Published:Updated:

சிக்ஸ்பேக் சிங்கம்... சைஸ் ஜீரோ ஹீரோ!

க.ராஜீவ்காந்திபடங்கள் : கே.ராஜசேகரன்

##~##

"பஞ்ச் சொன்னாலே நம்மளை பஞ்சர் ஆக்கிடுவாங்க... இதுல ஏடாகூடப் பேட்டியா... ஜீன்ஸ், சட்டை, வாட்ச், ஷூ, தலைமுடி எல்லாம் சேர்த்தாலும் 40 கிலோ தாண்டாது. கொஞ்சம் பார்த்துச் செய்யுங்க!'' என்று பம்மினார் மனோபாலா.

 ''மின்வெட்டால் ஏற்படும் நன்மைகள் ஏதாவது சொல்லுங்க?''

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''மூன்றாம் உலகப் போர் வந்தா, சாயங்காலம் தமிழ்நாடு மேல குண்டு போட முடியாது. ஏன்னா, வானத்துல இருந்து பார்த்தா சென்னைக்கு அப்புறம் தமிழ்நாடே இருளோனு இருக்கும்ல!''

''பவர் ஸ்டாருக்கு பாடிகார்டாப் போவீங்களா?''

  ''தங்கமாப் போவேங்க. இன்னித் தேதிக்கு தமிழ்நாட்டுல சொன்ன தேதிக்கு கரெக்டா சம்பளம் வர்ற ஒரே டிபார்ட்மென்ட் பவர் ஸ்டார் டிபார்ட்மென்ட்தான்!''

''ஆய கலைகள் 64-ல் உங்களுக்கு எத்தனை கலைகள் தெரியும்?''

''ஓவியம் பத்தி தெரியும். மத்தது பத்திலாம் ஷேர் பண்ணிக்க முடியாதுங்க!''

சிக்ஸ்பேக் சிங்கம்... சைஸ் ஜீரோ ஹீரோ!

''வடிவேலுவுக்குப் போட்டி யாத்தான் சந்தானத்தை நீங்க வளர்த்துவிடுறீங்கனு சொல்றாங்களே... உண்மையா?''

''அடியாத்தீ... இந்த மூஞ்சியைப் பார்த்து இவ்ளோ பெரிய கேள்வி கேக்குறீங்களே... இது உங்களுக்கே அநியாயமாத் தெரியலை? யாரா இருந்தாலும் அவங்கவங்க வாழ்க்கை அவங்கவங்க கையிலதானே தவிர, மத்தவங்களால எதுவும் நடக்காது. வடிவேலு திரும்ப வருவாரு. அது மட்டும் எனக்குத் தெரியும்!''  

''ஒரு ஏ ஜோக் சொல்லுங்களேன்?''

''எனக்கு லேடீஸ் ஃபேன்ஸ்தான் அதிகம்னு ஐ.நா. புள்ளிவிவரம் ஒண்ணு சொல்லுது. அதை நான் கெடுத்துக்க விரும்பலை!''

''கர்நாடக முதல்வர் பேர் என்ன?''

''சீரியல்ல வெள்ளிக்கிழமையானா டைரக் டரை மாத்துற மாதிரி மாத்திக்கிட்டே இருக்காங் களே. யாரைன்னு சொல்ல?''

''காமெடியன்லாம் இப்போ ஹீரோவா நடிக்கிறாங் களே... நீங்க எப்படி ஹீரோவா நடிப்பீங்க?''  

''ஹீரோன்னா சொன்னீங்க... நான் ஹீரோவா நடிக்கலாம்னா சொன்னீங்க? கம்பெனி கார் வந்துச்சா... ஏறிப் போனோமா... ரெண்டு டயலாக் பேசினோமா... வெண் பொங்கல் சாப்பிட்டோமா... அமவுன்ட் வாங்குனோமானு வந்துட்டே இருக்கேன். அது உங்களுக்குப் புடிக்கலையா?''

''உங்க வாலிப வயசுல எத்தனை பேரு உங்ககிட்ட புரொபோஸ்பண்ணி யிருப்பாங்க?''

''புரொஃபசர்கிட்ட என்னைப் பத்திப் போட்டுக்கொடுத்தவங்க தான் இருக்காங்க. புரொ போஸாம்... இப்பவே இப்படி இருக்கேன். அப்போ எப்படி இருப்பேன்னு கற்பனை பண்ணிக்கூடப் பார்த்துராதீங்க!''

''ஜீரோ சைஸ்ல இருந்து எப்ப சிக்ஸ்பேக் வைப்பீங்க?''

''டபுள் டெக்கர் பஸ் மாதிரிங்க நான். என் உடம்புல சைஸ் ஜீரோவும் இருக்கும். சிக்ஸ் பேக்கும் இருக்கும். அது நீங்க பார்க்குற பார்வை யைப் பொறுத்தது. கதைக்குத் தேவைப்பட்டா, அதைக் காட்டுவேன். மத்தபடி, நமக்கு எதுக்கு விளம்பரம்?!''

''அஞ்சலி, அனுஷ்கா, ஹன்சிகா... இவங்கள்ல உங்க கனவுல வர்ற ஹீரோயின் யாரு?''

''அபிநய சரஸ்வதி, கன்னடப் பைங்கிளி சரோஜாதேவி!''

''சம்பளம் சரியா கொடுக்காதவங்களை எப்படிச் சமாளிக்கிறீங்க?''

''அதுக்குத்தான் நாங்கள்லாம் ஒரு கோட் வேர்டு வெச்சிருக் கோம். படத்துக்குப் புக் பண்ண வரும்போதே சங்கேத பாஷை யில் பேசிப்போம். 'பிட்ச் எப்படி?’னு கேட்போம். 'எக்கச்சக்கமா பவுன்ஸ் ஆகும்ணே’னு சொன்னா, உடனே உஷார் ஆகிடுவோம். ஏன்னா, இதுக்கு மேல பவுன்ஸ் ஆன செக்குகளை வைக்க வீட்ல இடம் இல்லை!''

''ஒரு ஃபிகர் எப்ப ஆன்ட்டி ஆகும்?''

''எப்படிங்க இப்படில்லாம் யோசிக்கிறீங்க? செட்ல மேக்கப் ஆளுங்க எப்போ தலைல வைக்க மல்லிகைப் பூவுக்குப் பதிலா கனகாம்பரத்தை நீட்டுறாங்களோ, அப்பவே அந்த ஃபிகர் ஆன்ட்டி ஆகிடுச்சுனு அர்த்தம்!''

''ராபர்ட் வதேரா, தன் மாமனாரை மிஞ்சுவாரா?''

''எல்லாத்தையும் மிஞ்சி செம ஃபார்ம்ல போயிட்டு இருக்காரு மாப்புள்ள!''

''ரெட் லைட் ஏரியா பக்கம் போயிருக்கீங்களா?''

''போய் வேடிக்கை பார்த்த அனுபவம் இருக்கு. போதுங்க... பேட்டிக்கு ரெட் லைட் போட்ருவோம்!''