Published:Updated:

"ஸ்மைல் ப்ளீஸ்... செவாலியே!"

கி.கார்த்திகேயன்படங்கள் : ஜி.வெங்கட்ராம்

பிரீமியம் ஸ்டோரி
##~##

ஜினி முதல் கார்த்தி வரை... மணிரத்னம் முதல் ராஜேஷ் வரை... தமிழின் எந்த ஸ்பெஷல் சினிமாவுக்கும் 'ஓப்பனிங் பில்டப்’ கொடுப்பவை ஜி.வெங்கட்ராமின் புகைப்படங்கள்தான். சினிமா போட்டோகிராஃபிக்கு புரொஃபஷனல் நேர்த்தியும் தொழில்நுட்ப அலங்காரமும் கொடுத்திருந்தாலும், வெள்ளித்திரை பிரபலங்களைத் தாண்டியும் பிற துறை நட்சத்திரங்களையும் தன் கேமராவுக்குள் அடைத்திருக்கிறார் வெங்கட்ராம். அந்த ஸ்பெஷல் தருணங்களின் நினைவுகளையும் அந்தப் பிரபலங்களின் இயல்புகளையும் இங்கே 'ஷேர்’ செய்கிறார் ஜி.வி.    

 ''விளம்பரங்களுக்கு மட்டும் படம் எடுத்துட்டு இருந்த என் கேரியரை சினிமா பக்கம் திருப்பியது சிவாஜினு சொன்னா நம்புவீங்களா? தொண்ணூறுகளின் ஆரம்பம். அப்போ சிவாஜி வீட்ல இருந்து திடீர்னு அழைப்பு. போய் நின்னா, சிவாஜியை ஸ்டில்ஸ் எடுக்கணும்னு சொல்றாங்க. பயமும் பதற்றமுமா லைட்டிங்லாம் செட் பண்ணி வேலை பார்த்துட்டு இருந்தேன். 'அன்னை இல்லம்’ வீட்டுக்கு நடுவுல ஒரு மாடிப் படி இருக்கும். தேக்குல நல்ல கனமான மாடிப் படிகள். அதுக்கு நடுவுல சிவாஜி சாரை நிக்க வெச்சு க்ளிக் பண்ணலாம்னு ப்ளான். அப்போ அவருக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்லை. அதனால ரொம்ப நேரம் எடுக்காதீங்கனு ஏற்கெனவே சொல்லியிருந்தாங்க. ஆனா, என் நேரத்துக்கு அவர் மாடிப்படியில போய் நின்ன சமயம் லைட்ஸ் சொதப்பிருச்சு. திரும்ப லைட் செட் பண்ற வரை அவர் நின்னுட்டு இருக்க வேண்டாமேனு ஒரு நாற்காலியை எடுத்துட்டு அவருக்குப் பக்கத்துல போனேன். என்னையும் நாற்காலியையும் மாறி மாறிப் பார்த்தவர், கண்ணாலயே 'என்ன?’னு அதட்டலா விசாரிச்சார். 'இல்லை... கொஞ்ச நேரம் ஆகும்போல... அதான் அதுவரை நீங்க நிக்க வேண்டாமேனு பார்த்தேன்’னு சொன்னேன். 'ஓ... கொஞ்ச நேரம்னா ஒரு ஒன்றரை வருஷம் ஆகுமா? போப்பு... உன் வேலையைப் பாரு... அதெல்லாம் நாங்க பார்த் துக்குறோம்’னு சொல்லி அனுப்பிட் டாரு. திட்டுறாரா, செல்லமாப் பேசுனாரானு தெரியாமலே திரும்பி வந்து மடமடனு வேலைகளைப் பார்த்தேன். ஆனா, நாங்க நினைச்சதைவிட நேரம் அதிகமா இழுத்துருச்சு. அப்போ படியிலயே அந்தப் பக்கம் இந்தப் பக்கம் நடந்துட்டு இருந்தவர், ஒருகட்டத்துல பொறுமை இழந்து, 'சித்த நேரம்தான் ஆகும்னு சொன்னியே வெங்கட்டு... இப்படி என்னை அந்தரத்துல நிக்கவெச்சு அல்லாட வெச்சுட்டியே வெங்கட்டு... என் மேல உனக்கு என்ன கோபம் வெங்கட்டு’னு ராகம் போட்டுப் பாட ஆரம்பிச்சுட்டார். ரொம்ப ஜாலியான மனுஷர். அப்புறம் பிரபுவை வெச்சும் போட்டோ ஷூட் பண்ணேன். இப்போ சமீபத்துல சிவாஜி சார் பேரன் விக்ரம் பிரபுவை வெச்சும் ஷூட் பண்ணேன். இப்போ வீட்ல சிவாஜி சாரும் இல்லை... அவர் நின்னு போஸ் பண்ண மாடிப்பாதையும் இல்லை.

"ஸ்மைல் ப்ளீஸ்... செவாலியே!"
"ஸ்மைல் ப்ளீஸ்... செவாலியே!"

ந்த வருஷக் கடைசியில் இளையராஜா கனடாவுல ஒரு இசை நிகழ்ச்சி நடத்துறாரு. அதுக்காக அவரோட போட்டோ ஷூட். இதுவரை அவரைப் பார்க்காத லுக்ல காட்டணும்னு வொயிட் அண்ட் வொயிட்ல கோட், சூட் போட்டுக்க வெச்சோம். '20 வருஷத்துக்கு முன்னாடி கோட் போட்டது. இப்பவும் நல்லாத்தான் இருக்கு’னு ரொம்ப ஹேப்பி ஆகிட்டாரு. காலை மடக்கி ஸ்டைலா நிக்கிறது, கால் மேல கால் போட்டுக்கிறதுனு நாங்க எதிர்பார்த்ததுக்கும் மேல பிரமாதமா போஸ் கொடுத்தாரு. அவரே ஒரு பிரமாதமான போட்டோகிராஃபர். பெரும்பாலும் நிலப்பரப்பு, சூரிய உதயம் - அஸ்தமனம்னு அவர் எடுத்த படங்களைப் பத்தி என்கிட்ட பேசிட்டு இருந்தார். பழகிட்டா குழந்தை அவர்!

"ஸ்மைல் ப்ளீஸ்... செவாலியே!"

ரு நகைக் கடை விளம்பரத்துக்காக மும்பையில் வெச்சு அமிதாப்போட போட்டோ ஷூட். அறுபது வயசுக்கு மேல ஆச்சு. ஆனா, ஷூட் நடந்த மூணு மணி நேரமும் கொஞ்சம்கூட எனர்ஜி குறையாம ஓடிக்கிட்டே இருந்தார். மூணு மணி நேரம், ஏழு செட் காஸ்ட்யூம்கள், ரெண்டு லொகேஷன்... எல்லாத்தையும் சமாளிச்சு ஈடு கொடுத்தார். ஷூட்லாம் முடிஞ்சதும் 'வெங்கட் என்னை ரொம்ப அழகா காமிச்சிருந்தார்... தேங்க்ஸ்’னு ட்வீட் பண்ணிஇருந்தார். ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.

"ஸ்மைல் ப்ளீஸ்... செவாலியே!"

குஜராத்ல நரேந்திர மோடி வீட்ல வெச்சே அவரை போட்டோஸ் எடுத்தேன். 'சி.எம். ரொம்ப பிஸி... அரை மணி நேரம்தான் அதிகபட்சம். நேரம் முடிஞ்சதும் சார் எதுவும் சொல்ல மாட்டார். ஆனா, நாங்க அவரைக் கூட்டிட்டுப் போயிருவோம்’னு மோடியோட பாதுகாப்பு அதிகாரிகள் சொல்லிட்டாங்க. மோடி வந்தார். கொஞ்சம் டல்லான காஸ்ட்யூம்ல இருந்தார். நான் எதுவும் சொல்லாம சில க்ளிக்ஸ் எடுத்துட்டு அதை அவர்கிட்ட காமிச்சேன். 'குட்’னு மட்டும் சொன்னார். 'குட் இல்லை சார்... வெரி பேட்... பளிச் காஸ்ட்யூம் இருந்தா, போட்டோஸ் ரொம்ப ரிச்சா இருக்கும்’னு சொன்னேன். பத்து செகண்ட் யோசிச்சவர் என்னைக் கூட்டிட்டுப் போய் அவர் வீட்டு வார்ட்ரோப் முன்னாடி நிறுத்தி, 'எந்த காஸ்ட்யூம் சொல்லுங்க... நான் போட்டுட்டு வர்றேன்’னு சொன்னார். ஹேர்ஸ்டைல்ல ஆரம்பிச்சு ஷால் வரைக்கும் நான் சொன்னதைச் செஞ்சார்.

வ்வொரு ஷாட்டும் பார்க்கப் பார்க்க ஹேப்பி ஆகிட்டார். இடையிடையே வந்து அப்பெர்ச்சர்னா என்ன, லைட்டிங் எப்படிப் பண்றோம்னு நாங்க வேலை பார்க்கிறதையும் பார்த்து சந்தேகங் கள் கேட்டுத் தெளிவாக்கிக்கிட்டார். 'அவசியம் லன்ச் சாப்பிட்டுத்தான் போகணும்’னு சொல்லி, எங்களையும் அவரோட சாப்பிடவெச்சார். இது எல்லாம் முடிஞ்சு மொத்தமா நாலு மணி நேரம் கழிச்சு நாங்க கிளம்புறப்போ, அந்த செக்யூரிட்டி கள் எங்களைப் பார்த்த பார்வையில், அவ்வளவு கொலை வெறி!

.ஆர்.ரஹ்மான் எப்பவும் எனக்கு ஸ்பெஷல். நான் கேமரா பட்டன் க்ளிக் பண்ணப்போறேன்னு தெரிஞ்சதும் ஒரு சின்ன புன்னகையை உதட்டுல வெச்சுக்குவார்... சூப்பரா இருக்கும். அவருக்குத் தொப்பிகள்னா அவ்ளோ இஷ்டம். அதிலும் இமய மலை அடிவாரப் பகுதிகளில் இருக்கும் தொப்பி களின் பெரிய கலெக்ஷனே இருக்கு அவர் கிட்ட.

"ஸ்மைல் ப்ளீஸ்... செவாலியே!"
"ஸ்மைல் ப்ளீஸ்... செவாலியே!"

னிமொழிக்கு ரொம்பக் கூச்ச சுபாவம். அதிலும் கேமரா முன்னாடி அந்தக் கூச்சம் டபிள், ட்ரிபிள் ஆகிடும். ஸ்பெஷல் போட்டோ ஷூட்டுக்கு ஓ.கே. சொல்லிட்டாங்களே தவிர, நாங்க போய் நிக்கிற வரை அவங்க தயார் ஆகவே இல்லை. எப்பவும்போல சாதாரண கைத்தறிச் சேலையில் வந்து நின்னாங்க. டிசைனர் காஸ்ட்யூம் போட்டுக்கிறதுக்கு அவங்களைச் சம்மதிக்கவைக்கிறதே எங்களுக்குப் பெரிய போராட்டமா இருந்துச்சு. அப்புறமும் போஸ் கொடுக்கவே இல்லை. சகஜமா பேச்சு கொடுத்துட்டே அவங்க இயல்பா இருக்கிறப்ப டக் டக்னு க்ளிக்ஸ் அடிச்சோம்!

"ஸ்மைல் ப்ளீஸ்... செவாலியே!"

ஜித் சும்மா வந்து நின்னாலே ஃப்ரேம்ல செம கெத்து வந்திரும். சட் சட்னு நிறைய போஸ் கொடுப்பார். ஷூட் முடிச்சதும் ப்ரிவியூ பார்க்காமலேயே, 'அந்த 17-வது க்ளிக் நல்லா வந்திருக்கும் பாருங்க வெங்கட்’னு சொல்வார். சொன்ன மாதிரியே அது பிரமாதமா இருக்கும். 'எப்படி அஜித்’னு கேட்டா, 'கான்ஃபிடன்ஸ் பாஸ்’னு சொல்லிச் சிரிப்பார். அது... அஜித்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு