுவாய்ங்க. அது படத்துல காமெடிக்காக விட்டது. நெசத்துல தூக்கி உள்ளே வெச்சுடுவாய்ங்க. காலத்துக்கும் களிதான் திங்கணும்.''

''உங்ககூட நடிச்சதுக்கு அப்புறம்தான் விமல், சிவகார்த்திகேயன், விஷ்ணு எல்லாம் ஃபேமஸ் ஆனாங்களாமே?''

''ஏதோ மெட்ராஸ்ல கால ஊன்டிட்டோம்னு நினைக்கிறப்ப, அதைக் கெடுத்து வெரட்டி விட்டுருவீங்கபோல. இப்பதான் விமலும் சிவாவும் 'சூரி இருந்தா நல்லா இருக்கும்’னு சொல்லி சான்ஸ் வாங்கித் தர்றாங்க. இனிமே, 'சூரி இருந்தா நல்லா இருக்காது’னு சொல்லவெச்சிடுவீங்களாட்டம் இருக்கு. ஒருத்தன் வாழ்க்கையைக் காலி பண்றதுக்காக இவ்ளோ பெரிய கேமரா பொட்டிய வேற தூக்கிட்டு வந்துட்டீங்களே?''

நாய்க்காக்கு சொரி டைஜின் மன்மோகன்!

''சரோஜாதேவி யூஸ் பண்ண சோப்பு டப்பா இப்ப யார்கிட்ட இருக்கும்?''

''சோப்பா... ஊர்ல கம்மாங்கரைல நீந்திக்கிடந்த பயலுகளுக்கு சோப்பே தெரியாது. இதுல சோப்பாம் டப்பாவாம்... போங்கப்பு!''

''ஈமு கோழி முட்டைல போட்ட ஆம்லேட் சாப்பிட்டு இருக்கீங்களா?''

''அடுத்த வாரம் ஈரோட்டுல ஷூட்டிங் இருக்கு. இப்பம் ஏதாவது சொன்னேன்னா அடி வெளுத்துடுவாய்ங்க... வண்டியைக் கௌப்புங்க!''

''அழகான பொண்ணுங்களைப் பார்த்தா மனசுக்குள்ள என்ன தோணும்?''

''அது வந்து அப்படியே... (சட்டென நிறுத்தி யோசித்து) வேணாம்... வீட்டுல பாலிடாயில் கொடுத்துக் கொன்னுடுவாய்ங்க!''

''சரத்குமார் கட்சியோட சின்னம் என்ன?''

''நான் கஞ்சி குடிக்கிற கிண்ணத் தைப் பத்திக் கேட்டாலே எனக்குத் தெரியாது. அதுல அண்ணன் கட்சியைப் பத்திலாம் கேட்டா... எப்படியோ வம்புல மாட்டி விட்டுட்டீங்க... நல்லாருங்கப்பு.''

''ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் என்னதான் பிரச்னை?''

சட்டென முழித்துப் பார்த்து சத்தம் வராமல் 'வேண்டாம்... வேண்டாம்’ என்பதுபோல சைகை செய்கிறார்.

''அது இல்லைங்க... அவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல ஏதோ தகராறுனு சொல்றாங்களே... அதுபத்தி உங்க கருத்து என்...''

(சட்டென இடைமறிக்கிறார்) ''யேப்பா... யேய்... நான்தான் பஞ்சாயத்தே வேண்டாம்னு பாலீஷா சொல்றேன்ல... அப்புறமும் என்னத்தப் போட்டு நோண்டி நொங்கெடுக்குற. அவங்க பேரைக்கூட எனக்கு ஒழுங்கா சொல்லத் தெரியாது... விட்ருங்க என்னை.''

'' 'நாய்க்காக்கு சொரி டைஜின்’ - அப்படின்னா என்ன?''

(புரியாமல் முழிக்கிறார். இன்னொரு முறை சொல்லச் சொல்லிக் கேட்டுக்கொண்டு யோசித்துச் சொல்கிறார்.) ''அநேகமா ஹாலிவுட்ல ஹீரோயின் புள்ளைங்களுக்குச் சொல்ற புத்திமதியா இருக்கும். நாயை நல்லாக் குளிப்பாட்டிச் சுத்தமா வைங்க. இல்லேன்னா, நாய்க்கு சொறி புடிக்கும். அப்புறம் அது நமக்கும் பரவும்... அப்புறம் டைஜின் மாதிரி மருந்தெல் லாம் எடுத்துக்கணும்... அதனால நாயை எப்பவும் நல்லாக் குளிப்பாட்டி...''

''அதெல்லாம் இல்லைங்க. அப்படின்னா ஜப்பான் மொழியில் 'பிரதம மந்திரி’னு அர்த்தம். சரி... கொஞ்சம் ஈஸியா கேப்போம். 'ப்ளூ ஃபிலிம்’க்கு ஏன் அந்தப் பேரு?''  

''அந்த ஏரியா பக்கமே நான் போனதில்லை. என்னை ஆளை விடுங்க!''

''இப்போ உடனே ஒரு பஞ்ச் டயலாக் சொல்லுங்க?''

(யோசிக்கிறார்) ''நாங்கள்லாம் கரன்ட் கம்பிலயே கபடி வெளயாடுறவய்ங்க!''

''ஓ... தமிழ்நாட்டுல தொடர் மின் வெட்டை அமல்படுத்திய ஆளும் கட்சியைக் கிண்டலடிச்சு கரன்ட் கம்பில கபடி விளையாடுவோம்னு சொல்றீங்களா?''

''ஏண்ணே.... இல்லே ஏன்னு கேக்கிறேன்? இவ்ளோ கொலை வெறியோட திரியிறீங்க? எந்தப் பக்கம் போனாலும் அணையப் போடுறீங்க! பேட்டி வாபஸ்ணே... திண்ணையைக் காலி பண்ணுங்க.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism