பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

•  ''ரதி அக்னிஹோத்ரிதான் என் ரோல் மாடல். அவர் நடித்த 'கூலி’, 'ஏக் துஜே கேலியே’ படங்களை எத்தனை முறை பார்த்தா லும் எனக்கு அலுக்காது. ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் அதில் இருந்து ஏதாவது ஒரு டிப்ஸ் கிடைக்கும்!'' என்று சிலாகித்து இருப்பவர் காஜல் அகர்வால். ஜில்ஜில் ரோல் மாடல்!

இன்பாக்ஸ்
##~##

• 'அழகிரி மகன் நண்பர்களை அழைத்து விசாரணை’ என்ற செய்தி டாப்ஸியை ஏனோ பதறச் செய்திருக்கிறது. இதனால், இப்போது பார்ட்டி, ஷூட்டிங் என்று எதற்கும் தமிழகம் பக்கம் தலைவைப்பது இல்லை வெள்ளாவிப் பொண்ணு. இவரும் தலைமறைவா?

• நவம்பர் 6-ம் தேதி நடக்கவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான முதல் வாக்கினைப் பதிவுசெய்தவர், இப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமா! தேர்தல் நாளுக்கு மிக முன்னதாகவே (12 நாட்களுக்கு முன்) வாக்களித்த அமெரிக்க அதிபர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார் ஒபாமா. ஆல் தி பெஸ்ட்!

• கிங்ஃபிஷர் நிறுவனம் தள்ளாடுவதன் கேயாஸ் தியரி எங்கெல்லாம் எதிரொலிக்கிறது பாருங்கள்... இத்தனை நாட்களாக விஜய் மல்லையாவின் மகனுடன் வளைய வந்த தீபிகா படுகோன், இப்போது அபவுட் டர்ன் அடித்திருக்கிறார். 'அது வெறும் புன்னகை இல்லை... அது ஒரு ஆத்ம பலம். அப்படி ஒரு சக்தி அவருடைய புன்னகைக்கு இருக்கிறது!'' என்று தீபிகா புன்னகைப் புராணம் பாடியிருக்கும் பிரபலம், ஷாரூக் கான். அம்மணி 'சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தில் ஷாரூக்குடன் ஜோடி சேர்ந்ததற்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று நம்புவோமாக. தீபிகா எப்பவும் புன்னகைச்சுட்டே இருப்பார்!

• கடந்த வாரம் 21 வயதைத் தொட்டுவிட்டார் அமலா பால். பிறந்த நாள் கொண்டாட்டத்தில், ''அந்தப் படத்துல சின்னதா ஒரு சீன்ல மட்டுமாவது தலை காட்டியிருக்கலாமேனு தோணுது!'' என்று உருகியிருக்கிறார். அமலாவை இவ்வளவு ஃபீல் பண்ணவைத்த படம் 'பர்ஃபி’. ஸ்வீட் கேர்ள்!

• தனது உடல்நிலைகுறித்து கிளம்பிய வதந்திகளுக்கு தோட்டத்தில் தான் வேலை செய்வது போன்ற படங்களின் மூலம் பதில் சொல்லியிருக்கிறார் ஃபிடல் காஸ்ட்ரோ. ''மரணப் படுக்கையில் இருப்பதாகச் செய்திகள் றெக்கை கட்டுகிறது. ஆனால், என்னைப் பாருங்கள்... எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறேன்'' என அறிக்கை ஒன்றையும் அனுப்பியிருக்கிறார். தோட்டத்தில் வேலை செய்வதுபோல படங்களை வெளியிட்டாலும், தலைவர் எங்கே இருக்கிறார் என்ற தகவல் வெளியாகவில்லை. வெளியே வா தலைவா!

இன்பாக்ஸ்

• டெல்லியில் சனிக்கிழமை துவங்கிய ஃபார்முலா ஒன் இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் சாம்பியன் பந்தயத்தைத் துவக்கிவைக்கச் சென்ற சோனாக்ஷி, நிகழ்ச்சி முடியும்போது இந்திய தேசிய கீதத்தை முழுக்கப் பாடியது பாலிவுட் சேனல்களில் ஸ்க்ரோலிங் நியூஸ். அட ஆண்டவா!

இன்பாக்ஸ்

• தான் 'செம தில் லேடி’ என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துவருகிறார் அனுஷ்கா. மேக்கப் யூனியனில் உறுப்பினர் அல்லாதவரை வைத்து மேக்கப் போடக் கூடாது என்ற தகராறு காரணமாக 'இரண்டாம் உலகம்’ படப்பிடிப்பில் தனக்குத்தானே மேக்கப் போட்டுக்கொண்டார். இப்போது 'அலெக்ஸ்பாண்டியன்’ படப்பிடிப்பிலும் அந்தப் பழக்கத்தைத் தொடர்கிறார். அந்த அழகுக்கு அலங்காரம் எதுக்கு?

இன்பாக்ஸ்

• இறுதியில் ஒருவழியாக பிரியங்கா சோப்ரா வும் அயிட்டம் பாடலுக்கு ஆட ஓ.கே. சொல்லிஇருக்கிறார். சஞ்சய் குப்தாவின் 'ஷூட் அவுட்’ படத்தில் ஆடுவதற்கு ஒப்புக்கொண்டவர், 'பாடல் சும்மா காமாசோமாவென்று இருக்கக் கூடாது. என் கிளாமருக்கு உண்மையான அர்த்தம் நிறைந்ததாக இருக்க வேண்டும்!’ என்று நிபந்தனை விதித்திருக்கிறார். இதனால், அந்தக் குத்துப் பாடலின் 'மாண்பை’ இன்னும் மெருகேற்றும் வேலைகள் நடந்துகொண்டு இருக்கின்றன. கிளாமர் கிராமர் தெரிஞ்ச பொண்ணு!

இன்பாக்ஸ்

• 'டோட்டல் ரீகால்’ பட நாயகி கேட் பெக்கின்சேல்தான் ஹாலிவுட்டில் இப்போது மோஸ்ட் வான்டட் ஹீரோயின். ஒரு நிமிடம்கூட நிற்க நேரம் இல்லாமல் பறந்து பறந்து நடித்துக்கொண்டு இருக் கும் கேட், எத்தனை பெரிய நிகழ்ச்சியாக இருந்தாலும் ஞாயிறு மதியம் என்றால் தவிர்த்துவிடுவார். காரணம், அந்த நேரம் முழுக்க அவரது 13 வயது மகள் லிலி யுடன் கழிக்க மட்டுமே கால்ஷீட். 'பெரிய ஸ்டாராக இருந்தாலும் லிலிக்கு நான் தான் அம்மா. அந்த கடமையை நான் மட்டுமேதான் செய்ய முடியும்!’ என்கிறார் பொறுப்பாக. அம்மம்மா..!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு