Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

•  கல்யாண சர்ச்சைகளைக் கண்டுகொள்ளாமல், சினிமா வாய்ப்புகளையும் ஒதுக்கிவிட்டு வில் வித்தைப் போட்டிகளில் மும்முரமாகிவிட்டார் 'நாடோடிகள்’ அனன்யா. கொச்சியில் நடந்த மாநில அளவிலான வில் வித்தைப் போட்டியில் தங்கம் வென்றவர், பள்ளிக் காலத்தி லேயே வில் வித்தை சாம்பியனாம். அடுத்த ஆண்டு சென்னையில் நடை பெற இருக்கும் தேசிய வில் வித்தைப் போட்டியில் தங்கம் தட்ட இப்போதே கடும் பயிற்சியில் இருக்கிறாராம். டார்கெட்ல அடிங்க!

இன்பாக்ஸ்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

• தெலுங்கு 'தபாங்’ ரீ மேக்குக்குப் பிறகு, பவன் கல்யாண் நடிப்பில் வெளி யான 'கேமராமேன் கங்கா தொராம் பாபு’ படமும் சூப்பர் ஹிட். இதில் பவன் கல்யாணைவிட அதிக சந்தோஷத்தில் இருப்பவர் தமன்னாதான். காரணம், அதிரடி அவசிய ஹிட் தேவைப்படும் நிலையில் இருந்தவர் அவர்தான். தெலுங்கு சினிமாவில் இப்போதைய ஹீரோயின் பஞ்சத்தில் தன் முக்கியத்துவத்தைத் தக்கவைத்துக்கொள்ள இந்த ஹிட் தமன்னாவுக்கு மிகவும் உதவும். பாத்து ரொம்ப நாளாச்சு பாப்பா!

• தங்கள் பாதுகாப்புக்குப் பெண் கமாண்டோக்கள் வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்கள் இரு பெண் அரசியல்வாதிகள். அரசியல் தலைவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் கமாண்டோ பிரிவில் முதன்முறையாகப் பெண்களைஇணைத்துள்ளது மத்திய அரசு. ஆண்களுக்கு இணையாகக் கடும் பயிற்சிகள் பெற்றுவரும் இவர்களைப் பெண் தலைவர்களின் பாதுகாப்புக்கு என பிரத்யேகமாக நியமிக்கலாம் என நாடு முழுவதும் உள்ள பெண் தலைவர்களிடம் கருத்து கேட்டிருக்கிறது மத்திய அரசு. தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் உ.பி. முன்னாள் முதல்வர் மாயாவதியும் 'எங்களுக்கு வேண்டாம்!’ என்று சொல்லிவிட்டார்களாம். இத்தனைக்கும் பெண் கமாண்டோ பிரிவை இந்தியாவிலேயே முதலில் உருவாக்கியது ஜெயலலிதாதான். அப்புறம் ஏன்?

• ''ஹரியானாவில் அதிகரித்துவரும் கற்பழிப்பு மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளை நினைத்து, வெட்கித் தலைகுனிகிறேன்!'' என்று மன வேதனையுடன் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார் ஹரியானா முதல்வர் பூபிந்தர் சிங் ஹுடாவின் மனைவி, ஆஷா ஹூடா. ''கணவர் ஆட்சியாக இருந் தாலும் உண்மையை ஏற்றுக்கொள்ளத் தானே வேண்டும்!'' எனும் ஆஷா, மாநிலத் தின் குழந்தைகள் மற்றும் பெண்கள்   நல கவுன்சிலின் துணைத் தலைவரும் கூட. சாருக்குப் புரியவைங்கமேடம்!

இன்பாக்ஸ்

• 40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு வரவிருக்கிறார் ஆங் சான் சூ கி. 1960-ல் இந்தியாவுக்கான மியான்மர் தூதராக நியமிக்கப்பட்டு டெல்லியில் தங்கிப் படித்த சூ கி, தீபாவளி அன்று இந்தியாவுக்கு வர இருக்கிறார். ஒரு வார கால இந்திய விஜயத்தை இப்போதே எதிர்நோக்கி இருப்பதாக ஆர்வம் தெரிவித்து இருக்கிறார் ஆங். வருக... வருக!

இன்பாக்ஸ்

• ''நான் எனக்கு விதிக்கப்பட்ட கடமையைத்தான் செய்துவருகிறேன். அதற்கு எனக்குக் கிடைத்த பரிசு... கடந்த 21 வருடங்களில் 40 இடமாறுதல்கள்!'' என்று சிரிக்கிறார் அஷோக் கெம்கா ஐ.ஏ.எஸ். ஹரியானா மாநிலத்தில் ராபர்ட் வதேரா சம்பந்தப்பட்ட நில ஒதுக்கீட்டை ரத்து செய்ததன் மூலம் 'நேஷனல் சென்சேஷன்’ ஆன அதிகாரி. ராபர்ட் வதேரா பிரச்னைக்குப் பிறகு மீண்டும் இவருக்கு அளித்த இட மாறுதலுக்கு நாடெங்கும் எதிர்ப்பு கொந்தளித்தது. 'இது பழிவாங்கும் படலம்!’ என ஆவேசம் காட்டுகிறார் அஷோக். பின்னி எடுங்க பிரதர்!

இன்பாக்ஸ்

• இந்தியாவுக்கு எதிரான போட்டி யில் வெற்றி பெற்றதும் பனியனைக் கழட்டி சுழற்றி மைதான வலம் வந்த ஆண்ட்ரூ ஃபிளின்டாஃபை நினைவு இருக்கிறதா? தொடர் காயங்கள் காரணமாக கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஃபிளின்டாஃப் இப்போது பாக்ஸிங்கில் கவனம் செலுத்தி வரு கிறார். நவம்பரில் போட்டிகளில் பங்கேற்கவிருக்கும் ஃப்ளிண்டாஃபின் சிக்ஸ்பேக் போஸ்தான் இப்போது இங்கிலாந்து ஹிட். பாக்ஸிங்ல சட்டையே போட வேண்டாம்!

இன்பாக்ஸ்

• தென்னகத்தில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை, பாலிவுட் ஹீரோயின்களிடம் இருந்து விலகி தேசிய விளம்பர வாய்ப்புகள் குவியும் நடிகை, மும்பையில் வீடு வாங்கும் முனைப்பில் இருக்கும் நடிகை, முழுக்கவே இந்தியில் பேசுவதற்குத் தினமும் டியூஷன் படிக்கும் நடிகை என நித்தம் இலியானா பற்றி தலைப்புச் செய்திகள். ''24 வயதிலேயே 'பர்ஃபி’ படம் மூலம் இந்தியில் எனக்குக் கிடைத்திருக்கும் வெல்கம்... நான் எதிர்பார்க்காதது. இந்தியில் ஸ்ரீதேவி செய்த சாதனைகளைத் தாண்டிப் பேர் வாங்க வேண்டும் என்பதுதான் இப்போது என் கனவு!'' என்று பூரிக்கிறார் இலி. இந்தக் கிளியும் பறந்து போயிடுத்து!