Published:Updated:

இன்று... ஒன்று... நன்று!

இன்று... ஒன்று... நன்று!

பிரீமியம் ஸ்டோரி

ஆனந்த விகடன் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்ணே வணக்கம்!

நான்தான் உங்க இமான் அண்ணாச்சி பேசறேன்...

தீபாவளி நெருங்கிட்டே இருக்குண்ணே... தீபாவளின்னா பட்டாசு இல்லாமலா? பட்டாசுகள்லயே பாதுகாப்பானது புஸ்வாணம்தானே. அந்த புஸ்வாணத்தை நானும் என் பொண்ணும் சேர்ந்து கொளுத்தின கதை ஒண்ணு

இன்று... ஒன்று... நன்று!

இருக்குண்ணே... கதைல காமெடியும் இருக்கும் கருத்தும் இருக்கும்... அதைக் கேளுங்க... மத்தாப்பாச் சிரிப்பீங்க!

தூத்துக்குடில பொறந்து வளந்த நமக்கு சிங்காரச் சென்னைல யாரையுமே தெரியாதுண்ணே. ஒரே ஒரு சொந்தக்காரர் மட்டும் மெட்ராஸ்ல (அப்ப மெட்ராஸ்தானே மக்கா?) இருந்தாரு. சினிமா சான்ஸ் தேடி வந்து இறங்கின உடனே, அவரைத்தான் பார்க்கப் போனேன். அப்ப நடந்த கூத்து தெரியுமாண்ணே? என்னால மறக்கவே முடியாத விஷயம் அது... அடக் கேளுங்களேன்!

திருநெல்வேலியும் தூத்துக்குடியும் ஒண்ணுக்குள்ள ஒண்ணா இருந்த மாவட்டங்கள்ணே. ஆனா, ஒட்டிப் பிறந்த பிள்ளைகளைப் பிரிக்கிற மாதிரி பிரிச்சுப் போட்டாங்க. ஆனாலும், அந்த மண்ணும் மணமும் இப்பமும் ஒண்ணாத்தான் இருக்கு. எங்க நெல்லை மக்களோட பழக்கவழக்கங்களையும் குணத்தையும் கொஞ்சம் காமெடி யாச் சொல்றேன்... கேட்டுக்கிடுங்க!

இப்போ டி.வி. பொட்டில வந்து ஃபேமஸ் ஆகுறதுக்கு முன்னாடியே சின்ன வயசுல பேப்பர்ல வந்து ஃபேமஸ் ஆனவனாக்கும் நானு. அது ஏன் தெரியுமா? ஒரு ஊரையே வெள்ளத்துல இருந்து காப்பாத்திருக்கோம்ல. அந்த வீரதீர சாகசக் கதையைக் கொஞ்சம் காது கொடுத்துக் கேளுங்களேன்... எம் மனசும் குளிரும்ல!

'தலைநகரம்’ படத்துல ரௌடியா நடிச்சிருப்பேன். அப்போ திருந்தி வாழுற என்னை பிரகாஷ்ராஜ் ஆளுக கொன்னு ஆத்துல தூக்கி வீசுவாக. அந்தக் காட்சியில நான் நிஜமாவே உயிரைக் கொடுத்து நடிச்சிருப்பேன். ஆனா, அந்தக் கதை கேக்குறதுக்கே சிரிப்பா இருக்கும். அதைக் கேட்டுக் கை கொட்டிச் சிரிங்கண்ணே... சிரிங்க!

நம்ம திறமையை இந்த உலகம் மதிக்க மாட்டேங்குதேனு சள்ளையா இருக்கீகளே... உங்களுக்குத்தான் இந்த பிட்டு. இப்ப நான் பேசுறது கேக்க உங்களுக்கு சிரிப்புச் சிரிப்பா வருதா? ஆனா, முந்தி ஒரு எஃப்.எம்ல என் குரலைப் பத்தி என்ன சொன்னாங்க தெரியுமா? தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க... அதைத் தெரிஞ்சுக்க, கால் பண்ணுங்கண்ணே... கால் பண்ணுங்க!

1.11.12-ல இருந்து 7.11.12 வரைக்கும் 044- 66808034 ங்கிற நம்பர்ல என்னைக் கூப்பிடுங்க... நாஞ் சொல்றதை ஸ்பீக்கர்ல போட்டுக் கேளுங்க... குடும்பத்தோட கொள்ளுனு சிரிச்சு தீபாவளியைக் கொண்டாடுங்க...

என்ன நாஞ் சொல்றது சரிதானே!

உங்கள்
இமான்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு